452. பொதுநல அழிப்பு.

பொதுநல அழிப்பு.

***

பூங்காவில் சீமாட்டியெனும் நினைப்பில்
பூமகள் உலா நந்தவனத்தில்.
பாரதி மீசை வைத்ததாய்
பாராளும் மிடுக்கு உயர்வாய்.
***
தன்மானத் தமிழ் நெய்தலை
மென்று விழுங்குதல் மிடிமை.
தன் கண்ணை மூடினும்
மின்னலைத் திரையிடல் இயலாமை.
***
தன்னவரை வெளிச்சம் போடும்
தன்னாட்சிச் சகுனித் திறன்
கூரான சமூகச் சூழ்ச்சி.
கோரமான பொதுநல அழிப்பு.
***
போராட்டம் உலக வாழ்வு.
தேரோட்டும் விருட்சத் துணிவு.
யாரால் இருட்டடிக்க முடியுமொரு
நேரான பல்லக்குப் பயணத்தை!
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-1-2016.
hearts-line-205qa1t
Advertisements

25. கேட்டாளே ஒரு கேள்வி!

12647144_10207411651706678_3673732541357235223_n

கேட்டாளே ஒரு கேள்வி!

***

சும்மா இருப்பதல்ல ஓய்வு காலம்!
சுகமான கனவுகள் நிறைவேற்றும் காலம்
சுதந்திர மனம், ஆரோக்கிய உடல்
சுறுசுறுப்பு அனுபவம் சுயமாய் இயங்குதல்.
உடற் பயிற்சி, உகந்த வெளியுலா,
உணர்வின் மனச்சுளுக்கு எடுக்கப் பல
உற்சாகம் தரும் நூல்கள் வாசிப்பு
உள்ளம் மகிழ உறவுகளின் கூட்டுறவு.
***
அச்சச்சோ நேரம் போதவில்லையேயெனும் போது
உச்சக் கேள்வியொன்று பக்கம் விழுந்தது.
” என்ன வீட்டிலிருந்து சமையல் செய்கிறீர்களா?
என்ன உடல் பருத்து விட்டதா?”
விரியும் தமிழும் நானுமொரு பக்கம்
தெரியாதா என் தமிழ் பற்றி இவளுக்கு!
புரியாது சமைக்கப் பிறந்தவள் என்கிறாளே!
சிரிப்புத்தான் வந்ததிவள் கேள்வியால் எனக்கு!
***
ஓய்வூதியம் எடுத்த பின்னும் மனிதன்
ஓய்வதில்லை. ஓடியாடிய உடல் ஓயாது.
ஓயந்திருத்தல் என்பதும் மனதுக்கும் இல்லை.
ஓடை போன்று ஓடுவதே வாழ்வு!
பல வகையாக வாழும் விதம் உண்டு
கலகலப்பான வாழ்க்கை விதம் ஒன்று
நலமற்ற கறாரான வாழ்வு வேறு.
விலகுங்கள் என் வழி வேறு!
(வேறு)
குமையும் பெண் மனங்களே!
அமைந்த வாழ்வை அற்புதமாக்குங்கள்!
சமையலே வாழ்வு அல்ல!
சமையல் சிறு பாகமே!
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-1-2016.
purple line  one

451. வாழ்க்கை வரமா பாரமா

13177936_1062285693852284_140244168103189447_n

 

வாழ்க்கை வரமா பாரமா

***

மனிதப் பிறவியே கிடைத்தற்கரிய வரம்.
வனிதமாக வாழ்ந்தால் பாரமற்ற வரம்.
அனிதமானோரின் வாழ்வு அவலமாவதால் பாரம்.
இனிதாய் அழகாக்குதல் அவரவர் தீரம்.
***
எண்ணம் சிறக்கச் சிறக்க மனவானம்
வண்ணச் சுடர் அடர்ந்து விரிக்கும்.
திண்ணமாய் உயர் தாக்கம் பெருகும்.
நண்ணும் நிறைவுடை வாழ்வின் தரம்.
***
அத்தனை அனுபவங்களும் எம் நன்மைக்கே
உத்தம சிந்தனையாயிதை மனதில்
எடுத்தே கொத்தும் பொறாமை வன்மங்களைத்
தொலைத்தே சித்தம் குளிர வாழ்தல் வரமே.
***
பெற்றோர் உடன் பிறப்பைப் பேணியும்
சுற்றம் சூழ வாழ்தல் வரம்.
பற்றாம் பாசமறுத்து வாழ்தல் பாரம்.
கற்றிடும் யோகா விலக்கும் பாரம்.
***
வாசிக்கும் வாகான நூல்கள் மன
பாசி விலக்கும். அறிவு தனம்.
கூசிடாது நெருங்கும் வாழ்கை நந்தவனம்.
பேசிடும் வரமாயமையும் இல்லையொரு பாரம்.
***
தன்னம்பிக்கை, முயற்சி, மகிழ்வு, தானம்
நன்னம்பிக்கையாய் கையிலெடு! வாழ்வு கானம்!
இன்னமுத அருளாகும் வாழ்க்கை தேனாம்.
என்னாளும் பாரமற்ற வரம் ஆனந்தவனம்.
Ha_3610png0002

75. பச்சைக் கொலை!

1916649_10207639381719786_4054199736759492968_n

பச்சைக் கொலை!

***

அறிவு கெட்ட மானிடனே
தறிக்கிறாயே அறிவீனமாய் என்னை!
முறிவது நான் மட்டுமல்ல
முடக்குகிறாயே  பறவைகள் வாழ்வையும்!
பச்சைக் கொலையிது! உன்னை
துச்சமாய் யாரும் கொன்றால்!
முச்சந்திக்கு இழுப்பார்களே..பார்!
முச் சங்கத்திலும் முறையிடுவாரே!
***
பாடை வரை வருகிறேனே!
பாங்காக எண்ணிப் பார்!
பாடெனும் புவி வெப்பமடைதல்,
பாதிப்பு மழையின்மை, பட்டினி!
மரம் கடவுளென்பார் மனிதா!
மரம் வெட்டல் பயங்கரவாதம்!
மகிழ்ந்து நாளுக்கு ஒரு
மரம் நடு! சொர்க்கம்!
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2-3-2016
***

மரங்கள்

*

பெரும்
நிழற் குடை இலவசச் சேவிதம்.
கால்நடைகள் வயிறாறும் தீவனச் சேவை.
பணம் செலவற்ற உரத் தழைகள்.
பகலில் நச்சுக் கரியமலவாயு உள்ளெடுக்கும் தொண்டன்.
*

மருந்து எண்ணெய் பிசின் தேவையா
அடுப்பெரிக்க, குளிர் தேச வெப்பச் சேவை
தீப்பெட்டித் தொழில், கடதாசி செய்ய
மண்ணரிப்புத் தடையாம் வரம் மரங்கள்.
*

சுகமான
பறவைகள் வாழுமிடம். பூமியின் வெப்பம்
மிதப்படுத்தும் இரசாயன சேவை. புழங்கள்
காய்களும், தேக ஆரோக்கியம் காக்க
சமயத்தில் காற்று வேகக் கட்டுப்பாட்டதிகாரி.
*

அழுக்கு நீரருந்தி தருவது அமுதம்.
தெருவோர நிழல் வாடி, சீவகாருண்யம்.
மனிதக் கரம். பிச்சைக் காரனின் வீடு.
சீ! மரமே எண்ணாதே! பல்சேவகனிவன்.
*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1.8.2016

*

( Same  katu)
*
sketch-2.png.klkl

24. ஒத்தையிலே நிக்கிறியே!

950431_Mujer_Silueta

 

ஒத்தையிலே நிக்கிறியே!

***

அத்தை மகளே நீ

சொத்தையாகப் போக மாட்டாய்

நத்தை ஓட்டுக்குள் இருப்பதாய்

நித்தமும் எண்ணாதே நித்திலமே

வித்துவம் பல கற்றிடு

அத்தமிக்க மாட்டாய் நீ

அத்தர் வாசனை அறிவாகட்டும்.

சித்திரமே நீ ஒளிர்வாய்.

***
அத்தாணி மண்டபம் ஏறலாம்
அத்துவானம் ஆக மாட்டாய்
உத்தமர் உன்னைத் தேடுவார்
உத்தியோகமும் உன்னைச் சேரும்
நித்திய நிலவு ஆகுவாய்
சித்தம் நிறையும், வழியும்
பித்தம் பயம் தெளியும்
ஒத்தையிலே நிற்கமாட்டாய் நீ
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
5-4-2016
green-synthesizer

450. தனிமையின் தவிப்புகள்.

IMG_0484[1]

தனிமையின் தவிப்புகள்.

***

சிலருக்கு இது கசப்பு.
சிலருக்கு இது இனிப்பு.
கலகலப்பற்ற தனிமைத் தவிப்பைக்
கலகலப்பாக்கப் பல வழிகள்.
கவனிப்பாரற்ற தனிமை நாகம்.
காலைச் சுற்றி உயிரழிக்கும்.
***
கவனிக்காத ஒரு மூலையை
கரிசனையாய்த் தூசி தட்டலாம்
கட்டுரை கவிதை எழுதலாம்.
பாட்டுக் கேட்டு ரசிக்கலாம்
ஆட்டமும் ஆடிப் பார்க்கலாம்.
நாட்டமுடன் தேகப்பயிற்சியும் செய்யலாம்.
***
கண்டிப்பாய் வெளியே உலாவலாம்
கண்டபடி நோய்களும், தூக்கமின்மையும்
ஒண்டியே கருணை காட்டும்.
கண்டனத்திற்குரிய மனஅழுத்தம்
கட்டிப் பிடித்துச் சாமியாடும்.
கவனியுங்கள்! தற்கொலைக்கும் விரட்டும்!
***
பா வானதி
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க். 2
4-3-2016
summer-divider-clipart-divider2

1. வாய்மை – கவியரங்கம்

13147327_10208229564113977_557310268483352219_o

வாய்மை – கவியரங்கம்

***

நிலாமுற்றம் – கவியரங்கம் என் முதல் முயற்சி:-
***
செந்தமிழ், நந்தமிழ், அருந்தமிழ்
சந்தனத் தமிழ் வாழ்க!
செந்தளிப்பாய் வளர்கவென்று
இந்நாளிலும் எந்நாளிலும் எம் தமிழை வணங்குகிறேன்.
***
களம் தந்து எம் தமிழை
வளம் படுத்தும் தலைமைக்கு வணக்கம்.
உளம் நிறைந்து ஒத்துழைக்கும்
உறுதுணை அங்கத்தவர்க்கு வணக்கம்.
வறுமையற்ற வளமுடை தமிழ்நேச
அவையோருக்கும் வணக்கம்.
முறுவலுடன் எமக்கு வாய்ப்பளித்து
அறுவடைக்குக் காத்திருக்கும்
பெருமக்களாம் நிலாமுற்றம் குழவினருக்கும் வணக்கம்.
***
வாய்மை தலைப்பில் வரும் வரிகளிவை.
உண்மை! உள்ளத்திலிருப்பதைக் கூறுவேன்.
வாய்மை வாய் வழி வருவதாம்.
உண்மை, வாய்மை, மெய்மையாம்
கண் போன்ற மனிதவியல்புகள்
விண்ணைத் தொடும் மெய்யியல்.
மண்ணில் வீழ்த்தும் பொய்யியல்.
***
தூய்மையாய் அணைப்புத் தரும்.
ஆய்மை செய்தால் வழியெனும்
வாய்மை வதை தரும்.
பொய்யை நேசிப்போர் மத்தியில்
மெய்யாய் நாம் உதைபடுகிறோம்.
தெய்வத் துணையோடிறுதியில் வெற்றியே
***
நெருப்பில் நடத்தலிவ் வழி!
கருப்பு மனதான பார்வையும்
செருப்படியான வார்த்தைகளும் சுடும்.
இருப்பான துணிவோடு நிமிர்ந்தால்
பெருமையுடை வாய்மை வெல்லும்.
உருப்படியாய் வாய்மை வழியேகுவோம்.
விருப்புடன் கேட்டோர், வாய்ப்பளித்தோருக்கு
ஒருமுகமாய் அனைவருக்கும் நன்றி
கூறி விடை பெறுகிறேன்.
***
வேதா. இலங்காதிலகம்
ஓகுஸ். டென்மார்க்.
2-3-2016
Divider-Red-3

Previous Older Entries