5.கவியரங்கம் 23 (18-6.2016) 5வது எத்தனம்.

 

கவியரங்கம் 23 (18-6.2016) 5வது எத்தனம்.

தமிழே வணக்கம்———————-
பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.
இவை அகத்தியம் தொல்காப்பியம் பதினெண் மேற்கணக்கு பதினெண் கீழ்க்கணக்கு ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறு காப்பியங்கள் ஆகும்… என்ற தகவலுடன்
பெற்றவர் தந்த தமிழல்லவா
பெட்டியில் பூட்டாது பெருக்கி
பெருங்காயமாய் மணக்க
பெருமையுடன் உலாவ விடுகிறேன்
பெருவனமாய் – (கடலாய்) பெருகட்டும் தமிழ். வணங்குகிறேன்.
தலைமை வணக்கம் ——————————————
தலைவர் வேதை சுப சத்தியாவிற்கு அன்பான வணக்கம்.
கவியரங்கம் சிறந்து மிளிர இனிய வாழ்த்துகளுடன் வணக்கம்.
சபையோரே —————————————–
அன்பு நிலாமுற்ற அங்கத்தவர்களே வணக்கம்.
சறுக்குதலின்றி கைகொடுக்கும் சபையோரே சந்தணமாய் தமிழ் மணக்க ஆதரவு தரும் உறவுகளே எல்லோருக்கும் அன்பு வணக்கம்.
தலைப்பு ————பெற்றோர்கள் என்பதில் ஒரு தடவையே இவர்கள் பிறக்கிறார்கள். மீண்டும் பிறப்பதில்லையிவர்கள். முதுமையில் இவர்கள் குழந்தைகளே. இவர்களை அணைத்துக் கொண்டால் முதியவர் இல்லம் தேவையில்லை என்று கூறி எனது தலைப்பாக
மீண்டும் பிறப்பதில்லை ————————————-
எனும் தலைப்பை எடுத்துள்ளேன்.
கடமைகள் என்று பணிகளை
உடைமைகள் ஆக்கி இயங்குதலே
மடைமையற்ற வாழ்வென்று பெற்றோர்
வடமெனப் பிடித்தெமை வளர்த்தனர்.
படமாய் அவற்றையழகு படுத்தலே
திடமான சொத்தாம் எம் கடமை.
***
எண்ணங்களால் நமக்கு நன்மையாய்
திண்ணமாய் பிறருக்கும் தீங்கெண்ணாது
வண்ணமாய் எம்மை வளர்த்தார்கள்.
விண்ணேகிய பெற்றோரின் குணநலன்கள்
தினமும் விரிகிறது மனதில்
வானவில் வண்ணங்களாக அழகாய்.
***
ஊக்கமும் ஆக்க உணர்வுக்கு
நீக்கமற நான் நினைப்பதுவென் பெற்றோரையே.
நீண்டு தொடர்கிறதென் பிள்ளைகளுடாக.
ஆக்கமுடன் நாம் நடப்பது எப்போதும்
ஊக்கமாகும் எம் பிள்ளைகளுக்கும்.
காக்குமிச்செயல் எமது நம்பிக்கையை.
***
நிறம்பெற்று வாழ வழி காட்டிய சிறந்த
பெற்றவரை எண்ணி, வாழ்வதற்காகவே
பிறவி பெற்றேன் நான்
வளர்ந்தேன்- உயர்ந்தேன்-
***
நன்றி……………….
களம் தந்து வளம் பெறச் செய்யும் உங்கள்
எல்லோருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை
வாயார மொழிகிறேன: நன்றி…நன்றி….
***
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
18-6-2016.—-
13435412_1553843181578876_2277001488952134744_n

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. JAYAKUMAR K
  ஆக 06, 2016 @ 01:18:50

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 2. கோமதி அரசு
  ஆக 08, 2016 @ 07:44:26

  வாழ்த்துக்கள் சகோதரி.

  மறுமொழி

 3. கோவை கவி
  பிப் 02, 2017 @ 13:40:03

  மிக்க அன்பும் நனறியும் சகோதரி

  மறுமொழி

 4. கோவை கவி
  பிப் 02, 2017 @ 13:54:27

  சுதா பத்மநாதன் :- அருமைமா
  மீண்டும் பிறப்பதில்லை
  இனிமை
  Unlike · Reply · 2 · 18 June at 19:18

  Amala Jeysingh :- விண்ணேகிய பெற்றோரின் நினைவுகள் இன்றும் மறவாது …
  அனுபவமும் அவை அறிவுரையாகவும் …
  அருமை சகோதரி
  Unlike · Reply ·
  Like · Reply · 25 July 2016 at 14:53

  Vetha Langathilakam :- மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே Sutha .P and Amala.J
  Like · Reply · 25 July 2016 at 22:58 · Edited

  மறுமொழி

 5. கோவை கவி
  பிப் 02, 2017 @ 13:56:09

  Vedhai Supa Sathiya :- அடடா
  சிறு வலியிருந்தும் தாங்கிடத் தகுமோ
  பெரும் மகிழ்வது இருந்தும்
  உணர்தல்
  வருமோ..
  இருக்கார் இருக்கும் வரைதானே
  உலகம் உன்னை வசீகரிக்கு மென்ற
  தத்துவக் கோர்ப்பை மீண்டும் பிறப்பதில்லை யென்ற நோக்கில்
  அழகாக கையாண்டீர்..
  சீர்மிகு வரிகள் என்
  சிந்தனையைக் கிளர்ந்தது
  தலைப்பதில் ஒத்து சிறப்பாக பயணித்தீர் மகிழ்கிறேன் கவியே வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 2 · 19 June at 03:06 · Edited

  தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை:- அற்புத பிறப்பன்றோ
  Like · Reply · 25 July 2016 at 14:54

  Vetha Langathilakam:- மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே..
  Like · Reply · 25 July 2016 at 22:57 · Edited

  மறுமொழி

 6. கோவை கவி
  பிப் 02, 2017 @ 13:59:44

  Muthupet Maran
  Unlike · Reply · 1 · 19 June at 05:23

  கவிஞர் பாலு கோவிந்தராஜன்
  Unlike · Reply · 1 · 19 June at 06:35

  Muthupet Maran :- சிறப்பான கவிதைப் படைத்த உங்களுக்கு நிலாமுற்றத்தின் வாழ்த்துகளும் நன்றியும்…
  Like · Reply · 19 June at 13:23

  Vetha Langathilakam :- சுதா பத்மநாதன் – Amala Jeysingh – vedai Supa Vedhai Supa Sathiya – தஞ்சைத்தரணியன் முத்துப்பேட்டை – Muthupet Maran – கவிஞர் பாலு கோவிந்தராஜன்மிக்க நன்றியும் மகிழ்வும் உறவே
  Like · Reply · 25 July 2016 at 17:44 · Edited

  Genga Stanley:- : nala kavi.
  Unlike · Reply · 1 · 25 July 2016 at 21:33
  Vetha Langathilakam
  Vetha Langathilakam:- மி க்க நன்றியும் மகிழ்வும் உறவே Genga Stanley

  மறுமொழி

 7. கோவை கவி
  ஏப் 25, 2019 @ 13:31:14

  கோவி சிவகணேசன் :- மீண்டும் பிறப்பதில்லை பெற்றோர்
  அவர்கள் மாண்டு போகும்முன்
  அவர்களுக்கு தொண்டு செய்தல்
  பிள்ளைகளின் பிறவிக் கடன்
  என கவிபடைத்த வேதா இலங்கத்திலகத்திற்கு
  வெற்றித் திலகம்
  அருமை மா
  · June 18 -2017
  Vetha Langathilakam :- சகோதரா என் கணவர் பெயரை
  இலங்காதிலகம் என்று – இ னா போட்டு
  உடன் மாற்றிவிடுங்கள் அவர் .கவலைப் படுவார்.
  ல னாவில் பெயர் வராது…In english only L…….Mikka nanry sakothara,.
  June 18-2017
  கோவி சிவகணேசன் :- மன்னித்து விடுங்கள் அம்மா
  மாற்றியது சரியா?
  June 18 2017
  Krishna Murthy :- பொதுவாக ல,ர,எனத்தொடங்கும் பெயர்களுக்கு முன்னால் இ சேர்ப்பது வழக்கம்.ஏனென்று எனக்கும் தெரியாது்
  · June 18 2017
  கோவி சிவகணேசன்:- நன்றி ஏற்றுக்கொள்கிறேன்
  சுட்டிக்காட்டியதால்
  எனது தலையில் நானே..குட்டுபோட்டுக் கொள்கிறேன்
  June 18 – 2017
  Krishna Murthy:- இல்லை சகோ! இங்கு எல்லோரும் மாணாக்கரே!
  · June 18 – 2017

  Vetha Langathilakam :- இலட்சுமணன்…. Nanry kovi…
  Amala Jeysingh :- ல,ர எனத்தொடங்கும் சொற்கள் வடமொழியிலிருந்து வந்த சொற்கள் ஆதலால் இவற்றுக்கு முன்னால் இ போட வேண்டும் என்பது கட்டாயம் . வேறு காரணங்கள் இருக்குமேயானால் பகிர்ந்தால் யாவரும் தெரிந்து கொள்ளலாம் .
  June 18 – 2017

  Vedhai Supa Sathiya :- உண்மைதான் உறவுகளே
  சிறு சிறு பிழைகள் தெரியாது நேர்கையில் அதில் மழிந்த உண்மைகள் ஆறாகப் பெருகுமே
  · June 19 – 2017

  Vedhai Supa Sathiya :- அறிந்தவர் அன்பொடு அழகாக சொல்கையில் ஆணித்தரமாய்
  அமிழ்ந்துதான் பதியுமே
  · 1 · June 19

  கோவி சிவகணேசன் :- புரிந்துகொண்டேன்
  அம்மா

  June 19 -2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: