2. நூல் மதிப்பீடு – முன்னுரை – வாழ்த்துரை

14095884_430843800372992_5121173612954359690_n

thanu

நெடும் தீவு  தனுவிற்கு  நான் எழுதிய 

வாழ்த்துரை

” வீறு கொண்டெழும் வாலிபம்
ஆறு போன்று பாயும்.
தீரமுடை வழி காட்டலில்
நேரிய பாதை செல்லும்”

சமூக விழிப்புணர்வு கொண்ட இளம் வாலிபன் இலங்கை யாழ்ப்பாணம் நெடுந்தீவு தனு எடுக்கும் கன்னி முயற்சியான புத்தக வெளியீட்டு முயற்சி மிகவும் தேவையானதான ஒரு முயற்சி.
போரின் வெடிப்புகளாலும், அமைதியற்ற அநாகரீகச் செயல்களாலும் நொந்து போன மனதிற்கு இதம் தருமொரு இனிய முயற்சி.
சேவியர் தனிநாயகம் அடிகளாரின் தந்தை நாகநாதன் மற்றும் அவர் தந்தை வழிப்பூட்டனார் தனிநாயக முதலி ஆகியோர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். அப்புகழ் பூத்தவர்கள் உதித்த இடத்தில் உதித்த தனுவும் தனது தமிழார்வம், தேசப்பற்றுக் கொண்டு தமிழாள ஆர்வமுடன் அடியெடுத்து வைக்கிறார்.
தம் சுய அறிவிழந்து போதை மருந்துப் பழக்கத்திலும், தீய வழிகளிலும் செல்வோர் மத்தியில் வேதனைப் பாதையில்; நடக்காது சாதனைப் பாதையில் அடியெடுத்து வைக்கிறார்.
இவரது ஓரிரு கவிதைகளைப் பர்க்கும் போது ” எம் ஊர் ” என்ற கவிதையில் இவரது ஊர் உணர்வு வீசுகிறது. தனது ஊரைத் தெரியாதவர்களிற்குக் கவி வரிகளில் மிக இனிமையாக விவரிக்கிறாh. நெடுந்தீவைப் படம் பிடித்துக் காட்டுவதாக நான் உணர்ந்தேன்.

‘படகு புதியவர்களிற்குத் திகில் எமக்கோ
பழஞ்சோற்றுப் பதம்”…என்கிறார் சிறப்பாக.
இன்னொரு கவிதையில் வவுனியா சாலை ஓரத்தில் தான் கண்ட நிகழ்வை உயிரெழுத்து வரிகளாக ”அ ” விலிருந்து ”ஒள” வரை ஒளவையாரின் பாணியில் வரைந்துள்ளார்.
”இல்லாத எம்மிடம் ஈக்கள் மொய்ப்பதேனோ”
என்று ஏழைமை நிலையை வேதனை பொரும எழுதுகிறார். இந்த வேதனைகள் நாட்டிலிருந்து வடிந்து மறைந்து மகிழ்வு நிலைக்க வேண்டும்!
”உணர்வாயா” எனும் கவிதையில் முதியோர் இல்லம் பற்றி
”கூவிக் கொண்டே என் ஆவி போயிடுமோ!
கூவி முடிவதற்குள் இவ்வில்லம் வாருமய்யா!”
என்று பிள்ளைகளின் பாராமுகத்தை, வயோதிபத்தைக் கவனிக்காத குணங்களை எடுத்துரைக்கிறார்.
பல கவிதைகள் இணைக்கப் பட்டுப் புத்தகமாகிறது. ஓவ்வொரு வரிகளும் தமிழ் வாரிசுகளிற்குப் பாடமாக அமைந்து வழிகாட்டட்டும்.
வாலிபன் தானே! காதலை விடுவாரா! ”காத்திருக்கும் காதல்” கவிதையிலும் ஊரை விட்டு வைக்கவில்லை.
”கடலோரம் வீசும் கூதற்காற்றில் என்
காதில் கதை சொன்ன ஆசை மச்சானே!
இதயத்தைக் கடலில் கரைத்தாயா
ஊர் வந்தால் சொல்லி விடு”
என்று காதலில் ஏங்குகிறார்.
இவரது கவிதைப் பயணம் – எழுத்துப் பயணம் வெற்றிகரமாக உச்சம் எட்ட எனது நல்லாசிகளை வழங்குகிறேன்.
பலப்பல நூல்கள் வெளியிட்டு எழுத்து வானில் தனு கொடிகட்டிப் பறக்க இறையாசி நிறையட்டும்.
மனமார்ந்த வாழ்த்து. வாழ்க! வளர்க!
__
திருமதி வேதா. இலங்காதிலகம்
(பெட்டகோ)
ஓய்வு பெற்ற பாலர் நிலைய ஆசிரியை.
கவிஞர் (வேதாவின் வலை)
டென்மார்க். 7-6-2015

div138

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  அக் 19, 2016 @ 01:15:27

  அருமையான விமர்சனம்
  நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 2. கோமதி அரசு
  அக் 19, 2016 @ 07:18:11

  அருமையான வாழ்த்து கவிதை.

  மறுமொழி

 3. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 19, 2016 @ 12:29:48

  தங்களது வாழ்த்துரை அழகோவியம் சகோ
  நெடும் தீவு தனு அவர்களுக்கு எமது வாழ்த்துகள்

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 08:04:24

  அன்புடன் நன்றி உறவே கருத்திடலிற்கு.
  மிக் மகிழ்ச்சி.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: