448. உழவு

indian former (10)

உழவு

***

கிழவனானாலும் கம்பீரமாய் ஏர் பிடிக்கும்
உழவு உலகை இழவிலிருந்து காக்கும்.
எழல் என்ற பொருளாதார நிலையையும்
கழனி காக்கும் என்பதை மறக்கிறோம்.
***
ஏர் பிடிப்போன் தானே என்றுமிப்
பார் ஆள்கிறான் இதை மறுப்பார்
ஆர்! உழவிற்கு ஆதரவு செய்வோம்!
காரகலத் தொழுது பின் செல்லாதிருப்போம்.
***
உலகிற்கு வளமீயும் உழவன் வாழ்வு
இலகு அல்ல இறுகிய பொருளாதாரமே
திலகமாயவன் வாழ திறமுடை தொழிற்
திட்ட மாற்றமவனை சிகரத்திற் கேற்றும்.
***
அழுகிறான், வாடுகிறானென்ற பேச்சு பயனில்லை.
அவனைத் தொழுதிடும் நிலைமாற்றம் தேவை.
அவனியில் இவன் நிலை உயரம்
அறியாது மாய்வதோ அதி துயரம்
***
பா வானதி வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
14-3-2016
***

உழவு (வேறு)

ஆதித் தொழிலைப் பாதியினர் மறந்தார்
படடினி உலகுக்குப் பாதை வகுத்தார்.
சேற்றை உழக்கினால் பசியாறச் சோறு
உழுவோன் மடி துழாவுதல் விதி.
ஏருயர நாடுயரப் பாடு படு!
*

240_F_80348727_Vf1S9msR50EvqXbAaVSXraTG0HlG1rsM

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோமதி அரசு
  மே 12, 2016 @ 09:06:02

  உழவுக்கு ஆதரவு செய்தால் தான் நாம் வாழலாம், அருமையான் கவிதை. வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 2. JAYAKUMAR K
  மே 12, 2016 @ 13:03:50

  உழவின் பெருமை போற்றுவோம்
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 3. Bagawanjee KA
  மே 13, 2016 @ 12:23:49

  புதிய பொருளாதாரக் கொள்கை உழவனைப் பாடாய் படுத்துதே !

  மறுமொழி

 4. T.N.MURALIDHARAN
  மே 13, 2016 @ 13:18:51

  உழவுக்கு கவிதை மூலம் பெருமை சேர்த்தது அழகு

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 24, 2019 @ 11:23:22

  Jasmin Kennedy :- உழவின் சிறப்பு
  அருமை
  2017
  Vetha Langathilakam :- mikka nanry sis . Mkilchchy,…..
  2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: