4. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம்

img_11531

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 4

பறவைகள் நேசன்
பறவைகள் காப்பாளன்
வீர பாண்டியன் விருமாண்டி.
           உறவுகளை விட்டு
           ஊர் விட்டு ஊர் வந்ததால்
            இவன் பறவைகள் நேசனாகினானோ!
பெரியம்மா உங்கள் வீட்டில் சோழா இருக்கிறார் ஆதலால் எனது பெயர் வீர பாண்டியன் விருமாண்டி என்று எழுதுங்கள் என்று வேண்டினார்     இந்தப் பறவைகள் நேசன். இவர் பறவைகள் காப்பாளன் என்றும் எமக்குத் தெரியவில்லை. இரு பரம்பரைகளில் யார் இப்படியான குணாதிசயமுடையவர் என்று பேசினோம். 
அப்பு ஆச்சி குஞ்சியப்பாவை மாட்டுத் தொழுவம் வைத்து மாடுகள் வளர்த்து தங்கள் தேவைக்குப் பால் எடுத்துப் பாவித்தனர். நாங்களும் பனை ஓலைகள் மாட்டிற்குக் கிழித்துக் கொடுத்த அனுபவங்கள் உண்டு.  ஆம் மாட்டிற்கு உணவாக தமது வளவுப் பனை மர ஓலைகள் வெட்டி எல்லாரும் சுற்றி வர இருந்து கிழிப்போம், ஈர்க்கு வேறாக ஓலை வேறாக. பின்   அதை வெட்டி மாடுகளிற்கு உணவாக்குதல்.
அங்கு வீட்டில் இறங்கியதும் கைக் குழந்தை குவா குவா என அழுவது போல சத்தம் அடிக்கடி கேட்டது. இது யாரடா1 என்ன குழந்தைச் சத்தம்! என்று கவனித்தபடி இருந்தேன். தங்கையின் பேரப் பிள்ளைகள்,   2 வயதுக்கு மேற்படவே இருந்தனர்.இப்படி அழ யாருமில்லை.
வீரபாண்டியன் விருமாண்டி நீலமும் பச்சையுமான மக்கவ் (macaw ) கொக்கட்டோ (cockatoo ) என்ற பெயருடையதும் அதற்குச் சோடியாக றெட் ஸ்காலெற் மக்கவ் ம் (red scarlet macaw) வைத்து வளர்க்கிறார். பெரிய அறை கூடு மாதிரி செய்து அதனுள் அவர்கள் உள்ளனர். அதிகாலை எழுந்து பழங்கள் வெட்டிப் போடுவார். இல்லாவிடில் உயிரை வாங்கி விடுவினம் கத்திக் கீச்சிட்டு.
நாம் படுத்த அறையோடு தான் அவர்களது (கிளிகளின்) அறை உள்ளது.

img_11551-jpg-kk

கண்ணாடி யன்னலில் சொண்டால் தட்டுவினம். திரையை விலக்கி குழந்தைகளோடு கதைப்பது போல கதைத்தேன்.   இவர்களது சத்தம் தான் ஆரம்பத்தில் நான் கேட்டுக் கவனித்த குவா குவா சத்தம்.
மத்திய, வடக்கு, தெற்கு அமெரிக்க, மெக்சிக்கோ பகுதிக்குரிய பறவைகள். கொட்டைகள், பழங்கள், பாஃம் மரப் பழங்கள், பூக்கள், விதைகளை உணவாக உண்ணும் பறவைகள். நீலம் பச்சை மக்கவ் 30 – 35 வருடங்கள் வாழுமாம். ஸகாலெட் சிவப்பு மஞ்சள் சராசரி 40 – 50 வருடமாம் சில 75 வருடமும் வாழுமாம். ஆச்சரியமாக உள்ளதல்லவா!
முயல் – இவர் தனிய உள்ளார். வித்தியாச முகம். நாம் பார்த்துப் பழகியது டென்மார்க் முகம் தானே. இவர் ஒல்லாந்து தேசத்தவர். கடந்த பகுதிப் படத்தைப் பாருங்கள்.

img_11181
கிளி வைத்திருந்தாராம் திறந்து விட்டாராம். கிளிகளிற்கு வெட்ட வெளியில் பழத்தட்டு நீர் என்று வைக்கிறார்.img_11241

 

ஊரில் மரத்தில் உள்ள கிளிகள் 3 இனங்கள் படத்தில் காண்கிறீர்கள்.

img_11131

1. சாம்பல், றோஸ் வெள்ளைக் கொண்டை

img_02901

2.பச்சை சிவப்பு மஞ்சள்,

img_02911

3. தனிய சாம்பல் சிவப்பு. நினைத்த நேரம் இவை

img_02851

வந்து கொண்டாட்டமாக உணவு உண்டு செல்கின்றன..

இதை விட புறா – நமது புறா மாதிரித் தெரியவில்லை சிறிது வித்தியாசம். படம் எடுக்க முடியவில்லை பறந்து விட்டன.
மக்பை ( ) என்று அசல் காகம் போல

img_11261

ஆனால் கறுப்பும் வெள்ளையும் கலந்தது. காகம் மாதிரி வருவது அது தானாம். படத்தில் காணுவீர்கள்.

img_11251
இங்கு இன ஒற்றுமையும் உண்டு சண்டையும் உண்டு. பார்ப்பது வேடிக்கை.
இப்படியாக குருவிகள் காப்பகம் போல – பார்த்துப் படம் எடுப்பது எனக்கு ஆர்வமாக இருந்தது. இரண்டு நீண்ட நீல இறகுகளும் டென்மார்க்கிற்குக் கொண்டு வந்தேன்,  வெற்றி, சோழாக்குக் கொடுங்கோ என்று தந்தார் வீரபாண்டியன் விருமாண்டி. 
(இது வீரபாண்டியன் விருமாண்டியின் ஆர்வமும் ஆசையும். )

மனைவியின் விருப்புமுமின்றி இருக்காதே. அவர் மனவியலில் மாஸ்டர் முடித்துத் தொடர்கிறார் வேலையுடன்.

அடுத்த பகுதி 5ல் சந்திப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12 அக்டொபர் 2016.

3-3-2017…இப்போது ஏராளமான கொக்கட்டோ என்ற பறவைகள் இவரிடம் உணவு உண்ண வருகிறதாம் படங்கள் அனுப்பியிருந்தார் பாருங்கள். கொண்டை காக்கட்டூ (Sulphur crested cockatoo)

birds-4

birds-1

birds-2

birds-3

 

 

 

ssssssss-c

Advertisements

14 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  அக் 12, 2016 @ 11:32:29

  படங்கள் இயற்கையாக உள்ளன.

  மறுமொழி

 2. karanthaijayakumar
  அக் 12, 2016 @ 12:36:43

  படங்கள் அருமை
  பாராட்டிற்குரியவர்

  மறுமொழி

 3. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 12, 2016 @ 14:14:53

  புகைப்படங்களை இரசித்தேன் சகோ

  மறுமொழி

 4. கீதமஞ்சரி
  அக் 13, 2016 @ 05:26:42

  பறவைகள் பற்றிய தகவல்களும் படங்களும் அசத்துகின்றன.. உங்களுக்கு நிச்சயம் இது புதிய அனுபவமாக இருந்திருக்கும்.. பனையோலைகளைக் கிழித்து மாடுகளுக்கு உண்ணத்தருவதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். வீரபாண்டியன் விருமாண்டி – பெயர் நன்றாக உள்ளது. :)))

  மறுமொழி

 5. கோமதி அரசு
  அக் 14, 2016 @ 11:32:06

  அருமையான பதிவு, பற்வைகளின் படங்கள் அழகு.

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 15, 2017 @ 21:29:15

  Rathy Mohan :- சூப்பர்
  Unlike · Reply · 1 · 14 October 2016 at 10:03

  Vetha Langathilakam:- அன்புடன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  Like · Reply · 14 October 2016 at 11:09

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 15, 2017 @ 21:31:15

  Sujatha Anton :- அவுஸ்திரேலியாவிற்கு நாமும் பயணிக்கின்றோம். கட்டுரை அருமை.
  Unlike · Reply · 1 · 16 October 2016 at 09:59

  Vetha Langathilakam :- கருத்திடலால் மகிழ்ந்தேன்.
  மிகுந்த நன்றியும் அன்பும்.சுஜாதா.
  மிகவும் இரசித்து மகிழ்ந்து எழுதுகிறேன்.
  பயணத்தில் நீந்தி மகிழ்ந்தது ஒரு புறம
  ;இது இரண்டாவது முறை.( I mean writting..experience..)

  Like · Reply · 16 October 2016 at 10:26

  மறுமொழி

 8. ramani
  ஏப் 30, 2017 @ 01:08:11

  ஆஹா அருமை
  பறவைகளின் சரணாலயம் போல்
  வீடு.பார்க்கப் பார்க்கப் பரவசம்
  வாழ்த்துக்களுடன்…

  மறுமொழி

 9. கோவை கவி
  மே 24, 2017 @ 12:36:46

  Aam….மகிழ்ச்சி
  மிக்க நன்றி கருத்திடலிற்கு உறவே.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: