6. 25வது கவியரங்கம்.

 25வது கவியரங்கம்.

(6வது எத்தனம்.)

தமிழ் வணக்கம்————————————————– வாழ்க்கைச் சிகரம் வசப்பட……
என் சிறகுகள், என் மூச்சு என்னுயிரான ஏணியாம் தமிழ் இன்பத் தமிழுக்கு வணக்கம் உலகின் முகடு, கூரையில் திபெத்தின் தலைநகர் லாசா விமான நிலையத்தில் இன்பத்தமிழ். தமிழ் தொல் கவிஞராம் ஒளவைப்பிராட்டி அருளிய ” கற்றது கையளவு கற்காதது கடலளவு” என்ற வாசகம் தமிழில் பொதிக்கப் பட்டுள்ளதாம். அத்தகைய தமிழுக்கு மீண்டும் வணக்கம் தலைமை வணக்கம்…………………………………. மிரட்டும் தகைமைகள், விருதுகள் ஏந்திய அண்ணலே! பல் திறமைத் தலைவரே! 25ம் கவியரங்கத் தலைமைப் பெருமையாளரே! வணக்கம். நிலாமுற்றம் தங்களாலும் பெருமையடைகிறது. விசேட உறவான 25ம் கவியரங்கத் தலைமைக்கும்
வாழ்த்துகளுடன் வணக்கமும். சபையோரே சான்றாளரே வணக்கம்.—————————————- நல்லது கெட்டது கூறி சபையை நேராக்கும் பல்லறிவு திறமை கொண்ட அன்புடையோரே இனிய சபையோரே விமரிசனத்தின் மூலம் அறிவு புகட்டி அரவணைக்கும் எல்லோருக்கும் வணக்கம்.

வாழ்க்கைச் சிகரம் வசப்பட அறிவு புகட்டும் ஆசான், சுழன்று மிரட்டும் சூழல்;, சுற்றி உதவும் கரங்களான உறவு, நானிலம் போற்றும் நட்பு, பாதையெங்கும் கிடைக்கும் பாடங்கள் உதவுதல் உண்மை. நானிங்கு எடுத்த தலைப்பு:——– குன்றா அரவணைக்கும் குடும்பம்—————————————————-———–

ஆச்சரியப்படலாம் பலர்! ஆதியில் குழந்தையாய் பெற்றோர் அணைப்பில் அகரப் படி – எழுந்தோம். அனைத்தும் தலைகீழ் மாற்றமாய் 42வயதில் புலம் பெயர்வு. நாலா விதமும் கலங்கும் மாற்றம். மொழி கலாச்சாரம் கடுமையாய் எம்மைப் புரட்டிப் போட்டது. கலங்காது டெனிஷ் மொழி படித்துயர்ந்தோம். பதின்ம வயதுப் பிள்கைள் அப்பா அம்மா பாடம். ஒரே வகுப்பில் மொழி நாமே ஒருவருக்கு ஒருவர் துணை. அகராதி பெரும் துணை ஆங்கிலத்தோடு. நம்பிக்கை பெருந்துணையோடு சிகரம் நோக்கி. பின் பாலர் பராமரிப்பு நர்சரி ஆசிரியையாக 3 வருடம் படிப்பு. வட்டமாக நின்று படிக்கும் போது டெனிஷ் ஆணுடன் கை கோர்க்கும் நிலை. நான் நழுவி விலகினேன்.(பயிர்ப்பு – பழக்கமில்லை)) அவன் அவமான உணர்வில் முகம் சிவந்தான். வீட்டில் கலந்து பேசினேன். இப்படியானால் படிப்பை நிறுத்துங்கள் அம்மா என்றாள் மகள். அப்பா புன்னகைத்தபடி. அன்பான ஆதரவுடன் தொடர்ந்தேன். இப்படிப் பல. தாறுமாறான பிள்ளைகள், குடிகாரக் கணவரென்றால் என்னால் முன்னேற முடியாது. கோயிலான குடும்ப அரவணைப்பு கோகுலமாகக் கோலோச்ச உதவியது. கோப்பெருந்தேவனும் இளவரசன் இளவரசியும் செங்கோல் கோணாமல் பாதுகாத்தனர். அவர்களிற்கு ஆண்டவனிற்கும் நன்றி.;
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 2-7-2016.
13501893_1048738495217622_6595386679914587423_n
paperclips

கண்ணதாசன் சிறப்புச் சான்றிதழ் 3

13615133_1726950080907624_7265839992127459924_n

நெஞ்சில் தைச்ச முள்.

அஞ்சிடும் வீரமற்ற நெஞ்சிற்கு
நெஞ்சில் தைக்கும் முள்ளாக
பஞ்சில் பற்றும் நெருப்பாக
பஞ்சமற்ற முட்கள் உலகில்.

***

உறவுகள் நண்பர்களின் அழுத்தும்
செயல்கள், வார்த்தைகள் முள்ளாகி
ஈட்டியாய் குத்துகின்ற தாக்கம்
உறுதியற்ற நெஞ்சில் ஆழமாயறையும்.

***

காதலழிவு, தாய்மையின்மைப் பழி,
வறுமைத் தாக்கம், கற்பழிப்பு,
நட்புத் துரோகம் கொலையென
முள்ளிலே முள்ளோடு வாழ்கிறோம்.

***

நாட்டுப் பற்றாளருக்கு
நாக விடம் போன்ற இன இழிவு
நாளும் நெஞ்சில் தைக்கும் முள்
ஒன்றல்ல ஓராயிரமிதயங்களின் தாக்கம்.

***

நாயினும் கீழானவன் என்போம்
நாட்டுப் பற்று இல்லாதவனை.
நாடே நாசமான துன்பம்
நாளும் நெஞ்சில் தைத்த (தைக்கும்) முள்.

***

முள் முறிந்து கன்றியதும்
முழுக் குடும்பம் அழிந்ததுவும்
முழுவதும் மொழியவியலா வேதனை.
இது மட்டுமல்ல இன்னுமின்னும்.

***

மாதரிழிவால் காயமுறும் மனங்கள்
மாபெரும் நட்டம் குமுகாயத்திற்கு.
வலிவுடையோன் வாகாய்ச்; சமாளித்து
முள் நீங்கி முதுகுயர்கிறான்.

***

முள் தைத்து முன்னேறுதலும்
முழதாய் அழியும் தற்கொலையாய்
முற்றுப் புள்ளி வைப்பவரும்
முளைத்து எழுவதுமாய் தாக்கங்கள்.

***

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.

 
vector_146.cdr

455. 1. குறுங்கவிதைகள்.

13315390_1773841949568718_1145086696437252828_n

ஒரு வரிக்கவிதை – – 31-5-16

தின ஓழுக்கம்.
***
1 வண்ண முருகே! வடிவழகுச் சொக்கனே!
எண்ணெய் குளியல் தின ஒழுக்கம்.
கண்ணே நீந்து காலில் வழுக்கும்.
திண்மை பலமுன் தேகம் பெறும்
வெண்மைச் சங்காய் நீ மினுமினுப்பாய்
————————————————————–
13307483_295973140742029_4897888745222202568_n
இருநிதி . சங்கநிதி – பதுமநிதி)
இருநிதியும் ஈடாகாது
இந்த அன்பிற்கு.
இருடா செல்லம்!
இப்படியே ஆடாமலிரு!
இருத்தித் தலைவாருமண்ணன். 2-5-16 படவரி
———————————————
13310332_1866375943589971_3850816015450162176_n
ஒரு வரிக்கவிதை 2-6-2016
யான் நோக்க வேற்றிடம் நோக்குதல்
யான் நோக்காக்கால் எனை நோக்குதல்
யாவுயிர்க்கும் பொருந்தும் காதல் இலக்கணமோ!
இலக்கணம் மாறாத சாசுவதக் காதல்!
இணையே!இல்லறப் பூங்கா அமைப்போமா!
வேதா. இலங்காதிலகம். டென்மார்க்.—————————-
ssssssss-c

28. பா வேந்தர் பாரதிதாசனார்

15+12+s2

பாரதிதாசனார்

சமுதாயச் சிந்தனைக்கு வித்திட்டவர்
பாட்டுக்கவி பாரதிதாசனார் என்று கூற வந்துள்ளேன்.

ஒன்றே சமூகமெனும் சகோதரத்துவம் பற்றி எழுதினார்
சமதர்மத்தால் வாழ்வோம்.
நேசத்தால் ஒன்றாய் நிற்போம் என்றார்.
புதிய உலகம் என்று உலக ஒற்றுமை வரிகூறி
தாமும் தமர்களும் வாழ்வதற்கே என்று
பேரிகைகொட்டி எழுதினார். கூடித் தொழில் செய்க
வாழ்வினிலே உயர்வு கொள் ஆய்ந்து பார்!
மானிட சக்தி பெரிது! முன்னேறு என்றார்.

எழுச்சியுற்ற பெண்கள், மூடத் திருமணம்
குழந்தை மணம் கொடுமையென்றெழுதினார்
பெண்ணக்கு நீதி, குழந்தைப் பேறு
மரணம் தவிர்க்க காதலுக்கு வழி வைத்து
கருப்பை வழி சாத்துவோமென்று
கர்ப்பத் தடைபற்றி அன்றே கூறினார்.

தமிழின் இனிமை, உணர்வு,
தமிழ் வளர்ச்சி தமிழ் காதலென
தமிழ் சங்ங நாதம் முழக்கினான்.
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
என்ற கலங்கரை விளக்க சங்கு நாதம்.

மயில், முல்லை, சூரியன்ஈ காடு
கானல் என்று பணம் கொடுத்து
வாங்காத மருத்துவமாம் இயற்கைக் காட்சி
இன்பம், மக்கள் நிலையை எழுதினான்.
இதனால் மனநலன் சிறந்து
சமுதாய நலன் பெருகுமன்றோ!

எளிய நடையில் தமிழ் நூல் எழுத வேண்டும்.
ஒரு தமிழன் படிப்பில்லை என்றால்
நாணிட வேண்டுமென்றான். இலவச
நூற் கழகம் எவ்விடமும் வேண்டுமென்றான்.
தமிழில்லா பிறமொழி நூல்கள்
தமிழாக்கி வாசிக்கத் தரவேண்டுமென்றான்.

உலகின் சிறந்த ஒளடதம் ஒவ்வொரு
மனிதனுக்கும் மாபெரும் தேவையான
காதலைப் பற்றி 120க்கும் மேற்பட்டு கவிவரிகள்
எழுதினார். என் அத்தான் பொன் அத்தான்
என்றெழுதினார். இதைக் கவிஞர் கண்ணதாசன்
அத்தான் என் அத்தான் என்று பாடி வைத்தார்.

இப்படியாக இன்னும் பல உண்டு! நாடு முன்னேற
மக்கள் நலன் முன்னேற, நல் சமுதாயச்
சிந்தனைக்கு பாரதிதாசனார் பெரிதும் வித்திட்டார்.

https://kovaikkavi.wordpress.com/2014/05/19/18-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-2/

https://kovaikkavi.wordpress.com/2016/08/06/28-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/

12965393-set-of-gold-dividers

5.கவியரங்கம் 23 (18-6.2016) 5வது எத்தனம்.

 

கவியரங்கம் 23 (18-6.2016) 5வது எத்தனம்.

தமிழே வணக்கம்———————-
பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.
இவை அகத்தியம் தொல்காப்பியம் பதினெண் மேற்கணக்கு பதினெண் கீழ்க்கணக்கு ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகும்… என்ற தகவலுடன்
பெற்றவர் தந்த தமிழல்லவா
பெட்டியில் பூட்டாது பெருக்கி
பெருங்காயமாய் மணக்க
பெருமையுடன் உலாவ விடுகிறேன்
பெருவனமாய் – (கடலாய்) பெருகட்டும் தமிழ். வணங்குகிறேன்.
தலைமை வணக்கம் ——————————————
தலைவர் வேதை சுப சத்தியாவிற்கு அன்பான வணக்கம்.
கவியரங்கம் சிறந்து மிளிர இனிய வாழ்த்துகளுடன் வணக்கம்.
சபையோரே —————————————–
அன்பு நிலாமுற்ற அங்கத்தவர்களே வணக்கம்.
சறுக்குதலின்றி கைகொடுக்கும் சபையோரே சந்தணமாய் தமிழ் மணக்க ஆதரவு தரும் உறவுகளே எல்லோருக்கும் அன்பு வணக்கம்.
தலைப்பு ————பெற்றோர்கள் என்பதில் ஒரு தடவையே இவர்கள் பிறக்கிறார்கள். மீண்டும் பிறப்பதில்லையிவர்கள். முதுமையில் இவர்கள் குழந்தைகளே. இவர்களை அணைத்துக் கொண்டால் முதியவர் இல்லம் தேவையில்லை என்று கூறி எனது தலைப்பாக
மீண்டும் பிறப்பதில்லை ————————————-
எனும் தலைப்பை எடுத்துள்ளேன்.
கடமைகள் என்று பணிகளை
உடைமைகள் ஆக்கி இயங்குதலே
மடைமையற்ற வாழ்வென்று பெற்றோர்
வடமெனப் பிடித்தெமை வளர்த்தனர்.
படமாய் அவற்றையழகு படுத்தலே
திடமான சொத்தாம் எம் கடமை.
***
எண்ணங்களால் நமக்கு நன்மையாய்
திண்ணமாய் பிறருக்கும் தீங்கெண்ணாது
வண்ணமாய் எம்மை வளர்த்தார்கள்.
விண்ணேகிய பெற்றோரின் குணநலன்கள்
தினமும் விரிகிறது மனதில்
வானவில் வண்ணங்களாக அழகாய்.
***
ஊக்கமும் ஆக்க உணர்வுக்கு
நீக்கமற நான் நினைப்பதுவென் பெற்றோரையே.
நீண்டு தொடர்கிறதென் பிள்ளைகளுடாக.
ஆக்கமுடன் நாம் நடப்பது எப்போதும்
ஊக்கமாகும் எம் பிள்ளைகளுக்கும்.
காக்குமிச்செயல் எமது நம்பிக்கையை.
***
நிறம்பெற்று வாழ வழி காட்டிய சிறந்த
பெற்றவரை எண்ணி, வாழ்வதற்காகவே
பிறவி பெற்றேன் நான்
வளர்ந்தேன்- உயர்ந்தேன்-
***
நன்றி……………….
களம் தந்து வளம் பெறச் செய்யும் உங்கள்
எல்லோருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை
வாயார மொழிகிறேன: நன்றி…நன்றி….
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-6-2016.—-
13435412_1553843181578876_2277001488952134744_n