75. பச்சைக் கொலை!

1916649_10207639381719786_4054199736759492968_n

பச்சைக் கொலை!

***

அறிவு கெட்ட மானிடனே
தறிக்கிறாயே அறிவீனமாய் என்னை!
முறிவது நான் மட்டுமல்ல
முடக்குகிறாயே  பறவைகள் வாழ்வையும்!
பச்சைக் கொலையிது! உன்னை
துச்சமாய் யாரும் கொன்றால்!
முச்சந்திக்கு இழுப்பார்களே..பார்!
முச் சங்கத்திலும் முறையிடுவாரே!
***
பாடை வரை வருகிறேனே!
பாங்காக எண்ணிப் பார்!
பாடெனும் புவி வெப்பமடைதல்,
பாதிப்பு மழையின்மை, பட்டினி!
மரம் கடவுளென்பார் மனிதா!
மரம் வெட்டல் பயங்கரவாதம்!
மகிழ்ந்து நாளுக்கு ஒரு
மரம் நடு! சொர்க்கம்!
***
பா ஆக்கம் பா வானதி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2-3-2016
***

மரங்கள்

*

பெரும்
நிழற் குடை இலவசச் சேவிதம்.
கால்நடைகள் வயிறாறும் தீவனச் சேவை.
பணம் செலவற்ற உரத் தழைகள்.
பகலில் நச்சுக் கரியமலவாயு உள்ளெடுக்கும் தொண்டன்.
*

மருந்து எண்ணெய் பிசின் தேவையா
அடுப்பெரிக்க, குளிர் தேச வெப்பச் சேவை
தீப்பெட்டித் தொழில், கடதாசி செய்ய
மண்ணரிப்புத் தடையாம் வரம் மரங்கள்.
*

சுகமான
பறவைகள் வாழுமிடம். பூமியின் வெப்பம்
மிதப்படுத்தும் இரசாயன சேவை. புழங்கள்
காய்களும், தேக ஆரோக்கியம் காக்க
சமயத்தில் காற்று வேகக் கட்டுப்பாட்டதிகாரி.
*

அழுக்கு நீரருந்தி தருவது அமுதம்.
தெருவோர நிழல் வாடி, சீவகாருண்யம்.
மனிதக் கரம். பிச்சைக் காரனின் வீடு.
சீ! மரமே எண்ணாதே! பல்சேவகனிவன்.
*

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
1.8.2016

*

( Same  katu)
*
sketch-2.png.klkl

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  மே 24, 2016 @ 02:17:19

  அருமை
  நாளும் மரம் நடுவோம்

  மறுமொழி

 2. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  மே 25, 2016 @ 01:06:57

  வேதனையை வெளிப்படுத்தும் அழகான வரிகள்.

  மறுமொழி

 3. sarveswwary
  மே 25, 2016 @ 06:59:56

  உணர்வுகளை உசுப்பும் கவிதை ! பின்விளைவினை சிந்திக்காத்ஹா மனிதமனங்கள் . . . . உம் என்றான் தூக்கி அடிச்சான் . . . . பாட்டி காலத்து சலிப்பு வார்த்தைகள் நினைவை எடுத்து வந்த உங்கள் கவித்துவம் ரொம்பச் சிறப்பு ! வாழ்த்துக்கள் வேதா அக்கா !

  மறுமொழி

  • கோவை கவி
   மே 25, 2016 @ 09:56:26

   சர்வி! மிக உணர்வு பூர்வமாக கருத்துகள் இடுகிறீர்கள் இங்கும் முகநூலிலும்.
   இப்போதெல்லாம் நான் உட்படப் பலர் இரண்டு வரியில் தானே கருத்து இடுகிறோம்.
   மிக நன்றியுடன் என் மகிழ்வையும் கூறுகிறேன். வாழ்க வளமுடன்.

   மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மே 25, 2016 @ 13:07:18

  மரத்தின் வேதனையான வரிகள்

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூலை 23, 2016 @ 14:02:39

  Loganadan Ps :- அபாரம்
  Unlike · Reply · 1 · 17 March at 18:16

  Vetha Langathilakam .- இனிய கருத்திற்கு நன்றியுடன் மகிழ்வும் அன்புறவே
  Like · Reply · 17 March at 20:02

  Dharma Ktm :- arumai akka
  Unlike · Reply · 1 · 17 March at 18:23

  Vetha Langathilakam :- இனிய கருத்திற்கு நன்றியுடன் மகிழ்வும் அன்புறவே
  Like · Reply · 17 March at 20:02

  Subajini Sriranjan :- இவையின்றி நமக்கேது வாழ்வு
  இயற்கையை பாதுகாப்போம்
  Unlike · Reply · 1 · 17 March at 18:41

  Vetha Langathilakam :- இனிய கருத்திற்கு நன்றியுடன் மகிழ்வும் அன்புறவே
  Like · Reply · 17 March at 20:02

  Maniyin Paakkal பச்சைக் கொலை வலிக்கிறது.
  Unlike · Reply · 1 · 18 March at 05:41

  Vetha Langathilakam இனிய கருத்திற்கு நன்றியுடன் மகிழ்வும் அன்புறவே
  Like · Reply · 1 · 18 March at 09:46

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜூலை 23, 2016 @ 14:05:38

  நக்கீரன் மகள்:- அருமை
  Unlike · Reply · 1 · 18 March at 07:35

  Vetha Langathilakam :- இனிய கருத்திற்கு நன்றியுடன் மகிழ்வும் அன்புறவே
  Like · Reply · 18 March at 11:09

  Vetha Langathilakam :- கவிதை ரசிகை கோமதி முத்துக்குமார்:- அருமை அக்கா Unlike · Reply · 1 · March 3 at 1:30am 2016

  Vetha Langathilakam :- Mikka nanry- Makilchchy sis. march 2016
  Like · Reply · 18 March at 11:08

  Sankar Neethimanickam :- இயற்கையை அழிப்பதும் மனிதன் தன்னைத்தானே அழித்துக்கொள்வதும் ஒன்று தான்..
  Unlike · Reply · 1 · 18 March at 15:05

  Vetha Langathilakam :- இனிய கருத்திற்கு நன்றியுடன் மகிழ்வும் அன்புறவே
  Like · Reply · 18 March at 15:58

  Sujatha Anton :- இயற்கை வர்ணித்து நிற்கும் தங்கள் கவித்துளிகள் பச்சைக்கொலைகளை
  வெட்டி வீழ்த்தி நிற்கின்றது. அருமை. சிந்திப்போம்.
  Like · Reply · 1 April at 21:41

  Vetha Langathilakam :- இனிய கருத்திற்கு நன்றியுடன் மகிழ்வும் அன்புறவே

  மறுமொழி

 7. கோவை கவி
  ஜூன் 08, 2019 @ 20:32:29

  பூக்காரி கவிதைகள் :- அருமை கவியே
  3-3-2016

  Vetha:- makilchchy sis.
  2019

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: