2. 19வது கவியரங்கம்.

 

 

19வது கவியரங்கம்.

நிலாமுற்றம் 19வது கவியரங்கம்.
எனது (வேதா. இலங்காதிலகம் டென்மார்க்.) இரண்டாவது முயற்சி.
(நாயகர் – அரசர். நடலம் – செருக்கு)
நாயகர் போற்றி வளர்த்த தமிழ்
நானிலம் போற்றும் தமிழே வணக்கம.;;
நடாது என்னுள் விளைந்த தமிழ்
நங்கூரமிட்டு நந்தனம் அமைத்த தமிழ்
நடலமின்றி நர்த்தனமாடி யான் விரிக்கிறேன்
நடைபாவாடை. நயமுடனெனது கவியரங்க
சமர்ப்பணம் நிறைவேற அருள்வாய்.
தமிழே வணக்கம்.
நன்மார்க்கம் நிறைவேற ஒன்று கூடி
நற்குணங்கள் நற் தகுதிகளுடைய நடுவரே (நடுவர்களே)
அங்கத்தவர்களே! நயமான நல் வணக்கம்.
நளினமாகக் கவியரங்கம் சிறக்கட்டும். நல் வாழ்த்துகள்.
சங்கம் வளர்த்த தமிழை வளர்க்க
இங்கும் ஆவலாய் கூடிய சபையோரே!
மங்காத நற்கருத்தக்களை உள் வாங்கப்
பொங்கும் ஆவலுடன் காத்திருக்கும் சபையோரே
உங்களிற்கு நல் வணக்கம்.
இங்க நான் எடுத்துக் கொண்ட துணைத்தலைப்பு.
பணம்
பணச்செங்கோல் உலகைப் பலமாய் ஆளுது
குணச்செங்கோலை அது புரட்டிப் போடுது.
எணம்(மதிப்பு) உடைய கடதாசி ராசாவிது.
கணம்! மனிதத்தின் கண்களை மறைக்கிறது.
கணன்(கள்ளன்), கணிகை, பக்திமானும் தேடுவது
கணத்தில் உயர்வு புகழ் தருகிறது.
சணத்திலெட்டினால் பூஜ்ஜியமும் இராச்சியம் ஆளுகிறது.
கணக்கு விட்ட பலரைக் கவிழ்த்தது.
தன்னலம் நிறைத்துத் தரம் சாய்க்கிறது.
என்னலமும் நிறைந்தவனையும் பித்தலாட்டம் ஆட்டுகிறது.
பென்னம் பெரிய அதிகார முதலாளியிது.
அன்பமுதம், தொடுமுணர்வின் இதம் தராதது.
மனம் மகிழ்ந்து பூவாய் சிரிக்கும்
தனம் இந்தப் பணச் சரித்திரம்.
கனமாக இது இல்லையெனிலும் தரித்திரம்.
தினமும் தேவை நிகழ்த்தும் சூத்திரம்.
பணம் மட்டும் எதுவும் செய்திடாது.
பணம் இல்லாவிடில் எதுவும் ஆகாது.
பணம் – மனிதக்குணம் மாற்றும் உரைகல்.
கடின உழைப்பாளி உழைத்துப் பெறுவான்.
பணம் பற்றிய வரிகள் முற்றும்.
என் வரிகளையிங்கு எடுத்துரைக்க வாய்ப்பு நல்கிய நிலாமுற்ற நிர்வாகத்திற்கு நன்றிகள்.
நடுவர்கள், சபையோர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். கவியரங்கக் கவிஞர்கள் வந்தவர்கள் வரப்போகிறவர்களிற்கும் இனிய வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
21-5-2016.

puthu

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. T.N.MURALIDHARAN
  ஜூன் 02, 2016 @ 01:15:21

  கவிதை படித்து ரசித்தேன். அருமை

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜூன் 02, 2016 @ 04:24:54

  கவிதையின் வழி சில வார்த்தைகள் அறிந்தேன் நன்றி சகோ

  மறுமொழி

 3. கோவை கவி
  நவ் 01, 2016 @ 12:32:06

  Vetha Langathilakam Sumathi Shankar :- பணம் என்றால் பிணமும் வாய் திறக்குமே. பணம் இல்லையேல் தரித்திரம் என்று நடைமுறை நிதர்சனத்தை உங்கள் செம்மையான நடையில் விளக்கம் கொடுத்தமைக்கு வாழ்த்துகள் அம்மா.
  Unlike · Reply · 4 · 2 hrs 21-5-2016

  Inthrani Rani:- பணம்மட்டுமாவாழ்க்கை!
  பணமில்லாமல்ஏது
  வாழ்க்கை!
  அருமை

  Ramasamy Narayanan :- பணநாயகம் பெரு வெற்றி.
  கவிநாயகி பெறும் வெற்றி.
  அருமை சகோ

  Kannusamy Poomalai:- சிறந்த வரிகள

  Vetha Langathilakam :- Sumathi Shankar அன்பு நன்றி சகோதரி…தங்கள் ரசனை வரிகளிற்கு

  Vetha Langathilakam :- Inthrani Rani அன்பு நன்றி சகோதரி…தங்கள் ரசனை வரிகளிற்கு.

  Vetha Langathilakam:- Ramasamy Narayanan அன்பு நன்றி ஐயா..தங்கள் அன்பு வரிகளிற்

  Vetha Langathilakam :- Kannusamy Poomalai அன்பு நன்றி சகோதரா.தங்கள் அன்பு வரிகளிற்கு.

  கவிஞர் பாலு கோவிந்தராஜன் :- கணக்கு விட்ட பலரைக்
  கவிழ்த்தது.
  அருமை அருமை. … கவிஞர் அவர்கள

  Amala Jeysingh: பணத்தின் இரு மாறுபட்ட கருத்து .. மிகச் சிறப்பு

  Amala Jeysingh ..அன்பு நன்றி சகோதரி…தங்கள் ரசனை வரிகளிற்கு…

  .

  மறுமொழி

 4. கோவை கவி
  நவ் 01, 2016 @ 12:36:14

  Kanagarathinam Sellamuthu :- அருமையான கருத்துகளை தாங்கி நின்றது மனதில் படைப்பு! வாழ்த்துகள்!
  Like · Reply · 1 · 13 mins 21-5-16

  தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை:- பணமிருந்தால் நாட்டையே வாங்கலாம்
  Like · Reply · 7 mins 21-5-16

  Vetha Langathilakam:- Kanagarathinam Sellamuthu அன்பு நன்றி சகோதரா.தங்கள் அன்பு வரிகளிற்கு.
  Like · Reply · 4 mins

  Vetha Langathilakam :- தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை அன்பு நன்றி சகோதரா.தங்கள் அன்பு வரிகளிற்கு.
  Like · Reply · 3 mins 21-5-16

  மறுமொழி

 5. கோவை கவி
  நவ் 01, 2016 @ 12:37:23

  சுக்காம்பட்டி ரெ.சின்னசாமி:- சிறப்பான பதிவு அம்மா
  Unlike · Reply · 2 · 12 hrs 21-5-16
  Like · Reply · 22 May at 08:25

  Vetha Langathilakam :- அன்பு நன்றி சகோதரா.தங்கள் அன்பு வரிகளிற்கு.
  Like · Reply · 22 May at 08:34

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: