2. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம்

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 2

img_00771

அபுதாபி செல்லும் விமானத்தில் விமானப் பணிப் பெண் ஒருவர் இலங்கைப் பெண் போல மிகவும் சிநேகமாக என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி இருந்தார் தனக்கு ஓய்வு கிடைத்த போது ஒடி வந்து பிந்து என்று எனது நெற்றிப் பொட்டைக் காட்டி ஆங்கிலத்தில் பேசினார் தான் பம்பாய் என்றார் நானும் இலங்கை என்று கூறினேன்.
தன் இனம் போன்ற ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் போது, பேசும் போது ஏற்படும் உணர்வே வித்தியாசமான உணர்வு தான். அபுதாபி வர அவளை வாழ்த்தி விட்டு இறங்கினோம்.
அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியதான அபுதாபி அமீரகத்திலுள்ள இந் நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். தற்கால அபுதாபியின் தோற்றம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பனியாஸ் என்னும் பழங்குடிக் கூட்டமைப்பு உருவானதோடு தொடங்கியது. இது பின்னர் துபாய் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டில் துபாயும், அபுதாபியும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன.
இந்த நகரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவண் அரசும், அதன் பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ளன. அபுதாபி அமீரக அரச குடும்பத்தின் இருப்பிடமும் இதுவே. அபுதாபி இன்று பல்நாட்டின மக்களைக் கொண்ட பெரு நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. விரைவான வளர்ச்சியும், நகரமயமாக்கமும், இங்கு வாழும் மக்களின் ஒப்பீட்டளவில் அதிகமான சராசரி வருமானமும் சேர்ந்து இந் நகரத்தை முற்றாகவே மாற்றியுள்ளன. (தகவல் விக்கிபீடியா)
ஆறு மணிநேரப் பயணத்தால் மாலை 6 மணிக்கு அபுதாபியில் இறங்கி உள்ளே செல்லும் போது தூரத்தில் தெரிந்த ஒரு வளைவான கட்டிடத்தைப் படம் எடுத்தேன்.

img_01001

நன்கு தெரியாத கட்டிடம் பின்னர் கூகிள் மூலம் பார்த்த போது மிக அழகான கட்டிடமாக இருந்தது.
அடுத்த விமானம் இரவு 10.50க்கு மெல்பேர்ண்க்குக் காத்திருந்தோம்.

img_00911

சிறு ஓடையான இடமாகவும் துப்பரவின்றியும் அழகின்றியும் இருந்தது. மக்கள் பரபரப்பாக நடப்புதும் தமது அடுத்த விமானம் பிடிக்கப் பறப்புதுமான இடம்.

img_00861

நடந்து நடந்து கடைகளைப் பார்த்தோம். கடைகளும் அவ்வளவு பிரமாதமாகக் கவரவில்லை. இரு இருக்கைகள் சேர்ந்த மாதிரி கண்டதும் அமர்ந்து ஆறியிருந்தோம். இடத்தைப் பறி கொடுக்காமல் இவர் இருக்க நான் சென்று எனக்கேற்ற உணவு பார்த்தேன்.

img_00891

மச்சம் சாப்பிடாதவள் நான். பின்பு வந்து கணவரிடம் கூற அவர் சென்று தனக்கும் எனக்குமாக உணவு வாங்கி வந்தார். இரவு உணவையும் உண்டோம். (மாலை ஆறரைக்கு இரவுணவு உண்ணும் பழக்கம் கொண்டவர்களாதலால்).

img_00921
பின் தங்கையின் பேரக் குழந்தைகளிற்கு இனிப்புகள் வாங்கினோம்.

img_00951

பின்னர் நாம் செல்லும் படலை இலக்கம் அறிந்து போனோம் அந்தப் பக்கம் பரந்த இடமாக இருந்தது.

img_00961

அழகு, அலங்காரம் குறைவாகவே இருந்தது. ஈச்ச மரம் ஒன்று செழிப்பமின்றியே இருந்தது.

img_00981

தமிழர் ஒருவர் தன் வேலையில் மிக அக்கறையாக கண்ணாடிகள் துடைத்தபடி இருந்தார்.

img_00941

எமது படலை இலக்கம் தெளிவின்றி இருந்ததால் அவரிடம் எந்தப் பக்கம் போக என்று கேட்டோம்.

img_00931
விமானம் 13 மணித்தியாலப் பயணம். நன்கு நித்திரை கொண்டோம்.
விமான நிலையத்திற்கு தம்பி மகனும் தங்கை மகனான மாப்பிள்ளையும் வந்திருந்தனர்.

img_01101
அடுத்த பதிவு 3ல் சந்திப்போம்.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4 -புரட்டாதி 2016

canada-nakatam

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  அக் 05, 2016 @ 01:11:47

  ஆகா
  படக்கதையாகவே ஓர் பயணக்கட்டுரை
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 05, 2016 @ 05:11:07

  வணக்கம் சகோ அபுதாபி (விமான நிலைய உட்புறம்) வருகை தந்தமைக்கு வாழ்த்துகள்.

  அந்த வளைந்த கட்டிடம் இரு விமான நிலையத்துக்கும் இடையேயான டவர் அதாவது இண்டர்நேஷனல் மற்றும் அரச குடும்பத்துக்கு உண்டான சொந்த விமான நிலையத்தின் சிக்னல் டவர்.

  மேலும் விரிவான விடயம் தந்தமைக்கு நன்றி

  மறுமொழி

 3. Bagawanjee KA
  அக் 05, 2016 @ 09:29:38

  அபுதாபி என்றதும் நம்ம கில்லர்ஜி ஞாபகம் வந்தது !இதோ அவரே எனக்கும் முன்பாக வந்து விளக்கம் தந்து இருக்கிறாரே 🙂

  மறுமொழி

 4. கோவை கவி
  அக் 06, 2016 @ 08:17:32

  மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி கருத்திடலிற்கு.
  சகோதரா
  170 பேர்கள் பார்த்துள்ள
  இந்த இடுகையில் கருத்துகள் இரண்டு தான்.
  ஷேம்!…அல்லவா!…..

  மறுமொழி

 5. கீதமஞ்சரி
  அக் 13, 2016 @ 05:17:07

  அபுதாபி விமானநிலையம் குறித்த விவரணை கூடுதல் சிறப்பு. 13 மணிநேரப் பயணம்.. மிகுந்த சோர்வும் அலுப்பும் தரக்கூடும்.. எப்படி சமாளித்தீர்கள் என்று அறிய ஆவலுடன் தொடர்கிறேன்.

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 15, 2017 @ 18:55:34

  Sujatha Anton :– பயணம் வாசித்தோம். அருமை.
  Unlike · Reply · 1 · 16 October 2016 at 10:11.

  Vetha Langathilakam:- Nanry sis.. makilchchy..
  Like · Reply · 1 · 16 October 2016 at 10:13

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  Like · Reply · 16 October 2016 at 10:20 · Edited

  மறுமொழி

 7. ramani
  ஏப் 30, 2017 @ 00:53:52

  படங்களுடன் விளக்கங்கள் படிக்க
  நேரடியாகப் பார்க்கிற உணர்வு
  ஆவலுடன் தொடர்கிறேன்…

  மறுமொழி

 8. கோவை கவி
  மே 24, 2017 @ 12:21:29

  அனுபவியுங்கள் மிக மிக இனிமை பசுமையான பயணம்.
  மிக்க நன்றி. மகிழ்ச்சி உறவே.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: