445. திண்ணை

thinnai

 

திண்ணை

***

திண்ணை மரபு வீடுகளில் உள்ளது.
கண்ணை முடிச் சாயும் மேடையிது.
திண்ணைப் பள்ளிக் கூடம், பஞ்சாயத்து
கண்ணைத் திறக்கும் மேடை, குந்து.
***
நீண்ட பயணக்காரர், வழிப்போக்கரும் தங்கி
உண்டு ஆறிப் பயணம் தொடருவார்.
மீண்டு இரவுத் தங்கலிற்கும் பயனாகும்.
திண்டாடும் பிரச்சனைகளிற்கு நீதிமன்றமும் ஆனது.
***
திண்ணை தூங்கிகளும் ஊரில் இருந்தனர்.
பெண்கள் கொக்கான் வெட்டு விளையாடவும்
பண்டைய சோழியாடுதல், தாயம் போடவும்
திண்ணை பழம் பெருமை வாய்ந்தது.
***
படுக்கை, இருக்கை, அரட்டை அரங்கமாய்
பாலகருக்கு பாடம் புகட்ட வசதியாகவும்
பழம் பெருமை வாய்ந்த திண்ணையின்று
படத்தில் மட்டும் காணும் சொர்க்கம்.
***
ஒன்றரை அடி உயரத்தில் வெளியே
வாசலுடன் சேர்ந்தது. பொது குந்து.
உள்ளே உறவுகளுடன் ஒட்டி யுறவாடும:
அள்ளியணைக்கும் அழகு, பழைய சோபா.
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-3-2016
vector_146.cdr

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  ஏப் 25, 2016 @ 01:22:47

  தற்போது நாம் தொலைத்துவருவனவற்றில் ஒன்று திண்ணை. அதனைப் பற்றிய நல்ல பதிவு.

  மறுமொழி

 2. JAYAKUMAR K
  ஏப் 25, 2016 @ 01:26:47

  தற்போதைய வீடுகளில் ஏது திண்னை
  வேதனையாக இருக்கிறது

  மறுமொழி

 3. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஏப் 25, 2016 @ 13:00:19

  கவிதையை படித்தபோது வேதனைதான் வந்தது சகோ.

  மறுமொழி

 4. Bagawanjee KA
  ஏப் 25, 2016 @ 18:05:18

  இன்றைய வீடுகளில் திண்ணை மட்டுமா இல்லை ,வாசல் படியும்தான் 🙂

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 09, 2018 @ 10:52:48

  2017 comments:-

  கவித்தென்றல் ஏரூர் :- மிக அருமை
  March 7 at 1:21pm 2016

  Vetha Langathilakam :- மகிழ்ச்சியுடன் நன்றி உறவே.
  · March 7 at 2:21pm

  கவி சாமி. கவி சாமி. :- பாராட்டுக்கள் ..
  March 7 at 1:32pm

  Vetha Langathilakam :- மகிழ்ச்சியுடன் நன்றி உறவே.
  March 7 at 1:34pm 2016

  Muthupet Maran :- அருமை சகோதரி
  · March 7 at 2:07pm…See more

  Subajini Sriranjan:- மிக அழகாக வரிகள்
  எங்கள் வீட்டுத் திண்ணையின் ஞாபகம்

  Vetha Langathilakam :- மகிழ்ச்சியுடன் நன்றி உறவே.

  Dharma Ktm :- super akka

  Vetha Langathilakam :- மகிழ்ச்சியுடன் நன்றி உறவே.

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 09, 2018 @ 10:54:51

  2017 comments:-

  Sujatha Anton :- திண்ணை மரபு வீடுகளில் உள்ளது.
  கண்ணை முடிச் சாயும் மேடையிது.
  அருமை…அருமை.. தமிழர் மரபுவழி வந்தவை. ஞாபகத்தின்ஒருபகுதி.
  வாழ்த்துக்கள்.!!!! வளர்கபணி.!!

  Vetha Langathilakam :- மகிழ்ச்சியுடன் நன்றி உறவே.Sujatha.

  Ramesh Manivasagam :- படத்தில் மட்டும் காணும் சொர்க்கம். – உண்மை – இனி அருங்காட்சியகத்தில்தான் திண்ணையை பார்க்க முடியும்போலும். மனிதர்கள் சுயநலமின்றி வாழ்ந்தமைக்கு அடையாளம் திண்ணை என்றால் மிகையில்லை.

  Vetha Langathilakam :- மனிதர்கள் சுயநலமின்றி வாழ்ந்தமைக்கு அடையாளம் திண்ணை xactly right…

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: