442. இளவேனிலே வா!

2512_10200423865136381_923791103_n

இளவேனிலே வா!

***

கசந்த பனிக்காலம் மறைந்து இனிய
வசந்தருது இதம் தரும் பசுமை
வசந்த காலம் இளவேனிலாம், சித்திரை
வரும் பின் வைகாசி வரை.
கனவுகள் பலவற்றின் திறவு கோல்.
கனதியாகும் வறுமை தழுவும் மக்களிற்கு
கலக்கும் அதிஷ்டத்தோடு நல்வரவாகட்டும்!
கந்தைத் துணி மாற்றும் புதுவருடமே!
***
புத்தாடை புதுப் பொங்கல் பலகாரம்
புத்திர செல்வங்கள் உறவுகளோடு நாம்
சித்தமினிக்கக் கொண்டாடும் சித்திரையே வருக!
சிறப்பகள் பல கொண்டு வருகவே!
முற்றத்தில் பொங்கல் சூரிய வழிபாடு
சுற்றங்களிடம் புதிதாகச் செல்லல், அவர்கள்
குற்றமின்றி எம்மிடம் வருகையென மாதம்
முற்றும் கலகலப்பு! கோலாகலச் சித்திரையே!
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
1-4-2016

சித்திரையே வா

தத்தரிகிட தத்தரிகிட துன்முகியே
தத்தளிக்கும் நம் மக்கள்
தித்தரிகிட தித்திக்க வாழ
சித்திரையே சிறக்க வா.

அத்தமிக்காமல் நம்முரிமை நிலைக்க
அத்தியாயம் புதிதாயெழுதி உன்
முத்திரை பதிக்க வா
முத்தமிழும் சிறக்க வா.

உத்தம உழவர் சிறக்க
முத்தான இயற்கை செழிக்க
பித்தன் திருடன் பயமழிந்த
உத்தம வாழ்வு தா.

கெட்ட சிந்தனை மனிதரை
திட்டமாய்த் திருத்த வா
கட்டான அன்பில் திளைக்க
இட்டமுடன் சித்திரையே வா

பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
14-4-2016

 
karthikai oli- 2b

16 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  ஏப் 15, 2016 @ 01:38:25

  புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 2. ranjani135
  ஏப் 15, 2016 @ 03:11:11

  இந்தப் புது வருடம் உங்களுக்கு பல இனிமைகளை கொண்டு வரட்டும், சகோதரி. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

  மறுமொழி

 3. Arrow Sankar
  ஏப் 15, 2016 @ 04:02:01

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  மறுமொழி

 4. yarlpavanan
  ஏப் 15, 2016 @ 07:40:28

  இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

  மறுமொழி

 5. கோமதி அரசு
  ஏப் 15, 2016 @ 07:59:45

  புது வருடக் கவிதை மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 6. முனைவர் ஜம்புலிங்கம்
  ஏப் 15, 2016 @ 08:19:49

  இனிய நல்வரவு.

  மறுமொழி

 7. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஏப் 15, 2016 @ 15:27:46

  அருமை இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் சகோ

  மறுமொழி

 8. கோவை கவி
  ஏப் 24, 2019 @ 07:53:47

  Gomathi Muthukumar:- நன்று அக்கா
  2016
  Vetha Langathilakam :- மிகுந்த மகிழ்வுடன் இனிய நன்றி சகோதரி..
  2016

  Subajini Sriranjan :- இளவேனிற் காலமே வா…..
  வரவேற்போம்
  அருமையான வரிகள்
  2016
  Vetha Langathilakam :- மிக நன்றி சுபா கருத்திடலிற்கு.
  தமிழ் கவிதைப் பூங்காவின் வர்ணம் தலைப்புக் கவிதை
  முதலாமிடம் பெற்றது மகிழ்வாக உள்ளது. …See More
  Edit or delete this
  2016
  Rathy Mohan :- அழகான வரிகள்
  2016
  Vetha Langathilakam :- மிக நன்றி Rathy Mohan கருத்திடலிற்கு. மகிழ்ச்சி.
  2016

  மறுமொழி

 9. கோவை கவி
  ஏப் 24, 2019 @ 07:55:05

  Sujatha Anton :- கனவுகள் பலவற்றின் திறவு கோல்.
  கனதியாகும் வறுமை தழுவும் மக்களிற்கு
  கலக்கும் அதிஷ்டத்தோடு நல்வரவாகட்டும்!
  கந்தைத் துணி மாற்றும் புதுவருடமே!
  மலர்க புதிய வருடம். அருமை.கவிநயம்.
  2016
  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி சுஜாதா
  கருத்திடலிற்கு.
  2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: