60. காதல்.

12onru 16

 

காதல்.

பிரிய அன்பின் பரிமாறல்

பருவ உணர்வின் தழுவல்

உருவின் அழகு மயக்கல்

மருவும் அறிவின் ஈர்த்தல்

இருவழிக் கூதல் ஆகிடில்

மருவும் அற்புதக் காதல்.

உருகும் புலன் ஐந்தும்

பருகும் தாகம் காதல்.

¤¤¤

எய்வது மன்மத அம்பாம்

உய்யுமுலகு இன்பக் காதலால்.

செய்யோனெனச் சுடரும் காதலியல்

தொய்யாது ஒழுக்கவியல் வேலியில்.

பொய்ம்மையில் இறக்கும் காதல்.

தூய்ம்மைச் சுகந்தப் பன்னீர்.

கொய்யகம் வாழ்விற்குக் காதல்

தெய்வீகச் சரணம்! சமர்ப்பணம்!

¤¤¤

கோர்த்திடும் காதல் நர்த்தனம்

சேர்த்திடும் புதுதுணர்வுக் கீர்த்தனம்.

நேர்த்தியாய் கவிதைப் பாவனம்

வார்த்திடுவார் காதல் சங்கீர்த்தனம்.

கொடுத்தலும் வாங்குதலும் பிரதான

துடுப்பாகும் பண்டமாற்றுத் தனம்.

முதுமையென்ன இளமையென்ன

முத்தான பொதுமையாகும் நேச வனம்.

***

12553082_979586658788855_3898262350329661204_n

ssssssss-c

73. இது இந்திரலோகமோ!….

12232937_10206982346854325_3621954402400425501_o

 

இது இந்திரலோகமோ!….

***

புலம் வெளித்த போது நன்கு
நிலம் தெரிந்தது மா தூவியதாக.
வலம் வரும் சிறுவர்கள் பனியை
நிலத்தில் வீசியது போல் சிறு
தூவானம் போல், வெள்ளைத் தூறல்கள்,
தூறல்கள் சிறு துளி பெருவெள்ளமாக
போர்வை இட்டது வெள்ளைக் கம்பளம்.
பார்க்கும் இடங்கள் வாகனங்கள் அனைத்தும்.
சீர்மிகு வெண்மை! பனி டென்மார்க்கில்!
இது இந்திரலோகமோ! பாதை மூடலை
இயந்திரம் வந்து உப்புத் தூவியது.
வெளியே போவதா!….ம்க்கும்! குளிர்!….
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
8-1-2016
***
Today also snow….1-3-2016
***
16161859-

Next Newer Entries