1. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் –

IMG_0075[1].jpg

சரவிளக்கு....

சேராத சொற்கள்
சீரற்ற சொற்கள்
நேரற்ற கற்கள்
நிரப்பிய சுவரில்
உரசி முட்டுதலிலும்
பரந்த இயற்கையோடு
கரம் கோர்க்கும்
வரமெனும் சுற்றுலா
சரவிளக்காகும் மனதிற்கு.
சுரம்பாடும் நினைவுகள்
நிரவிடும் உறவோடு
பரவசம் பரம்பொருளாகும்.
பரணி பாடும் பயண அனுபவங்கள்.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க். 28-9-2016

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 1

இலங்கை போகலாமா என்று பேசியபடி இருந்தோம். அவுஸ்திரேலியாவில் தங்கை மகனின் திருமணம் 2016 புரட்டாதி 11 என்று இருந்த போது தமிழில் அழைப்பிதழ் எழுதித் தரும்படி அங்கிருந்து வேண்டுகோள் வந்தது. எழுதி அனுப்பும் போது திருமணத்திற்குப் போகலாமா என்று சிந்தனை ஓடியது. அத்துடன் தங்கை காலமானதால் தெத்தம் பண்ண வேண்டியும் நேரலாம் என்று எண்ணினோம்
மிக நீண்ட தூரமும் பல மணி நேரமும் எடுக்கும் பயணமான
அவுஸ்திரேலியாப் பயணம் செய்ய 69ம் 75 வயதுமான நாங்கள் மிக யோசித்தோம் .பிள்ளைகளும் யோசித்தார்கள். புரட்டாதி 11 2016ல் என் தங்கை மகனின் திருமணத்திற்கு மெல்பேர்ண் செல்வது என முடிவெடுத்தோம்.

எனக்கு மிகவும் பிடிக்காத விடயம் பயணத்திற்குப் பெட்டி அடுக்குவது. அடுக்கும் பொருள்களின் பட்டியல் எழுதி வைத்துள்ளேன்.

இலண்டனிலிருந்து மகள் கேட்டபடி இருந்தாள் பெட்டி அடுக்கியாச்சா அடுக்கியாச்சா என்று. பயணம் அனுப்ப அவவும் வந்து சேர்ந்தார் டென்மார்க்கிற்கு.
6ம் திகதி பயணமாக ஆயத்தங்கள் செய்தோம். பயணத்தில் கால் வீக்கம் ஏற்படாமல் இருக்க ஒரு வித இறுக்கமான காலுறை அணியும்படி ஒரு டெனிஷ் பெண்மணி அறிவுரை கூறினார். அதை விட எழுந்து நடத்தல் கால்களை நீட்டி மடக்கிக் கொள்ளல் என்பது தெரிந்த விடயமே.

stroperunnamed-13

பயணங்கள் செய்த எமது மருமகள் சாந்தி தானாகவே யோசித்து அந்தக் காலுறைகளை எங்கள் இருவருக்கும் வாங்கித் தந்தார். உண்மையில் விலை கூடியது எங்கோ மலிவு விலை என்று வாங்கினார்.
மகள் இலண்டனில் இருந்து வந்திருந்தார். காற்றடைக்கும் கழுத்தைச் சுற்றும் உறைகளை வாங்கித் தந்தார். ஒழுங்காக நித்திரை கொண்டு போய் வாருங்கள் என்று.
6ம் திகதி பகல் பதினொரு மணிக்கு பயணமானோம் – வீட்டிலிருந்து. பிள்ளைகள் இருவரும் டென்மார்க் பில்லூண்ட் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தனர்.

unnamed-14 unnamed-12

மாலை மூன்றே முக்காலிற்கு விமானம். முதலில் பெட்டிகளை மெல்பேர்ண்ல் தரும்படி ஒப்படைத்தது ஒரு நிம்மதி. மகிழ்வுடன் முதலில்; டென்மார்க்கிலிருந்து பேர்லின் 1½ மணி நேரப் பயணம்.
அங்கிருந்து அபுதாபி 6மணி நேரப் பயணம். காத்திருப்பும் சில மணி நேரங்கள் தான்.
அடுத்த பதிவு இரண்டில் தொடருவோம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2016-புரட்டாதி 30.

 

aeroplane-papers-1

18 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  அக் 01, 2016 @ 03:18:18

  தொடருங்கள் சகோதரியாரே
  தங்களின் பயண விவரங்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்
  நன்றி

  மறுமொழி

 2. yarlpavanan
  அக் 02, 2016 @ 07:26:31

  பயணம் தொடரட்டும்
  திருமணம் இனிதே நிறைவேற வேண்டும்

  மறுமொழி

 3. Nagendra Bharathi
  அக் 03, 2016 @ 02:47:14

  பயண வாழ்த்துக்கள்

  மறுமொழி

 4. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 05, 2016 @ 05:13:23

  தொடர்கிறேன் சகோ பயணம் சிறப்புற வாழ்த்துகள்

  மறுமொழி

 5. கீதமஞ்சரி
  அக் 13, 2016 @ 05:13:54

  இந்த வயதில் நெடுந்தூர விமானப் பயணம் என்பது சற்று கவலை தரும் விஷயம்தான். எனினும் போதுமான முன்னேற்பாடுகளோடு மேற்கொண்டால் சற்று சிரமம் தவிர்க்கமுடியும். பிள்ளைகளும் மருமகளும் யோசித்து உரியவற்றை வாங்கித் தந்திருப்பது மகிழ்வளிக்கிறது. அன்பான உறவுகளால் சூழ்ந்திருக்கும் தங்களுக்கு என் இனிய வாழ்த்துகள்.

  மறுமொழி

 6. Kowsy
  அக் 22, 2016 @ 20:09:56

  தொடரும் பயணம் அறிய ஆவல்

  மறுமொழி

 7. Kowsy
  அக் 25, 2016 @ 19:33:45

  பயணம் தொடரட்டும். நானும் உங்களைப் பின் தொடர்கின்றேன்

  மறுமொழி

 8. கோவை கவி
  மார்ச் 15, 2017 @ 18:24:33

  James Gnanenthiran :- பயணங்கள் என்றுமே அலுப்பதில்லை. அனுபவி ராணி அனுபவி
  Unlike · Reply · 1 · 1 October 2016 at 15:08.
  Vetha Langathilakam :- அனுபவ ராஜா ஜேம்ஸ் மிக்க நன்றி..
  மகிழ்ச்சி.
  Like · Reply · 1 October 2016 at 16:05

  மறுமொழி

 9. ramani
  ஏப் 30, 2017 @ 00:48:55

  பயணத் தொடரை இன்றிலிருந்து
  படிக்கத் துவங்குகிறேன்
  முன்னுரை போல் அமர்ந்த துவக்க
  பதிவே சுவாரஸ்யம்
  வாழ்த்துக்களுடன்…

  மறுமொழி

 10. கோவை கவி
  மே 01, 2019 @ 09:01:05

  James Gnanenthiran :- பயணங்கள் என்றுமே அலுப்பதில்லை. அனுபவி ராணி அனுபவி
  2017
  Vetha Langathilakam:- அனுபவ ராஜா ஜேம்ஸ் மிக்க நன்றி..

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: