437. தன்னம்பிக்கை

 

10393744_10206330765882408_6687521605342082469_n.jpg2

தன்னம்பிக்கை

***

தன் உறுதிப்பாடு, தன் விசுவாசம்,
தன் நம்பிக்கை தோல்வி தோற்பதாம்.
தன் சிறகுகளை நம்பிப் பறக்கும்
தன்னம்பிக்கைக்குக் குருவிகள் ஓர் எடுத்துக்காட்டு.
அறிவெனும் ஆயுதம் நன்கு தீட்டு.
குறியாக ஆகும் உன் காலெட்டு.
கதிரவன் கடமையைக் கருத்தாக எண்ணு.
கதியற்றவன் என்று யாருமில்லைக் கண்ணு.
***
தன்னம்பிக்கை யானையின் தும்பிக்கைக்குச் சமம்.
இன்னொரு கையாகி எண்ணம் பல கைகளாகும்.
குதித்தோடிக் காடுகள், தடைகள் தாண்டும்
நதியும் கருமத்தின் சிரத்தை பாடும்.
சோர்வை அகற்று! இலட்சியம் பெருக்கு!
பார்வையைச் சிகரத்திற்கு உயர்த்து! சாதனையாக்கு!
நெம்புகோலின் தரம் நம்பிக்கை வாழ்விற்கு.
சம்பிரதானம் (கொடை) வாழ்வை செயித்தேகலாம் வெற்றிபுரத்திற்கு.
***
அங்கீகாரம், அணைப்பு, அன்பு, பாசம்
நங்கூரமாகி நம்பிக்கைக் கொடி உயரும்.
அகங்காரம், வெறுப்பு, அலட்சியம், கோபம்
சங்காரம் செய்யும் நம்பிக்கை ஆணிவேரை.
இலையுதிர்க்கும் மரங்களின் பெரும் காத்திருப்பு
இலை துளிர்த்தலுக்காய் அழகிய பூத்திருப்பு
கலைமிகு எடுத்துக்காட்டு ஆறறிவு மனிதனுக்கு.
விலையாம் தன்னம்பிக்கை வளருங்கள் உயர்வுக்கு.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
17-2-2016
1925266_482063001917264_1313776901_n-p

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  மார்ச் 16, 2016 @ 05:17:58

  வாழவேண்டிய கலையை கவிதையாய் சொல்லி விட்டீர்கள் 🙂

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மார்ச் 17, 2016 @ 08:36:14

  தன்னம்பிக்கை வரிகள் அருமை சகோ

  மறுமொழி

 3. selvaa
  மார்ச் 19, 2016 @ 05:13:37

  அங்கீகாரம், அணைப்பு, அன்பு, பாசம்
  நங்கூரமாகி நம்பிக்கைக் கொடி உயரும்.///
  அருமை அம்மா..

  மறுமொழி

 4. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 07:12:31

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:27:31

  Mohan Nantha :- தன்னம்பபிக்கைக்கு தாங்களே ஓரெடுத்துக்காட்டல்லவா. தன்னகத்தே நம்பிக்கைவைத்து,தன்கரம்கொண்டே தரம்மிக்கவிதைபலபுணைந்து, தரணிதனை எட்டிவிட்டீர்களல்லவா. அம்முயற்சிதனை எப்படிப்புகழ்வேன். வார்த்தைகள் எழவில்லை என்னுளமதில். வளரெட்டும் தங்களின் கவிதைஏடுகள்.
  Like · Reply · February 18 at 6:25pm

  Vetha Langathilakam :- மிக மிக நன்றி சகோதரா.
  எத்தனை அவமாளங்கள், எத்தனை அலட்சியங்கள்
  அத்தனையும் தாண்டி வருதற்கு இந்தத் தன்னம்பிக்கையே
  கைத்தடியாக இருக்கிறது. மிக மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு.
  இறையாசி நிறையட்டும். கருத்து (கருத்தெழுதல்)
  ***

  விழுமியோரிpன் கருத்துப் பட்டாசு
  எழுத்துக்கு ஒரு பண்டிகை.
  அழுத்தும் நல்லாணிக் கருத்து
  அழுகச் செய்யும் பொய்களை
  விழும் கருத்துமழையால் எழுத்தாளன்
  செழுமையுறுவான் – வேர் பரவும்.
  மெழுகும் நற் கருத்து
  உழுது மனம் பண்படுத்தும்.

  ***

  அழுக்காறு நற் கருத்தை
  எழுத என்றும் அனுமதிக்காது.
  எழுது வழுது பிழைகளை.
  வழுநிலை எழுதினால் தோழமை
  பழுதாகும் என்ற பயமேன்!
  எழுது கோல் தூரிகையால்
  ஒழுகும் கருத்து வண்ணம்
  பழுதற்றால் நன்மை பயக்கும்.

  ***

  எழும் புகழும் கருத்துகளும்
  முழுதாக்கும் வரலாற்று மாளிகையை.
  விழுதாகும் கருத்துப் பூக்கள்
  தொழும் நிலையையும் உருவாக்கும்.
  தழுவும் உயர்வுக் கருத்து
  முழுதான உண்மையில் எழட்டும்.
  இழுத்து நீள்வது நேர்மையே.
  இழுக்கு மழுப்பும் கருத்து!.

  ***

  ( வழுது – பொய். வழுநிலை – சொல் தவறாக வரும் தன்மை.
  மழுப்பும் – தாமதப் படுத்தல், ஏமாற்றுதல்)

  ***

  பா ஆக்கம்
  பா வானதி வேதா. இலங்காதிலகம்.
  டென்மார்க்
  8-7-2015

  மறுமொழி

 6. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:30:24

  Puducherry A. Pasupathy //அங்கீகாரம், அணைப்பு, அன்பு, பாசம்
  நங்கூரமாகி நம்பிக்கைக் கொடி உயரும்.//
  Unlike · Reply · 1 · February 19 at 10:34am 2016

  Vetha Langathilakam:- Nanry sir….
  Like · Reply · 1 · February 19 at 11:13pm
  குமுதினி ரமணன் மிகவும் அருமையான நம்பிக்கை வரிகள். மனம் உறுதியில் நிறைவதுபோல் உணர்வு பெறுகிறது.
  Like · Reply · February 19 at 11:07am

  Vetha Langathilakam :- மிக நன்றி மகிழ்ச்சி குமுதினி ரமணன் கருத்திடலிற்கு.
  Like · Reply · February 19 at 11:14pm 2016

  Rathy Mohan :- உயர்வுக்கு வேண்டும் தன்னம்பிக்கை ….. வை வை உன்னில் நம்பிக்கை வை…
  Like · Reply · February 19 at 6:39pm

  Subajini Sriranjan :- நம்பிக்கைக்கு குருவிகள் எடுத்துக் காட்டு….
  அருமையான பா
  Like · Reply · 19-2-2016

  Vetha Langathilakam :- எத்தனையோ எடுத்தக் காட்டுகள் உண்டு.
  அப்துல் கலாம்.அடுத்தொரு சிறப்பு.
  மிக நன்றி மகிழ்ச்சி சுபா கருத்திடலிற்கு.
  Like · Reply · 19-2.2016

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:33:14

  Maha Farwin :- அழகிய பதிவு
  Unlike · Reply · 1 · 19-2-2016

  Vetha Langathilakam:- உங்கள் கருத்துகள்
  எங்களுக்கு ஊக்கம்.
  மகா பர்வின் மிகுந்த மகிழ்ச்சி
  இனிய நன்றி.
  Like · Reply · Just now 19.2.2016

  Sivaraman Krishnapillai :- விண்ணைத் தாண்டும் தன்நம்பிக்கை . அருமை
  Unlike · Reply · 1 · 19-2-2016.

  Vetha Langathilakam :- ஆம் சகோதரா… கருத்திற்கு மிக்க நன்றியுடன் மகிழ்வும்.
  நல்ல கருத்துகள் மேலும் எழுதத் தூண்டும்.
  Like · Reply · 19-2-2016.
  Sivaraman Krishnapillai :- மலர்ந்து மணம்பரப்புக உங்கள் படைப்புகள், ரசிக்க நாம் எப்போதுமே தயார்
  Unlike · Reply · 1 · 11 hrs 20-2-2016

  Sivaraman Krishnapillai :- மலர்ந்து மணம்பரப்புக உங்கள் படைப்புகள், ரசிக்க நாம் எப்போதுமே தயார்
  Unlike · Reply · 1 · 11 hrs

  Sivaraman Krishnapillai :- மலர்ந்து மணம்பரப்புக உங்கள் படைப்புகள், ரசிக்க நாம் எப்போதுமே தயார்
  Like · Reply · February 20 at 11:41am

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:36:59

  Ratha Mariyaratnam:- நம்பிக்கையே வாழ்க்கை
  Like · Reply · 10 hrs 19-2-16

  Vetha Langathilakam:- கருத்திற்கு மிக்க நன்றியுடன் மகிழ்வும்.RATHA.
  Like · Reply · Just now 20-2-16

  Kumarasamy Nagendiran :- வாழ்த்துக்கள் அக்காவிற்கு

  Like · Reply · February 20 at 11:46am ·

  RRsel Vam :- நம்பிக்கையே வாழ்க்கை
  Like · Reply · 40 mins 20-2-2016

  Vetha Langathilakam:- கருத்திற்கு மிக்க நன்றியுடன் மகிழ்வும். RRsel Vam
  Like · Reply · Just now 20-2-16
  Vetha Langathilakam You, Kannadasan Subbiah, Maha Farwin Senthil kumar.and Bala chandar others like this.
  Kannadasan Subbiah :- அருமை சகோதரி
  February 17 at 6:00pm · Like 2016

  Vetha Langathilakam :- Mikka nanry sakothara. Makilchchy.
  Just now · Like 20-2-16
  Like · Reply · February 20 at 1:53pm

  Sujatha Anton:- தன்னம்பிக்கை யானையின் தும்பிக்கைக்குச் சமம்.
  இன்னொரு கையாகி எண்ணம் பல கைகளாகும்
  அருமை. நமக்குள் இருக்கும் பலமே தன்னம்பிக்கை. வாழ்க தமிழ்.!!
  Like · Reply · February 21 at 10:52am

  Vetha Langathilakam கருத்திற்கு மிக்க நன்றியுடன் மகிழ்வும் Sujatha.
  Like · Reply · February 22 at 10:07am 2016

  மறுமொழி

 9. கோவை கவி
  ஏப் 20, 2016 @ 08:37:49

  Kanagaretnam Muralitharan :- நம்பிக்கையே வாழ்க்கை
  Unlike · Reply · 1 · February 22 at 4:29pm 2016

  Vetha Langathilakam மிக்க நன்றியுடன் மகிழ்வும்..Dear.K.M….
  Like · Reply · February 22 at 7:04pm

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: