456. அன்பெனும் நதியிலே

62114_252088771593849_1470896617_n

அன்பெனும் நதியிலே

எத்தனை வருடங்களின் பின்னே
இலங்கை டென்மார்க் உறவுகள்
ஆனந்தமான அன்பெனும் நதியினிலே
அவுஸ்திரேலியாவில் திருமணத்திற்கான இணைவு.

வார்த்தைகளில் விபரிக்க முடியாத
வாஞ்சையான அன்பு உறவுகளை
வாழ்கவென மனம் வாழ்த்தியது
வாசமிகு அன்பெனும் நதியினிலே.

கணனியிலிருந்து விடுதலையாகிக் கவனமது
கரைந்து அன்புச் சேறாகியது.
மனச் சுவரில் சித்திரமாக்கியது
மகசூலிட்டது அன்பு நதி.

வாழ்வினுறுதிக்கு அன்பு வச்சிரம்.
வாத்தியமாகியும் இசை சேர்க்கும்.
வாரணமாகும் வாரி வழங்கினால்.
வானுயர் இனிமை அன்பு.

பற்றுங்கள் அன்பால் ஒற்றுங்கள்.
வற்றிடாத அன்பு நதியின்
உற்பத்தியூற்று தன்னம்பிக்கை முத்து
அற்புத விளைச்சல் தரும்.

அவம் அழிக்கும் அருட்சோதி.
அர்ப்பணமாக்கி எங்கும் சமர்ப்பியுங்கள்.
அன்பு நதி ஆர்வமூட்டும்.
வன்மமழியும் அன்பில் நீந்துங்கள்.

கவி ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
2-10-2016.

0066

Advertisements

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  Oct 23, 2016 @ 12:24:39

  அன்பு எனும் நதி பெருகட்டும்
  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  Oct 23, 2016 @ 12:35:31

  உண்மைதான் சகோ உறவுகளுடன் கூடிக்களித்தல் மகிழ்வான விடயமே.

  மறுமொழி

 3. Bagawanjee KA
  Oct 23, 2016 @ 13:17:16

  நீந்துதல் சுகம் ,அன்பு நதியில் நீந்துதல் சுகமோ சுகம் 🙂

  மறுமொழி

 4. natchander
  Oct 23, 2016 @ 16:41:17

  a happy peace loving family…
  best wishes…ji

  மறுமொழி

 5. கீதமஞ்சரி
  Oct 24, 2016 @ 03:16:07

  அன்பின் பெருமை உணர்த்தும் அழகிய வரிகள்.. வாழ்வது ஒருமுறை.. அதை இனிதே அன்புறவுகளோடு இணைந்து வாழ்வதே நமக்குப் பெருமை.. உண்மை தோழி.

  மறுமொழி

 6. கோமதி அரசு
  Oct 24, 2016 @ 05:39:10

  உறவுகளின் சின்ன சின்ன விரிசல்களால் மனம் சோர்வடைந்த நேரம் உங்கள் பதிவு இதமளிக்கிறது . உறவோடு அன்பாய் கூடி இருப்பதே மகிழ்ச்சி தரும் என்பது உண்மை. வாழ்க வளமுடன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: