38. எனது உரை-(தமிழுக்கு மகுடம்) 9-4-2016

 

 

எனது உரை-(தமிழுக்கு மகுடம்) 9-4-2016

சபையோர் அனைவருக்கும் இனிய வணக்கம்.
தமிழுக்கு மகுடம் சூட்டிக் கொண்டாடும் ஓகுஸ் தமிழர் ஒன்றியத்தின் 7ம் ஆண்டுத் தடம் மிகச் சிறப்பாகப் பதியட்டும். தம் திறமைகளை வெளிப்படுத்தும் அனைத்துத் திறமைசாலிகளிற்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
இதை உருவாக்கிச் செயல்படுத்தும் ஓகுஸ் தமிழர் ஒன்றியத்திற்கும் இனிய வாழ்த்துகள். ஒருவர் திறமை கண்டு வாழ்த்தும் போது அதைத் தட்டிக் கொடுக்கும் போது மறு பக்கம் திரும்பிப் பார்க்காது எதிரிகள் போல எண்ணாது வாழ்த்துங்கள் மகிழ்வாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு இல்லாவிடிலும் உங்கள் பிள்ளைகளையோ பேரப் பிள்ளைகளையோ வாழ்த்தும் நேரமும்- காலமும் வரும் என்று எண்ணுங்கள். தமிழ் எனும் கல்வி கற்றவர்களிற்கும் சென்ற விடமெல்லாம் சிறப்பு உண்டாகும் என்பதற்கும் இந்த விழா ஒரு எடுத்துக்காட்டு தான்.
இதை முன்னெடுக்கும் இளைஞர் குழாம் சீருடை அணிந்தோர் குழுவிற்கும் இதில் ஒரு பெண்மணியும் இணைந்துள்ளார். இவர்கள் அனைவருக்கும் இவ்விழா நடத்துவதால் ஏதும் இலாபம் இல்லையாயினும் வரும் காலச்சந்ததியை உயர்த்தும் நல்லெண்ணம் இவர்களிற்கு உண்டு. இன்று மகுடம் சூட்டப் படுவோர் போன்று நாளையும் வேறு பலர் மகுடம் ஏந்துவார்கள் என்பது உண்மை. இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது இந்தக் குழுவினருக்கு விழா நடத்தும் சேவை ஓடர்கள் எடுத்துக் கொடுப்பது தான். சங்கத்திற்கு மாத சந்தா வருடச்சந்தா கேட்கவில்லையல்லவா? கோபித்துக் கொண்டு அவர்களைப் புறம் தள்ளாது அணையுங்கள்.
தமிழின் திறமை, தமிழின் நன்மையால் தமிழால் ஒன்று கூடியுள்ளோம் இங்கு. தமிழுக்கு விழா என்பதால் தமிழ் பற்றியே சிறிது கூறிச் செல்லலாம் என்று எண்ணி வந்துள்ளேன்.
திராவிட மொழிக் குடும்பத்து முதன்மையான மொழி எமது தாய் மொழி தமிழ். திராவிட மொழிக் கூட்டத்தில் 26 மொழிகள் உள்ளன. இதில் நாம் பெருமைப்படக் கூடியதாக அத்தனைக்கும் மூல மொழி – ஆதி மொழி தமிழ். இதை விட 35 சிறு மொழிக் கூட்டங்கள் உள்ளன அதற்கும் தமிழ் மொழியே மூலமானது.
மதுரைத் தமிழ், கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ், இலங்கையில் யாழ்ப்பாணத் தமிழ் மட்டக்களப்புத் தமிழ் என்று பல வேறுபாடுகள் உண்டு. மேலும் தமிழிலிருந்து நேரடியாகப் பிரிந்து மலையாளம் என்றும் பல வகைகள் உண்டு.
தமிழின் காலங்கள் என்று அதை மூன்று காலங்களாக ஆய்வாளர்கள் பிரித்துள்ளனர்.
கி.மு 300 – லிருந்து 700 வரையுள்ள இடைப் பட்ட காலம் பழந்தமிழ் காலம் என்றும்
700லிருந்து 1600 காலம் வரையானது இடைக்காலத் தமிழ் என்றும்
1600 முதல் இன்று வரை நவீன தமிழ்காலம் என்றும் அடங்குகிறது.
கி.மு ஓராம் நூற்றாண்டிலிருந்து தமிழ் என்ற பெயர் எமது மொழிக்குப் பெயராக இடப்பட்டுப் பயனுக்கு வந்தது என்று செய்திகள் உலாவுகிறது. தமிழ் என்ற சொல் எப்படி வந்தது என்று பல கருத்துகள் உள்ளது. திராவிட சமஸ்கிருதச் சொல் மாறுபட்டுத் தமிழானது – தமிழ் என்ற சொல் தான் மாறுபட்டுத் திராவிட என்று ஆனது என்றும் கூறுகிறார்கள். த்ரவிட, திரமிட தரமிளா என்று மாறித் தமிள தமிழ் என்று ஆனது என்றும் இதை அப்படியே தலைகீழாக மாற்றியும் கூறுகிறார்கள்.
சௌத்து வருத்து என்பவர் தம் – மிழ் என்று பிரித்துக் காட்டித் தனது மொழி என்ற பொருள் வரும் என்கிறார். காமெல் சுவெலிபில் என்ற செக் மொழியாளர் தம் – இழ் தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி என்று பெயர் தர வல்லது என்கிறார். இப்படிப் பல வித முடிவற்ற ஆய்வுகள் உள்ளது.
இது தவிர தமிழை செம்மொழி என்றும் அங்கீகரித்தனர். 3000 ஆயிரம் ஆண்டுக்கு முன்னர் தமிழில் கிடைத்த ஒரே ஒரு மூல நூலான தொல்காப்பியத்தில் இந்த செம்மொழி என்ற சொல் இடம் பெற்றுள்ளதாம்.
இந்த செம்மொழி அந்தஸ்து என்ற சீரிய மொழி, சிறப்பு மொழி உலகில் பல மொழிகளிற்கு ஏற்கெனவே உள்ளது. உதாரணங்களாக சுமேரிய மொழி, ஆதி எகிப்து மொழி, ஆதி பாபிலோன் மொழி, கீப்றூ, சீன மொழி, கிரேக்க மொழி, சமஸ்கிருதம், லத்தீன், மண்டாயிக், சிரியா, ஆர்மீனியன், பேர்சியன் என்று பல.
செம்மொழி என்பது இன்னும் பல கருத்துடையது. சிறப்பு மொழி மிகப்பாரம்பரியானது, பழைமை இலக்கியங்கள் கொண்ட மொழியாக இருக்க வேண்டும். சுயம் இருக்க வேண்டும். வேறொரு பாரம்பரியத்தின் மொழி நிழல் அதில் படிந்திருக்கக் கூடாது. அப்படிப் பட்ட மொழியே செம்மொழி. இப்படிப்பட்ட திறமைகள் உள்ளதாலேயே தமிழ் செம்மொழியாக்கப் பட்டது. ஆனால் இது மிகக் கால தாமதமாகவே தமிழுக்குக் கிடைத்தது என்கிறார்கள்.
தமிழ் என்றால் இனிமை, எளிமை தொன்மையென பலவாகும்.
பல நாடுகளில் சிங்கப்பூர், மலேசியா, மொறீசியஸ், தென்னாபிரிக்கா, கயானா, பிஜி, ட்ரினிடாட் போன்ற நாடுகளில் தமிழ் இருந்தாலும் அவர்கள் அதைப் பேசுவதில்லை. ஆதலால் அங்கு இது அழிந்து படுகிறது. நாம் தமிழ் பேசுவோம்…அதை அழிக்காது பேணுவோம்.
வீட்டில் நாம் தமிழ் பேசுவதால் பிள்ளைகள் பல தொகையான தமிழ் சொற்களை தானாகவே பயில்கிறார்கள். அவைகளை வைத்து அவர்கள் மேலும் முன்னேற முடியும். இதனால் பேச்சுத் திறன் வளருகிறது. சொற்களஞ்சியம் அகராதி ஒன்று தம்முள்ளே கட்டப் படுகிறது, வளருகிறது. ஆடல், பாடல், நடிப்பு, வர்ணப் படங்கள் என்பன பிள்ளைகளின் ஆர்வத்தைத் தூண்டி தமிழைக் கற்க உதவுகிறது. பல் திறமை கொண்ட ஆசிரியர்களின் திறமை கெட்டித்தனம் இங்கு தேவைப் படுகிறது.
தமிழ் வீட்டில் பேசுவது மட்டுமல்லாது தமது தாய் நாட்டுத் தொடர்பு, தமிழ் சூழல் மிக அவசியம். இதற்கு உதாரணமாக எமது பேரன் ஒன்றரை வயதில் மலேசியா சென்று 3 கிழமை நின்று வந்தார். இங்கு கதிரையைப் பார்த்து நாற்காலி என்று கூறினார். அவரது அம்மா வழிப் பாட்டன் நாற்காலி என்று தான் பேசுவார் இதைப் பேரன் தன்னுள் தானாகவே உள் வாங்கிக் கொண்டார், எடுத்துக் கொண்டார். தமிழ் சூழல், தமிழ் நாடு முக்கியம் என்பதற்கு இதை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.
இதுதவிர பல மொழிகள் படித்தால் பிள்ளைகள் உருப்பட மாட்டார்கள் என்று சில பெற்றோர் தமது பிள்ளைகளின் பாதையில் தடை போடுவதும் உண்டு. இவை சரியல்ல பிள்ளைகள் சகல மொழிகளையும் அதற்கேற்றபடி கையாளுவார்கள். இதற்கும் எமது 4 வயதுப் பேரனை உதாரணம் கூறுகிறேன். தமிழ் ஆங்கிலம் டெனிஸ் மூன்றும் சமமாகப் பேசுவார். அடுத்து..
.
நாம் முழுக்க முழுக்க நமது பழைய இதிகாச புராண இராமாயணக் கதைகள் மூலம் வளர்த்தெடுக்கப்பட்டவர்கள். அவைகள் இன்றும் தேவையானவை சிறந்தவை என்று கூறுபவர்கள். இவை தமிழ் கல்வியில் தொடர வேண்டும்.
இறுதியாக ஆதிப் பழைய நூல் தொல்காப்பியம் இதுவே இன்று இலக்கணங்களை விளக்கும் நூலாக உள்ளது. தமிழில் எழதப் பட்ட காவியமாக சிலப்பதிகாரம் உள்ளது. இது கி.பி 200 – 300 காலப்பகுதியைக் கொண்டது. ஆத்திசூடி 1000 ஆண்டுகளிற்கு முன்னரும் திருக்குறள் சுமார் 2000 ஆண்டுகளிற்கு முன்னரும் இயற்றப் பட்டது.
தமிழ் பற்றி இங்கு சிறிதளவு பார்த்தோம். தமிழ் பற்றிப் பார்ப்பதை முடிக்கவே முடியாது. தோண்டத் தோண்ட திரண்டு கொண்டே வரும்.
(இஸ்ரேலில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் எழுதப்படடிருக்கும் தமிழ் மொழி)
இஸ்ரேல் நாட்டின் ஒலிவ மலையிலுள்ள தேவாலயத்தில் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளதாம் கர்த்தருடைய ஜெபம்.
இதில் இடம்பெற்ற ஒரே ஆசிய மொழி தமிழ் மொழி மட்டுமே .)சமீபத்தில் இதை வாசித்தேன்.
நன்றி இணையத் தளங்களிற்கு.
நான் தமிழிற்குச் சிறியவள்.
ஆயினும் தமிழ்மொழி என்ற தலைப்பில் 46 கவிதைகள் எனது இணையத் தளத்தில் பதிந்துள்ளேன். முழுவதும் நானே எழுதியவை. விரும்பினால் சென்று வாசிக்க முடியும்.
மேலும் தொடருவோம். பொறுமையாக இருந்து செவி மடுத்த அனைவருக்கும் இனிய நன்றிகள்.——————
silence

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஜூன் 06, 2016 @ 09:11:23

  தமிழின் பெருமையை நன்றாகச் சொல்லியுள்ளீர்கள் !

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜூன் 06, 2016 @ 12:51:05

  தங்களைப் போன்றவர்களால் தமிழ் வாழ்கின்றது சகோ.

  மறுமொழி

 3. கோவை கவி
  நவ் 01, 2016 @ 12:46:02

  Ratha Mariyaratnam :- தமிழுக்கு மகுடம் வைத்தாற் போல இருந்தது
  Unlike · Reply · 2 · 4 June at 22:16

  Vetha Langathilakam :- மிக நன்றியுடன் மகிழ்ச்சி சகோதரி ராதா.
  Like · Reply · 8 June at 09:43

  மறுமொழி

 4. கோவை கவி
  நவ் 01, 2016 @ 12:47:36

  சி வா :- இப்படியான ஒரு மொழி பேசும் சமூகத்தில் நான் பிறந்திருக்கிறேன் என்று நினைக்கும் போது மார் புடைத்து மீசை முருக்கேருகிறது..

  தலை வணங்குகிறேன் தமிழ் தாயே.. அன்புமிகு அன்னை வேதா இலங்காதிலகம்.. …See more
  Unlike · Reply · 1 · 9 June at 14:26 · Edited

  Vetha Langathilakam :- nanry siva. எல்லாப் பெருமையும் தமிழுக்கே
  Like · Reply · 1 · 9 June at 14:49

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: