4. கவியரங்கம் 4வது எத்தனம்

op

 

4-6-2016

 21வது கவியரங்கம் 4வது எத்தனம்

தமிழ் வணக்கம்.
திராவிட மொழிக் குடும்பத்து முதல் மொழியே
செம்மொழியே! உலகின் பதினெட்டாம் இடத்து மொழியே
மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபு கொண்ட மொழியே பணிவான வணக்கம்! என்னோடு கவியரங்க மொழி பேசத் துணையாகுவாய்.
கவியரங்கத் தலைமை வணக்கம்!
திருமதி நிர்மலா கிருஷ்ணமுர்த்தியின் தகைமைகளைப் போற்றி அவரது தலைமைக்கு நிறை வணக்கம் இனிய வாழ்த்துகளுடன் அன்பு நன்றியும். அருமையான தலைமையுரைக் கவிதை. மிக ரசித்தேன் நன்றி.
சபை வணக்கம்
நம் வித்தாரங்களைப் பொறுமையுடன் கேட்க ஆவலாகக் காத்திருக்கும் பல் துறை வித்தகராம் சபையோரே அன்பு வணக்கம்
நிலாமுற்ற நிர்வாகமே குழுவினரே உங்களிற்கும் வணக்கம்.
வசந்தமாக வரும் எனது துணைத் தலைப்பு வசந்த காலப்
பள்ளிக்காலம்.
——————————————–
மண்ணில் அகரமெழுதி, மனப்பாடம் செய்து
எண்ணி விரல்களோடு கணக்கு கலைகளும்
வண்ணக் கைவேலைகளோடு பழகிய பசுமைப்
பள்ளிக் காலமெனக்கு மூன்றரையிலிருந்து பதினாறுவரை.
திருக்குறள் மனனம் பேச்சுப் போட்டி
திருவுடை நடனம் சங்கீதம் விளையாட்டு
பெருமையுடன் வாழவைத்த பள்ளி இனிமை.
வருவதினிப் புலம் பெயர்ந்த பள்ளி.
நாற்பதகவையில் வேற்று மொழக்p கலாச்சாரம்
ஏற்றது டெனிஸ் மொழிப் பள்ளி.
முற்றாக மூன்று வருடங்கள் முடிய
பற்றுடன் புகுந்தது செமினாறியப் பள்ளி.
பாலர் பராமரிப்பு – நர்சரி ஆசிரியர்
பயின்றது மூன்று வருடங்கள் வியப்பில்!
பாலகாலமல்ல! திக்குத் தெரியாத காட்டில்.
புதிது படிப்பு, பயிற்சியார்வம் அத்தனையும்!
சுயமான சிந்தனை, கணிப்பு மாறுபட்டது.
சுகமாய் கட்டுரையானாலும் வேற்றுமையாய் தன்
சுயகோண விரிப்பு வாய்மூலம் – அறியாவுலகு
விரிந்தது, அருமை, அனுபவம் புதிது.
இன்னும் சொல்லலாம், நேரமில்லை, வரிக் கட்டுப்பாடு.
நன்றி வரிகள்.
—————————————-
அரிய இவ்வாய்ப்;பிற்கு, பொறுமையாய் கேட்ட அவையோருக்கு, நிர்வாகத்திற்கு, தலைமைக்கு அனைவருக்கும் மிக்க நன்றி
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
4-6-20116.
purtyflwrsbr

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  ஜூலை 13, 2016 @ 01:15:59

  பள்ளிக் காலம்
  மறக்கக் கூடியதா
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜூலை 13, 2016 @ 03:47:05

  வார்த்தைக் கோர்வைகள் அருமை சகோ வாழ்த்துகள்
  பள்ளி வாழ்க்கை சுகமானதே…

  மறுமொழி

 3. Bagawanjee KA
  ஜூலை 13, 2016 @ 04:12:44

  அன்று பொற்காலம் ,இன்று போதாத காலமோ 🙂

  மறுமொழி

 4. கோவை கவி
  நவ் 14, 2016 @ 16:43:19

  Vetha Langathilakam Sumathi Shankar :- போட்டிகள் பல நிறைந்த காலமல்லவா அது. நீயா நானா
  Unlike · Reply · 3 · June 4 at 3:43pm 2016

  Vetha Langathilakam :- unmai sakothary nanry
  Like · Reply · 3 · June 4 at 3:45pm

  Naga Paramaguru :- பள்ளிப்பருவத்தை
  பறைசாற்ற பக்கங்கள்
  சில போதாதென்பது
  உண்மையே…

  அருமை சகோ…
  Like · Reply · 2 · June 4 at 4:04pm 2016

  மறுமொழி

 5. கோவை கவி
  நவ் 14, 2016 @ 16:44:31

  Vetha Langathilakam Nirmala Krishnamoorthy :- பள்ளியில் படித்தீர்
  இளமையில் கல்எனும்
  பசுமை நினைவுகள்!

  பணியும் பள்ளியில்
  சம்பளப் பணத்தால்
  நிறைவுற்றன கனவுகள்!

  வாழ்க்கையே பள்ளியானதால்
  வசந்தமும் அதுதான்!

  உங்கள் க(வி)தை தனிக் கதை!
  டென்மார்க் பால்போல் இனித்தது!

  நன்றி!
  Unlike · Reply · 4 · June 4 at 4:14pm · 2016

  கோவி சிவகணேசன்:- படித்த பள்ளிகளை வரிசைபடுத்தி படைத்த கவிதை
  வெகு விமர்சியான நினைவுகள்
  Like · Reply · 2 · June 4 at 4:26pm

  மறுமொழி

 6. கோவை கவி
  நவ் 14, 2016 @ 16:45:40

  Vetha Langathilakam Inthrani Rani :- பள்ளிக்காலங்கள்
  பயணமாய்….
  நினைவுகளில்…
  Like · Reply · 2 · June 4 at 4:55pm

  Amala Jeysingh :- பள்ளிக்காலம் அழகியச் சொல்லில் சொல்லிய கவி. சிறப்பு
  Like · Reply · 1 · June 4 at 5:01pm

  Vedhai Supa Sathiya :- அற்புத சொல்லாடல்
  அமிழ்தென வழிகிறது
  பெரும் சுவை
  நினைவுகளை மீட்டெடுத்தீர்
  மகிழ்வோடு அதை தொடுத்தீர்
  அழகியல் கோர்வை
  Like · Reply · 1 · June 4 at 5:09pm

  மறுமொழி

 7. கோவை கவி
  நவ் 14, 2016 @ 16:46:50

  Muthupet Maran :- அருமை கவியே
  Like · Reply · 2 · June 4 at 5:15pm

  Vetha Langathilakam :- உண்மையில் பணிக்காலம் இனிமை .
  ஆனால் இது வித்தியாசமான பள்ளிக்காலம்.
  முதல் தமிழ் பெண்ணாக இந்தப் படிப்பை …See More
  Like · Reply · 2 · June 4 at 5:24pm

  கவிஞர் பாலு கோவிந்தராஜன் :- அருமை அருமை கவிஞரே
  Like · Reply · 1 · June 5 at 4:23am

  Andal Saravanan :- அனுபவத்திற்கு ஆரம்ப காலம்
  பள்ளிக் காலம் அருமை அருமை ..
  Like · Reply · 1 · June 5 at 6:06am

  மறுமொழி

 8. கோவை கவி
  நவ் 14, 2016 @ 16:49:54

  Vetha Langathilakam Vetha Langathilakamஎல்லோருக்கும் மிக்க நன்றி – மகிழ்ச்சி
  Like · Reply · June 5 at 10:28am

  Jeyam Thangarajah நிலா முற்றத்தில்
  உலா வந்த,
  விழாக்காலத்தை
  துலாவித் தந்தீர் .
  குலா கொண்டது சிந்தை .
  Unlike · Reply · 1 · 25 June at 20:15

  Vetha Langathilakam நன்றி சகோ கருத்திடலிற்கு.
  Like · Reply · 25 June at 21:23
  Subajini Sriranjan மிக அருமையான கவி அரங்கம் கேட்டேன்
  Unlike · Reply · 1 · 26 June at 21:23

  Vetha Langathilakam nanry sis….
  Like · Reply · 26 June at 22:52

  Punitha Ganesh பள்ளிக் காலங்களைத் தவறாது ஒப்புவித்து விட்டீர்கள் ஓர் சுய சரிதை போல்
  Unlike · Reply · 1 · 27 June at 00:13

  Vetha Langathilakam Mikka nanry sis..
  Like · Reply · 27 June at 09:03

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: