கண்ணதாசன் சிறப்புச் சான்றிதழ் 3

13615133_1726950080907624_7265839992127459924_n

நெஞ்சில் தைச்ச முள்.

அஞ்சிடும் வீரமற்ற நெஞ்சிற்கு
நெஞ்சில் தைக்கும் முள்ளாக
பஞ்சில் பற்றும் நெருப்பாக
பஞ்சமற்ற முட்கள் உலகில்.

***

உறவுகள் நண்பர்களின் அழுத்தும்
செயல்கள், வார்த்தைகள் முள்ளாகி
ஈட்டியாய் குத்துகின்ற தாக்கம்
உறுதியற்ற நெஞ்சில் ஆழமாயறையும்.

***

காதலழிவு, தாய்மையின்மைப் பழி,
வறுமைத் தாக்கம், கற்பழிப்பு,
நட்புத் துரோகம் கொலையென
முள்ளிலே முள்ளோடு வாழ்கிறோம்.

***

நாட்டுப் பற்றாளருக்கு
நாக விடம் போன்ற இன இழிவு
நாளும் நெஞ்சில் தைக்கும் முள்
ஒன்றல்ல ஓராயிரமிதயங்களின் தாக்கம்.

***

நாயினும் கீழானவன் என்போம்
நாட்டுப் பற்று இல்லாதவனை.
நாடே நாசமான துன்பம்
நாளும் நெஞ்சில் தைத்த (தைக்கும்) முள்.

***

முள் முறிந்து கன்றியதும்
முழுக் குடும்பம் அழிந்ததுவும்
முழுவதும் மொழியவியலா வேதனை.
இது மட்டுமல்ல இன்னுமின்னும்.

***

மாதரிழிவால் காயமுறும் மனங்கள்
மாபெரும் நட்டம் குமுகாயத்திற்கு.
வலிவுடையோன் வாகாய்ச்; சமாளித்து
முள் நீங்கி முதுகுயர்கிறான்.

***

முள் தைத்து முன்னேறுதலும்
முழதாய் அழியும் தற்கொலையாய்
முற்றுப் புள்ளி வைப்பவரும்
முளைத்து எழுவதுமாய் தாக்கங்கள்.

***

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.

 
vector_146.cdr

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கவிஞர் த.ரூபன்
  ஆக 22, 2016 @ 15:20:49

  வணக்கம்

  வாழ்த்துக்கள் சகோதரி…மிக்க மகிழ்ச்சி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  மறுமொழி

 2. Bagawanjee KA
  ஆக 22, 2016 @ 15:29:37

  இவ்வளவு வலியுடன் வாழ்வதும் சாதனைதான் !

  மறுமொழி

 3. கரந்தை ஜெயக்குமார்
  ஆக 23, 2016 @ 01:35:00

  பாராட்டப்பெற்றமைக்குப்
  பாராட்டுக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 4. Nagendra Bharathi
  ஆக 23, 2016 @ 05:22:53

  சிறப்பு சான்றிதழுக்கு வாழ்த்துக்கள்

  மறுமொழி

 5. முனைவர் ஜம்புலிங்கம்
  ஆக 23, 2016 @ 08:10:47

  வாழ்த்துகள். சாதனைகள் தொடரட்டும்.

  மறுமொழி

 6. கோவை கவி
  அக் 20, 2016 @ 21:14:16

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: