3. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம்

 

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 3

 

அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தின் தலைநகரம் மெல்பேர்ண் . மேலும் இது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.
மெல்பேர்ண் அவுஸ்திரேலியா மற்றும் ஆசியா-பசிபிக் மண்டலத்தில் முன்னணி நிதி மையமாக விளங்குகின்றது
நியூசவுத் வேல்ஸ் பகுதியாக ஆவணி 30, 1835 இல் இந்த நகரம் நிறுவப்பட்டது.
1837இல் பிரித்தானிய குடியேற்றமாக அங்கீகரிக்கப்பட்டது. நியூ சவுத் வேல்சின் ஆளுநர் சேர் ரிச்சர்டு புர்கால் ‘மெல்பேர்ண்’ எனப் பெயரிடப்பட்டது. அந்நாளைய பிரித்தானியப் பிரதமர் மேல்பேர்ணின் இரண்டாவது வைகவுண்டு நினைவாக இப்பெயரைத் தேர்ந்தெடுத்தார்
மெல்பேர்ண், 1851 இல் புதியதாகப் பிரிக்கப்பட்டு உருவான விக்டோரியா குடியேற்றப்பகுதியின் தலைநகரமாயிற்று. 1850 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட விக்டோரியாவின் தங்க வேட்டையின்போது மெல்பேர்ண் உலகின் மிகப்பெரிய, செல்வமிகு நகரங்களில் ஒன்றாக உருவானது. 1901 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியக் கூட்டமைப்பிற்குப் பின் புதிய அவுஸ்திரேலியா நாட்டிற்கு 1927 வரை மெல்பேர்ண் தலைநகரமாக விளங்கியது.
பெருநகரப் பகுதிக்கும் மாநிலத்திற்கும் முதன்மை வானூர்தி நிலையமாக விளங்கும் மெல்பேர்ண் வானூர்தி நிலையம்     துல்லாமரைன் வானூர்தி நிலையமாகும்.
இந்த விமான நிலையத்தில் தான் சென்று 8ம் திகதி மாலை 6மணிக்கு அவுஸ்திரேலியாவில் இறங்கினோம். ( நினைவு படுத்துகிறேன் 6ம் திகதி மாலை மூன்றே முக்காலுக்கு டென்மார்க்கில் விமானம் ஏறினோம்)

img_01121
45 நிமிடநேர இடைவெளியில் கட்டிடக் காட்டினூடாகத் தங்கை மகன் வீடு சென்றடைந்தோம்.

img_01151

மரங்கள் அடர்ந்திருந்தால் மரக்காடு என்போம். முழுவதும் கட்டிடமாக இருந்தால் வேறென்னவாம்!… கட்டிடக் காடு தானே!

img_01131

தங்கை மகன் மாப்பிள்ளை யுனிக் கட்டிட நிறவனத்தை நிர்வாகித்துச் சொந்தமாக நடத்துகிறார். அலுவலகம் வீட்டிலேயே உள்ளது.( UnikConstructions Pty LtdDirector/Builder · Melbourne, Australia)

கொழும்பு, சிட்னியிலிருந்து தங்கை மகள் குடும்பங்கள், மாப்பிள்ளையின் இரட்டையர் தம்பி சிட்னியிலிருந்து, தங்கை கணவர், மாமியார் இலங்கையிலிருந்து என்று உறவுகளின் தாலாட்டில் நாட்கள் விரிந்தது. 8ம் திகதி மாலை 6 மணி, வீடு செல்ல ஏழரை மணியானது. பேசி இரவுணவோடு அந்த நாள் முடிந்தது.
சிறு வயதில் பழகியவர்கள் வளர்ந்து பல வருடங்களின் பின் நெருக்கமாகக் காணும் போது வித்தியாச பரிமாணங்களில் தெரிந்தனர்.
முக்கியமாக மாப்பிள்ளை மிக நகைச்சுவையாக கவித்துவமாகப் பேசினார். வாழ்வின் அனுபவங்கள், சினிமா நகைச்சுவைகள் அவரை மாற்றியிருக்கலாம். நெருக்கமாகப் பழக சந்தர்ப்பம் கிடைக்காததால் அவரது பாணி எமக்குத் தெரியாமலும் இருந்திருக்கலாம்.
பாலி தீவுக்குப் போய் வந்து இரண்டு பெரிய கிளிகள் வளர்க்கிறார்.

collage-parot-2

 

 

ஒல்லாந்து தேசத்து முயல் ஒன்று வளர்க்கிறார்.

collage-rabit

கிளியும் வைத்திருந்தாராம் இப்போது இல்லை. ஆனால் நிறையக் கிளிகள் உள்ளது. என்ன ஆச்சரியமா!…….இன்னும் வரும்.

பகுதி 4ல் தொடருவோம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10-2016.

kutuvi-b

Advertisements

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  Oct 08, 2016 @ 11:12:29

  தற்போதுதான் பயணத்தில் கலந்துகொள்ளமுடிந்தது. ரசித்தேன்.தொடர்கிறேன்.

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  Oct 08, 2016 @ 14:40:05

  வணக்கம் சகோ
  பயணத்தில் தொடர்ந்து வருகிறேன் ஆவலுடன் 4-ஆம் பயணம் காண வருவேன்

  மறுமொழி

 3. karanthaijayakumar
  Oct 09, 2016 @ 12:31:52

  தொடர்கிறேன் சகோதரியாரே
  நன்றி

  மறுமொழி

 4. கீதமஞ்சரி
  Oct 13, 2016 @ 05:21:32

  ஒரு பக்கம் உலகம் சுருங்கிவிட்டது..கைக்குள் அடங்கிவிட்டது என்றெல்லாம் சொல்கிறோம்.. ஆனால் இன்னொரு பக்கம் உறவுகள் விலகிக்கிடக்கின்றன… ஒருவரை ஒருவர் பார்ப்பதும் அரிதாகப் போய்விட்டது. சில காலங்களுக்கு முன்புவரை ஓரிருவர் மட்டும் வெளிநாடுகளில் வசிக்கையில்… திருமணம் போன்ற விசேடங்களின்போது சொந்தநாட்டில் ஒன்றுகூடி சந்திக்கும் வாய்ப்பு இருந்தது. இப்போது பலரும் பல நாடுகளில் வசிப்பதால் அந்த வாய்ப்பும் இல்லாமல் போய்வருகிறது. வருத்தம் தரும் உண்மைதான்.

  மறுமொழி

 5. Kowsy
  Oct 25, 2016 @ 19:29:37

  மெல்கிபேர்ன்பற்றிய விபரம் சிறப்பாக இருக்கிறது. கிளிகள் பேசுமா?

  மறுமொழி

 6. Kowsy
  Oct 30, 2016 @ 17:56:38

  அருமையான தெளிவான விளக்கங்கள் படங்களுடன் பதிவு சிறப்பு

  மறுமொழி

 7. கோவை கவி
  Mar 15, 2017 @ 19:00:47

  Sujatha Anton :- புகைப்படங்களும், தொடர்ந்த பயணமும் வாசித்தோம். அருமை.
  Unlike · Reply · 1 · 16 October 2016 at 10:08.

  Vetha Langathilakam .—-அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  Like · Reply · 16 October 2016 at 10:17

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: