452. பொதுநல அழிப்பு.

பொதுநல அழிப்பு.

***

பூங்காவில் சீமாட்டியெனும் நினைப்பில்
பூமகள் உலா நந்தவனத்தில்.
பாரதி மீசை வைத்ததாய்
பாராளும் மிடுக்கு உயர்வாய்.
***
தன்மானத் தமிழ் நெய்தலை
மென்று விழுங்குதல் மிடிமை.
தன் கண்ணை மூடினும்
மின்னலைத் திரையிடல் இயலாமை.
***
தன்னவரை வெளிச்சம் போடும்
தன்னாட்சிச் சகுனித் திறன்
கூரான சமூகச் சூழ்ச்சி.
கோரமான பொதுநல அழிப்பு.
***
போராட்டம் உலக வாழ்வு.
தேரோட்டும் விருட்சத் துணிவு.
யாரால் இருட்டடிக்க முடியுமொரு
நேரான பல்லக்குப் பயணத்தை!
***
பா ஆக்கம்
பா வானதி வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-1-2016.
hearts-line-205qa1t

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  மே 30, 2016 @ 02:10:07

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  மே 30, 2016 @ 03:51:40

  கவிதை வரிகளை மிகவும் ரசித்தேன் சகோ

  மறுமொழி

 3. கோவை கவி
  நவ் 01, 2016 @ 12:03:58

  , Ratha Mariyaratnam, கவித்தென்றல் ஏரூர் and செந்தாமரை கொடி like this
  Like · Reply · 19 January at 15:10

  Subajini Sriranjan :- மிக அருமையான பா
  Unlike · Reply · 1 · 19 January at 20:32

  Vetha Langathilakam:- மிக நன்றி கருத்திடலிற்கு மகிழ்ந்தேன்
  Like · Reply · 19 January at 23:25

  மறுமொழி

 4. கோவை கவி
  நவ் 01, 2016 @ 12:05:03

  Rathy Mohan :- அழகான கவிதை
  Like · Reply · 19 January at 20:49

  Vetha Langathilakam :- மிக நன்றி கருத்திடலிற்கு மகிழ்ந்தேன்
  Like · Reply · 19 January at 23:26

  மறுமொழி

 5. கோவை கவி
  நவ் 01, 2016 @ 12:07:15

  Sujatha Anton :- அழகு தமிழ்!!!!!! அருமை.
  Like · Reply · 20 January at 20:37

  Vetha Langathilakam :- நன்றியும் மகிழ்வும் சுஜாதா கருத்திடலிற்கு.
  சில கடுமையானவற்றிற்குப் பலர் கருத்திடாது நழுவுகின்றனர்
  Like · Reply · 20 January at 23:07

  Ramesh Manivasagam :- தன்மானத் தமிழ் நெய்தலைமென்று விழுங்குதல் மிடிமை.
  தன் கண்ணை மூடினும்
  மின்னலைத் திரையிடல் இயலாமை.

  நெய்தலை மென்று விழுங்க முடியாது அப்படி யாரும் முயன்றால் அவர்கள மட்டிகளே – மிடி என்பது வறுமை மிடிமை என்பது துன்பம் என்ற பொருட்படுகின்றது – கவலை விடுக நெய்தல் யார்க்கும் அஞ்சாது . மிக நல்ல
  சிந்தனை தாயே.
  Like · Reply · 23 January at 23:57

  Vetha Langathilakam:- Ramesh Manivasagam மிக நன்றி கருத்திடலிற்கு மகிழ்ந்தேன்
  Like · Reply · A few seconds ago

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: