444. மனிதாபிமானம்.

11949468_878866778861210_5900385909451589937_n

 

மனிதாபிமானம்.

***

புனிதமுடை அன்பு, தன் மதிப்பு
புகழுடை அறிவு, உள்ளக் களிப்பு
வனிதமுடை பாசம், பற்று, உயரெண்ணம்.
மனிதனின் அபிமானம் நன் மதிப்பு
இனிய நன்மையுடை மனிதாபிமான உணர்வு.
அனிதமான உயிர்களிற்குப் பலன் குவிவு.
கனிவு கருணையால் நிகழும் பகிர்வு.
கனியாத மனதில் முதிராது கனிவு.
***
அழும் குழந்தைக்கு அன்பு அணைப்பு.
விழும் மனிதருக்கு ஆதரவு இணைப்பு.
ஆழ்ந்திடும் மக்களுக்குக் கொம்பாகப் பிணைப்பு.
சூழும் துன்பங்கள் துடைக்கும் நினைப்பு.
அகதியாக வந்தோருக்கு ஆதரவு தந்தது.
அன்பாக இருப்பிடம் மொழியுறவு தந்தது.
அபிமானம் எம்மில் வைத்த டென்மார்க்கது
அளவற்றது என்றும் எம் நன்றியது.
***
அன்னை திரேசா, இளவரசி டயானா
அன்ன பலர் உன்னத இடமெடுத்தார்.
இன்னும் புலம் பெயர் மக்களின் இன்னமுத
மனிதாபிமானத்தால் ஏராளமான மக்கள்
இலங்கையிலும் மறுவாழ்வு பெற்று உயர்கிறார்.
உலகமே மனிதாபிமானத்தால் சிறந்து உயிர்க்கிறது.
மனிதம் வன்முறையை, குண்டை மறந்து
மனிதநேயம் பெருக்கிச் சிறந்து வாழட்டும்.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
7-2-2016.
blue-line
Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  ஏப் 21, 2016 @ 01:51:28

  நாம் மறக்கவேண்டிய, ஆனால் மறக்கமுடியாத ஒன்று கவிதையாகியுள்ளதைக் கண்டேன். மனம் கனத்தது.

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஏப் 21, 2016 @ 11:51:03

  புகைப்படம் கண்டு மனம் கசிகின்றது சகோ மனிதநேயம் தளைக்க வேண்டும்

  மறுமொழி

 3. JAYAKUMAR K
  ஏப் 21, 2016 @ 15:24:00

  மனம் கனக்கிறது

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: