449. ரயில்

train

 

 

ரயில்

குயிலாகப் பாடி மயிலாக ஆடுவோரும்
ஓயிலாக வருவோரும் துயிலாது விழிப்போரும்
ரயிலினுள் பயணிகள் வித்தியாசம் வித்தியாசம்.
ரசனையும் ரகளையும் விதம் விதம்.
***
குதிரையே உந்துசக்தி ஆதி ரயில்.
குட்டிக்கரணமாகி நீராவி, டீசல், மின்சக்தியில்
குடிகளிற்காய் நெடுந்தொலைவு, அதிவிரைவென வசதிகள்.
குறையின்றி சரக்கு, பெட்ரோல், உணவும் காவுகின்றன.
***
பயணத்திற்கு இடம் பிடிக்கப் படுகின்றபாடு.
சுயமாய் வியாபாரங்கள் உள்ளேயும் உண்டு.
நயமான பல காட்சிகள் யன்னலூடு.
பயணம் தண்டவாள இரும்புப்பாதை பயத்தோடு.
***
புகையூர்தி, இருப்பூர்தி, கோச்சி என்போம்.
புடையன் பாம்புபோல நீண்டு நகரும்.
புகைகக்கும் அவசரத்திற்கு அபாய மணியுண்டு.
புனைவாய் எழுதினால் புகைவண்டியாய் நீளுமே!
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-3-2016
v12
Advertisements

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Nagendra Bharathi
  மே 15, 2016 @ 03:25:39

  புகை வண்டி கண் முன் வந்தது

  மறுமொழி

 2. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  மே 15, 2016 @ 05:43:40

  நீளும் புகைவண்டியில் பயணித்தேன். நன்றி.

  மறுமொழி

 3. கோமதி அரசு
  மே 15, 2016 @ 10:03:04

  ரயில் கவிதையும் படமும் அருமை.

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மே 15, 2016 @ 11:39:38

  அருமை சகோ ரசித்தேன்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: