25. கேட்டாளே ஒரு கேள்வி!

12647144_10207411651706678_3673732541357235223_n

கேட்டாளே ஒரு கேள்வி!

***

சும்மா இருப்பதல்ல ஓய்வு காலம்!
சுகமான கனவுகள் நிறைவேற்றும் காலம்
சுதந்திர மனம், ஆரோக்கிய உடல்
சுறுசுறுப்பு அனுபவம் சுயமாய் இயங்குதல்.
உடற் பயிற்சி, உகந்த வெளியுலா,
உணர்வின் மனச்சுளுக்கு எடுக்கப் பல
உற்சாகம் தரும் நூல்கள் வாசிப்பு
உள்ளம் மகிழ உறவுகளின் கூட்டுறவு.
***
அச்சச்சோ நேரம் போதவில்லையேயெனும் போது
உச்சக் கேள்வியொன்று பக்கம் விழுந்தது.
” என்ன வீட்டிலிருந்து சமையல் செய்கிறீர்களா?
என்ன உடல் பருத்து விட்டதா?”
விரியும் தமிழும் நானுமொரு பக்கம்
தெரியாதா என் தமிழ் பற்றி இவளுக்கு!
புரியாது சமைக்கப் பிறந்தவள் என்கிறாளே!
சிரிப்புத்தான் வந்ததிவள் கேள்வியால் எனக்கு!
***
ஓய்வூதியம் எடுத்த பின்னும் மனிதன்
ஓய்வதில்லை. ஓடியாடிய உடல் ஓயாது.
ஓயந்திருத்தல் என்பதும் மனதுக்கும் இல்லை.
ஓடை போன்று ஓடுவதே வாழ்வு!
பல வகையாக வாழும் விதம் உண்டு
கலகலப்பான வாழ்க்கை விதம் ஒன்று
நலமற்ற கறாரான வாழ்வு வேறு.
விலகுங்கள் என் வழி வேறு!
(வேறு)
குமையும் பெண் மனங்களே!
அமைந்த வாழ்வை அற்புதமாக்குங்கள்!
சமையலே வாழ்வு அல்ல!
சமையல் சிறு பாகமே!
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
6-1-2016.
purple line one

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  மே 29, 2016 @ 03:00:05

  உண்மை
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  மே 29, 2016 @ 03:42:34

  பொருத்தமான மறுமொழி.

  மறுமொழி

 3. Jayakumar
  மே 29, 2016 @ 03:46:51

  Good. I am also a retired person. Reflects my hobby of grazing the net, particularly tamil blogs.

  Jayakumar

  மறுமொழி

 4. Nagendra Bharathi
  மே 29, 2016 @ 07:09:32

  அருமை

  மறுமொழி

 5. Bagawanjee KA
  மே 29, 2016 @ 15:58:41

  #ஓடை போன்று ஓடுவதே வாழ்வு!#
  ஓடாவிட்டால் ஓய்ந்து விடும் வாழ்வு 🙂

  மறுமொழி

 6. கோவை கவி
  ஆக 07, 2016 @ 13:53:26

  Subajini Sriranjan :- அருமை அருமை
  நானும் பல சந்தர்ப்ங்களில் இதை சிந்தித்தேன் !
  இன்று உங்கள் வரிகளில் நிறைவடைகின்றேன்
  இத்தக் கேள்வியை கேட்டுக் கொண்டே
  இன்று பலர் வாழ்நாளை கழிக்கின்றார்கள்
  Unlike · Reply · 2 · 29 January at 23:07
  :-
  Rathy Mohan நல்லதோர் கேள்வி… உங்கள் வரிகள் நிதர்சனம்…. அருமை அருமை
  Unlike · Reply · 1 · 29 January at 23:35
  நக்கீரன் மகள் :- அருமை
  Unlike · Reply · 2 · 29 January at 23:43

  Velavan Athavan :- ஓய்வூதியம் எடுத்த பின்னும் ஓடை போன்று ஓடுவதே வாழ்வு! நலமற்ற கறாரான வாழ்வு வேறு விலகுங்கள் என் வழி வேறு! அருமை அருமை அடிச்சீங்க பார் சிக்ச்சர் இதுதான் வேதாக்கா பாராட்டுகள் சகோதரி
  Unlike · Reply · 2 · 30 January at 00:44

  Sankar Neethimanickam :- இனிக்கிறது..
  Unlike · Reply · 2 · 30 January at 09:23

  Maniyin Paakkal :- அருமை
  Unlike · Reply · 1 · 30 January at 10:21
  Vetha Langathilakam :- அன்புடன் சுபா, ரதி, நக்கீரன் மகள்; வேலவன் ஆதவன்,
  சங்கர், நீதி மாணிக்கம், , மணியின் பாக்கள்
  11 மணி காலை வணக்கம்
  மிகுந்த மகிழ்ச்சியும் மிகுந்த நன்றியும்…உங்கள் கருத்துகள் படித்து.
  (உண்மையான ஒரு கேள்வி இது
  வம்புக்கும் கேட்டிருக்கலாம்.)
  Like · Reply · 1 · 30 January at 10:55

  மறுமொழி

 7. கோவை கவி
  ஆக 07, 2016 @ 13:55:12

  Ramesh Manivasagam:- நன்று நன்று
  Unlike · Reply · 1 · 30 January at 11:15

  Vetha Langathilakam :- நன்றியும் மகிழ்வும் சகோதரா. dear R.M.
  Like · Reply · 1 · 30 January at 11:17

  Sujatha Anton :- எப்படியான சிந்தனைகள். அருமை. மனிதன் ஒய்வு எடுத்தாலும் சும்மா இருப்பதல்ல வாழ்க்கை. முற்றிலும் உண்மை. வாழ்க தமிழ்.!!!
  Unlike · Reply · 1 · 30 January at 15:49

  Vetha Langathilakam :- நன்றியும் மகிழ்வும் Sujatha..
  Like · Reply · 30 January at 16:41

  Lavi Langa 🙈🙉🙊😄
  Unlike · Reply · 1 · 30 January at 17:54 · Edited

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: