5. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் 5.

img_01541

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் 5.

 வெள்ளிக்கிழமை  மெல்பேர்ண் சிறீ சிவா விஷ்ணு கோயிலுக்குப் போனோம்.

img_01631

மாப்பிள்ளையின் தந்தையின் தங்கை வந்தார். அவருடன் நாங்கள்

img_01591

எல்லோருமாக இரண்டு வாகனத்தில் போனோம். அதிக தூரமில்லை. கோவிலில் கொடியேறியதால் விசேட பூசை நடந்து கொண்டிருந்தது.

img_01471
ஒரு சில படங்கள் தான் எடுத்தேன்.

img_01491
மெல்பேர்ண் சிவா விஷ்ணு கோயில் என்று கூகிளில் நிறையப் படங்கள் பாருங்கள். (எனக்கு இப்படிப் பார்த்து ஆராய மிகப் பிடிக்கும்).

img_01501

தரிசனம் முடிய கோயில் உணவகம் என்று போக அது மூடும் நேரமாச்சு என்று

img_01611

img_01601

வேறொரு அருகிலுள்ள இடம் சென்று எல்லோருமாக உணவருந்தினோம்.

ஒரு மகிழ்வான ஒன்று கூடலாக இருந்தது. மறக்க முடியாதது. நன்றி புவனாவிற்குச் சேரும். அவர் தான் உணவென்று அனைவரையும் அழைத்தார்.

img_01791
இந்த இடை நடுவில் ஒரு திருமண வாழ்த்துக் கவிதை ஏற்கெனவே எழுதி தம்பி மகனுக்கு மெயில் பண்ணி அதைச் சட்டம் இட தம்பி மகனுடன் திரிந்தோம். எழுத்தைச் சுற்றி நல்ல வேலைப்பாடுடன் சட்டமிடலாம் என்றால் ( மாதிரி கூட அச்சுக் கூடத்திற்கு மெயில் அனுப்பினோம்) ஏ4லும் பெரிதாக என்று செய்தும் முதலாளி வெள்ளி தங்கமென மினுக்கும் நிறத்தில் சட்டமிட்டு எம்மை மயக்கி விட்டார். ஓன்றும் செய்ய முடியவில்லை எந்த வேலைப் பாடுமின்றி அவர் பண்ணியபடியே வாங்கி வந்தோம்.

( பிரதீபன் சாந்தினி என்று பயணக் கதைக்கு முன்பு
நான்போட்ட 45வது வாழ்த்துப் பதிவு பாருங்கள் )     பின்பு  தம்பி மகன்

img_01991

இருக்குமிடம் சென்றோம். அது இன்னொரு மலையோடு சேர்ந்த அழகான இடமாக இருந்தது.

img_02051

222222
அவுஸ்திரேலியாவில் என்னைக் கவர்ந்தது வீடுகள். இது எவ்வளவு அழகான வீடு என்று வியக்க அடுத்த வீடு அதை விட அழகான அமைப்பாக இருந்தது. சரி மற்றதைப் பார்ப்போம் என்றால் அது இன்னும் மிகத் திறமாக இருந்தது. கொழும்பு 7 – சினமன் காடின் – கறுவாக்காடு போல பூந்தோட்டம் பச்சைப் பசேலென்று மாளிகை போன்ற அமைப்புடன் இருந்தது. என் கணவர் பகிடி   விட்டார் ” மாறிடுவோமா இங்கு! ” என்று.    ” எமது பென்சன் பணத்தை இங்கு தருவார்களானால் நாளைக்கே சம்மதம் ” என்றேன் நான். பணமில்லாமல்  எங்கே  என்ன செய்ய முடியும்!…. சொல்லுங்கள்!!…….

img_02081

img_02171
அடுத்து நெடு நெடு என்று சாலையோரங்களில் வளர்ந்துள்ள மரங்கள். சாம்பல் நிறமாகவும் அதன் தோற்றமும் வித்தியாசம் அழகு என்று என்னை வெகுவாகக் கவர்ந்தது. இறுதியில் அது யூகலிப்டஸ் மரங்கள் என்று அறிந்தேன். முற்றிய மரங்கள் வெடித்த பட்டைகளுடன் இருக்குமாம். சாலையோர மரங்கள் அரசாங்கக் கண்காணிப்பில் வளர்க்கும் முற்றாத மரங்கள். மிக மிக அழகு. அவ்வப்போது இந்த மரங்களின் படங்கள் தொடரும். இத்தோடு முடிந்து விடாது.
யூகலிப்டஸ் மிகவும் பயனுள்ள மரம். அதன் இலையிருந்து எண்ணெய் எடுக்கப் படுகிறதாம். இயற்கைச் சூழலில் இந்த எண்ணெய் ஆவியாகி சிறு சிறு துளிகளாகக் காற்றில் மிதக்கிறதால் சூரிய ஒளிபட்டு இவை நீல நிறமாகித் தெரியுமாம். சிட்னியின் மேற்குப் புற மலை (Blue mountaim ) நீல மலையெனப் பெயர் பெற்றது இதனால் தானாம்.
20  முதல் 50 மீட்டர் வரை இன்னும் சில 90 மீட்டர் வரையும் உயருமாம். இலை மிக கடினத் தன்மையானதும் உடைத்து விட்ட விரலாட்டம் நேர் குத்தாகத் தொங்கும். காற்றின் ஈரலிப்பு நீர் இலையூடாக மரத்திற்கே வடியுமாம்.

img_00821-jpg-can
நமது நாட்டில் டென்மார்க்கில் ஒரு மரம் அடர்ந்து வளருமானால் கிளைகளை நறுக்கித் தெருவை நிம்மதியாக இருக்க விடுவார்கள் – மின்சார இணைப்புகள் அவுஸ்திரேலியா போல மண்ணில் புதைத்தாலும். ஆனால் அங்கு தெருவிலும் வஞ்சகமின்றி மரக் கிளைகளை நன்கு படரவிட்டுள்ளனர். அழகான பெரிய மாடிக் கட்டடங்களை படமெடுக்க முடியாது மரங்கள் அழகாகப் படர்ந்துள்ளது. இது கவனிக்கப் பட்ட முக்கிய விடயமாக எனக்கு இருந்தது. இயற்கையை இயற்கையாக இருக்க விட்டுள்ளனர்.மிகப் பெரிய விடயம் இது என்பது எனது அபிப்பிராயம்.

.
அடுத்த நாள் 11ம் திகதி காலை 8 மணி மாப்பிள்ளைத் தோய வார்ப்பு என்றும் திருமணம் 9 மணி என்றும் மிக சிறப்பாக நடந்தது.

14572111_10154134039363742_1053643923_o

மாப்பிள்ளை பகுதியில் நாம் தெத்தம் பண்ண நின்றிருந்தோம். இலங்கையிலிருக்கும் தங்கை மகள் தோழியாக இருந்தார். சுமார் 300 பேருக்கும் மேலாக மக்கள்கூ  ட்டத்துடன் திருமணம் நடந்தது.

the-grand-on-princes-mulgrave-venues-event-spaces-8bab-300x0   img_9109-hdr

நல்ல ஒரு மண்டபம். 3 படங்கள் இங்கு காணுகிறீர்கள்.

the-grand-on-princes-mulgrave-venues-event-spaces-7c0d-300x0
மீதியை அடுத்த பகுதியில் 6ல் காணுவோம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
17-10-2016.

img_01571

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Kowsy
  அக் 17, 2016 @ 15:52:56

  அவுஸ்திரேலியா அழகான நாடு என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். உங்கள் படங்களைப் பார்க்கும் போது தான் ஆசை அதிகமாகிறது. நிச்சயமாக அங்கு செல்ல வேண்டுமென்று மனம் துடிக்கிறது. மற்றும் யுகிலிப்ரஸ் இலங்கையில் எங்கள் வீட்டின் முன் இரண்டு பகுதிகளிலும் பாதை நீட்டிற்கும் வைத்திருந்தும். அப்போது அதன் இலைகள் தான் எங்கள் தடிமன் நோய்க்கு மருந்து. பதிவுகளை எனது மின்னஞ்சலுக்கு அனுப்புவீர்களா? எனக்குத் தவறவிடாமல் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

  மறுமொழி

 2. Bagawanjee KA
  அக் 17, 2016 @ 15:54:39

  கோவிலில் தொடங்கி கோவிலில் முடிந்த படங்கள் அணித்தும் அருமை 🙂

  மறுமொழி

 3. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 17, 2016 @ 16:27:50

  புகைப்படங்கள் அனைத்தும் அருமையாக எடுத்து இருக்கின்றீர்கள் வாழ்த்துகளோடு தொடர்கிறேன்

  மறுமொழி

 4. முனைவர் ஜம்புலிங்கம்
  அக் 18, 2016 @ 08:09:09

  கோயில் உலாவில் தொடங்கி பயணத்தை ரசித்தேன்.

  மறுமொழி

 5. கோவை கவி
  அக் 18, 2016 @ 13:03:50

  Sri Chandra :- உங்களது பயணக் கட்டுரை எப்போதும் சுவாரஸ்யம் குறையாமல் இருக்கும்

  மறுமொழி

 6. Vincent alvit
  அக் 18, 2016 @ 13:29:07

  மிகவும் விபரமாகத்தான் எழுதியிருக்கிறீர்கள். படங்களும் அழகாக எடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கோயிலைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இத்தனை பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
  தொடரட்டும் உங்களது மகிழ்ச்சியான பயணங்கள்.

  மறுமொழி

 7. சந்திரா
  அக் 18, 2016 @ 13:48:13

  மிக.. மிக… அருமை அந்த கோவிலின் வெளிபுறத்தோற்ற வேலைபாடுகள் இலங்கையில் இருப்பது போல் தெரிகிறது. உட்புறம் இந்திய அமைப்பில் உள்ளது. ஆஸ்திரேலியா தற்போது கண்முன்னே வாழ்த்துக்கள்.

  மறுமொழி

 8. கோவை கவி
  மார்ச் 15, 2017 @ 21:59:37

  Sarvi Kathirithambi :- நீங்கள் அனுபவித்த மகிழ்வினை எம்மோடு பகிர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி வேதா அக்கா !
  Unlike · Reply · 1 · 18 October 2016 at 15:25

  Vetha Langathilakam :- அ ன்புடன் நன்றி தங்கள் இனிய கருத்திடலிற்கு.
  மகிழ்ச்சி உறவே
  Like · Reply · A few seconds ago

  மறுமொழி

 9. கோவை கவி
  மே 01, 2019 @ 11:27:17

  Subajini Sriranjan :- அருமையான தகவல்களை தந்தீர்கள்

  Vetha Langathilakam :- ஆம் சகோதரி . மிக்க நன்றி கருத்திற்கு
  2016

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: