454. கொடுமை

 

IndiaTvaf999d_beat

 

கொடுமை

கிழிந்த ஆடையூடாகத் தெரியும் உடல்
பழிக்கும் பார்வை தெளிக்கும் காமம்
விழித்துப் பல்லிளிக்கும் சதை வெறி
முழிக்கும் சுயபசிக் கொடுமை வறுமை.
***
கிள்ளும் பசி தீர்க்க சில்லறை
அள்ளி வாங்கிக் கண்டவன் படுக்கை.
கொள்ளையாகும் இளமையின் வறுமை கொடுமை
பிள்ளைகள் பசியால் துடித்தல் கொடுமை
***
உடல் பலமிழக்க கொடிய நோய்கள்
கடலாய் உள்ளே புகுந்து வதைக்கும்.
கொள்ளைப் பிள்ளைகள் கருப்பையில் அழியும்
சிசு மரணக் கொலைகள் ஏராளம்.
***
பசியால் திருட்டு, பொய், சூது,
போதை, மதுவாம் குற்றங்கள் பெருகுதல்
கொடுமை! தீப்பெட்டியாய் அடுக்கு வீடுகள்
தொழிற்சாலைகள் ஏன் வறுமையை ஒளிக்காது!
***
பாலியல் என்னவென்று அறியாத குழந்தைக்கு
பாலியல் கொடுமை ஆறு வயதிலாம்!
பெரியவரே சிறுவருக்கு வீட்டில் இழைக்கும்
மிருகத்திற்கு நிகரான பாலியல் கொடுமை!
***
மனிதப் பாதுகாவலரே குழந்தைகள் பெண்களை
மானபங்கப் படுத்தும் கொடுமை வேலியே
பயிரை மேயும் சீரழிந்த கொடுமை
மனிதமிழந்த மனிதனின் சுயநலமோ இது!
***
ஒன்றா இரண்டா! சாதி வெறி
கௌரவக் கொலை, வரதட்சணை அதனால்
தட்சணை கேட்டல், பெற்றவர் கண்ணீர்,
மணமாகாத முதிர்கன்னிகளாகத் தொடரும் கொடுமைகள்.
***
கொடுமையாம் அநீதி, பாவம், தீமை
முரட்டுத் தன்மை, மனக்கோட்டம், வளைவென
கொடுமையே உலகை ஆள்கிறதோ! என்று
கொள்ளி வைப்பது எப்போது இக் கொடுமைக்கு!
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
14-7-20116
Unavngivet

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  ஜூலை 16, 2016 @ 08:15:39

  இன்றைய சமூக அவலங்கள் இப்படித்தான் இருக்கின்றது சகோ மனிதநேயம் செத்து விட்டது.

  மறுமொழி

 2. Nagendra Bharathi
  ஜூலை 18, 2016 @ 03:15:05

  கொடுமை

  மறுமொழி

 3. கோவை கவி
  நவ் 14, 2016 @ 21:35:32

  16 You, Kannadasan Subbiah, Sahana Sahana and 13 others
  Comments
  ஒரத்தநாடு நெப்போலியன் :- வாழ்த்துக்கள்,,,,
  Like · Reply ·14-7-2016

  Vetha Langathilakam:- Mikka nanry.
  Like · Reply · 15 July at 14:43

  Dharma Ktm :- arumai akka
  Unlike · Reply · 1 · 15 July at 14:43

  Vetha Langathilakam :- mikka nanry Dharka..makilchchy.
  Like · Reply · 15 July at 14:44

  மறுமொழி

 4. கோவை கவி
  நவ் 14, 2016 @ 21:38:20

  Dharma Ktm :- arumai akka
  Unlike · Reply · 1 · 15 July at 14:43

  Vetha Langathilakam:- mikka nanry Dharka..makilchchy.
  Like · Reply · 15 July at 14:44

  அருள் நிலா வாசன்:- அருமை…வாழ்த்துக்கள்
  Like · Reply · 15 July at 14:45

  Vetha Langathilakam:- மி;க நன்றி சகோதரி.
  கனகாலமாக தங்கள் பெயர் முகநூலில்
  நான் காணவில்லை
  இரண்டு நாட்களின் முன்பு தான் கண்டேன்.
  Like · Reply · 1 · 15 July at 14:53

  Maniyin Paakkal:- கொடுமை. வலிமிகு பா
  Unlike · Reply · 1 · 15 July at 14:48

  Vetha Langathilakam :- வலிமிகு பா தேர்வில் எடுபடவில்லை.
  கருத்திடலிற்கு மிக்க நன்றி சகோ
  Like · Reply · 1 · 15 July at 18:08

  மறுமொழி

 5. கோவை கவி
  நவ் 14, 2016 @ 21:41:18

  Rathy Mohan:- வலி மிகுந்த வரிகள்.,.
  Unlike · Reply · 1 · 15 July at 17:31

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி ரதி
  Like · Reply · 15 July at 18:09 · Edited

  Subajini Sriranjan:- பெண்ணினம் அனுபவிக்கும் கொடுமை எல்லாம் வரிகளில் வலிகளாக…
  Unlike · Reply · 1 · 15 July at 18:01

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி Suba.
  Like · Reply · 15 July at 18:10

  Ratha Mariyaratnam :- அருமையான வரிகள் வலிகளுடன்
  Unlike · Reply · 1 · 15 July at 18:09

  Vetha Langathilakam :- மிக்க நன்றி மகிழ்ச்சி Ratha.
  Like · Reply · 1 · 15 July at 18:10

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: