72. மறக்கவியலா இன்ப வெள்ளம்!

Tamil-Daily-News-Paper_23010981083.jpg-gg

மறக்கவியலா இன்ப வெள்ளம்!

***

வெள்ளம் பலர் வாழ்வில் வேதனை
உள்ளம் வெதும்பத் துன்பச்  சோதனை
வெள்ளம் கொள்ளும் பெரும் கள்ளம்
பள்ளம் நோக்கித் தானே துள்ளும்.
***
தள்ளும் ஊரையே அழித்து முழுகும்
துள்ளும் குழந்தைகள் கப்பலிட மகிழும்
வெள்ளம் என்றதும் எனக்கும் நினைவில்
வள்ளத்தின் பயணம் வரும் நிறைவில்.
***
அன்று இலங்கைத் தேயிலைத் தோட்டத்தின்
நின்றாளும் அதிகாரியாக என் துணைவர்
வென்றது வெள்ளம் காலு கங்கையால்
தெருவினை மேவிப் பாய்ந்ததே கடல்!.
***
தேயிலைக் கொழுந்து மூட்டைகள் தொழிற்சாலைக்குத்
தேவதூதர்களாய் தோணிக்காரர்கள் உதவிக்கு, கொழுந்துக்
கோணிகள் தோணியில்! நாமுமதில் பயணிகளாய்
தோற்றம் காஷ்மீரப் படகுப் பயணமாய்!
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-1-2016.

வேறு

காத்திருக்கும் தோணிகள்…

பாத்திரமும் பசித்த வயிறும் காய
ஆத்திரமுற்ற அரசின் அவசரகால நிலையால்
நேத்திரம் சோர மீனவர் கரையிலேஇ
காத்திருக்கும் தோணிகள் மீன் பிடிக்கவென.

உயிருக்கும் வாழ்வுக்கும் உத்தரவாதமின்றி
உற்றம் சுற்றம் பார்க்காது மக்கள்
ஊரைஇ நாட்டை விட்டு வெளியேற
உதவும் குழுக்களுடன் காத்திருக்கும் தோணிகள்.

களுகங்கை பெரு மழையால் பெருகியது.
கடலாகப் பாதைஇ தோணியில் பயணம்.
காலையும் மாலையும் தேயிலைக் கொழுந்துகளை
காத்திருந்த தோணிகளில் தொழிற்சாலைக்கு ஏற்றினர்.

கழுத்துறை மாவட்ட கொக்கேனைத் தோட்டத்தில்
கணக்கற்று வெள்ளம் பெருகும் வேளையில்
காலையும் மாலையும் தோணிகளில் நாமும்
காஷ்மீரம் போல் சுற்றுலா காத்திருந்த தோணிகளில்.

6-11-2008

http://www.vaarppu.com/padam_varikal.php?id=22

Big Blue Divider

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  பிப் 29, 2016 @ 02:07:38

  மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க. தங்களது இன்ப வெள்ளத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  மறுமொழி

 2. ramani
  பிப் 29, 2016 @ 03:39:56

  எங்களுக்கு உங்கள் கவிதை…
  மறக்க வியலா இன்ப வெள்ளம்

  இரண்டாம் சீரின் இறுதி வார்த்தை
  சாதனை என்பதை விட சோதனை என
  இருந்திருக்கலாமோ என நினைத்தேன்

  வாழ்த்துக்களுடன்…

  மறுமொழி

 3. Bagawanjee KA
  பிப் 29, 2016 @ 05:26:15

  அந்த அனுபவம் வாழ்க்கையில் இனி வருமா ?

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  பிப் 29, 2016 @ 12:17:13

  அருமை மீண்டும் வரும் சகோ….

  மறுமொழி

 5. செல்வக்குமார்
  மார்ச் 01, 2016 @ 08:54:07

  கவிதை போலவே .படமும் அழகு…

  மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:04:27

  Dharma Ktm :- arumai
  Unlike · Reply · 1 · January 9 at 1:33pm 2016

  Vetha Langathilakam :- மிக நன்றியும் மகிழ்வும் சகோதரா.
  முகநூலில் சிறிது மினுங்கியதும்
  பலர் ஒதுங்குவார்கள்……வாழ்த்து வாங்க நெருங்குவார்கள்.
  Like · Reply · 1 · January 10 at 1:26pm 2016

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:06:43

  நக்கீரன் மகள்:- சொல்லாடல் அழகு
  Like · Reply · January 9 at 3:02pm

  Vetha Langathilakam:- மகிழ்ந்தேன் தங்கள் கருத்தால்.
  மனம் நிறைந்த நன்றி சகோதரி
  Like · Reply · 1 · January 9 at 3:31pm 2016

  சி வா :- பார்ரா.. எங்கமம்மிக்கே வா.. ஹா ஹா ஹா… நக்கீரன் மகள் அவர்களே… நல்லா வருவிங்ய தாயி…
  Like · Reply · 1 · January 9 at 8:12pm

  சி வா :- வரிகளை வாசிக்கும் போது
  தங்களின் அனுபவங்கள் காட்சிகளாய் படர்கிறது..

  பற்றுகிறது..
  அருமை வேதாம்மா.. உங்களுக்கே உரிய பாணியில் நல்லதோர் படைப்பு..
  Unlike · Reply · 2 · January 9 at 8:14pm 2016

  Vetha Langathilakam :- காலு கங்கைக் கரையோரமாகத் தொழிற்சாலை..
  கங்கையின் போக்கில் போய் கொழுந்தை இறக்குவார்கள்…

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:10:09

  Rathy Mohan :- வெள்ளமும் தேயிலைத்தோட்டமும் தந்து நின்ற அழகு வரிகளினூடு …
  Unlike · Reply · 1 · January 10 at 1:32pm 2016

  Vetha Langathilakam:- மிக்க நன்றியும் மகிழ்வும் தங்கள் அன்பான வரிகளிற்கு
  Like · Reply · about a minute ago 20-4-16

  குமுதினி ரமணன் :- அருமை.
  Unlike · Reply · 1 · January 10 at 11:14pm

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் தங்கள் அன்பான வரிகளிற்கு
  Like · Reply · a few seconds ago 20-4-16

  மறுமொழி

 9. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:11:39

  Subi Narendran and இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி like this.
  Comments
  இரா. கி இராஜேந்திரன்.கிருஷ்ணசாமி :- மலரும் வெள்ள நினைவுகள் அருமை
  Unlike · Reply · 1 · 11-1-16

  Vetha Langathilakam:- ஆம் இன்பம் தோய்ந்த நினைவுகள்.
  மிக்க நன்றியும் மகிழ்வும் தங்கள் அன்பான வரிகளிற்கு
  Like · Reply · 11-1-16

  Subi Narendran :- படமும் கவிதை வரிகளும் அழகு.
  Like · Reply · 1 hr

  Vetha Langathilakam :- ஆம் இன்பம் தோய்ந்த நினைவுகள்.
  மிக்க நன்றியும் மகிழ்வும் தங்கள் அன்பான வரிகளிற்கு
  Like · Reply · 11-1-16
  Like · Reply · January 11 at 8:38pm 2016

  Maniyin Paakkal :- அருமை. சொல்லாடல் சிறப்பு
  Like · Reply · 12-1-16

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் தங்கள் அன்பான வரிகளிற்கு dear Maniyin Paakkal
  Like · Reply · 12-1-16

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: