5. கண்ணதாசன் சான்றிதழ் 6

13723882_1751422235122551_619705988644798997_o

மனம் வலிக்கிறது.

முகிலோ அலையோவென மருள் காட்டும்
முடிவற்ற அழகிய வெளியது உலகில்.
துடிப்பு மகிழ்வுடன் மக்கள் உலாவ
துலங்கும் வானெல்லை காணா அழகு.

முத்தமிடுவது போலப் பாவனை காட்டி
முத்தமிடாத பிரமிக்கும் கடலும் வானும்
சங்கமிப்பதாய்க் காட்டும் மாய அழகு
பொங்கும் நைஸ் கடற்கரையழகு குலைந்தது.

பயங்கரவாதம் வேலி தாண்டித் தாங்கொணா
மனவலிகள் தருவது புதுமையல்ல சூரியன்
உதித்து மறையும் செயலாக ஆகிவிட்டது.
அழகு நைஸ்நகரில் நாமுமொருமுறை வலம்வந்தோம்.

பாரவண்டியை அதி வேகமாய்ச்  செலுத்தி
பாதகமாய் எண்பத்தி நான்கு உயிர்கள்
பிள்ளைகள் பெரியவர்களாக பலியெடுத்ததும் பலர்
படுகாயமுற்றதுமான தகவலால் மனம் வலிக்கிறது.

விழுந்திட நொண்டும் வகையாய் தமிழில்
எழுகின்றது பல எழுத்துப் பிழைகள்.
பழுது கண்டு மனம் வலிக்கிறது.
இழுக்குடை நிலை இது மாறட்டும்.

அழகு, இயற்கை, ஆனந்தக் கொண்டாட்டம்.,
பழகும் உடன் பிறப்புகளைப் பிரிந்தோம்
துழாவும் மன வலிகளுடன் மேற்கிலெமக்கு
பழகிவிட்ட பாழும் துன்ப விளையாட்டிது

சுற்றிலும் ஈட்டிகளாக வெற்றி ஏணிகளாக
நற்குணம் மாற்றும் குற்றுயிராகவும் ஆக்கும்
கற்றவனும் கல்லாதவனும் பெறும் சாகசமிது
குற்றிக் குதறி மனம் வலிக்கிறது

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
15-7-2016

2008-7-6_11638_flower_divider_13793720_42120324_std

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  அக் 27, 2016 @ 13:48:32

  //முத்தமிடுவது போலப் பாவனை காட்டி
  முத்தமிடாத பிரமிக்கும் கடலும் வானும்//

  ஸூப்பர் வரிகள் சகோ வாழ்த்துகள்

  மறுமொழி

 2. Bagawanjee KA
  அக் 27, 2016 @ 17:15:58

  #பாதகமாய் எண்பத்தி நான்கு உயிர்கள்#
  இந்த துன்ப நிகழ்வு எங்கு நடந்தது ?

  மறுமொழி

 3. yarlpavanan
  அக் 28, 2016 @ 18:12:48

  இனிய தீபாவளி வாழ்த்துகள்

  ypvnpubs.com
  seebooks4u.blogspot.com
  yarlsoft.com

  மறுமொழி

 4. கோவை கவி
  பிப் 01, 2017 @ 14:25:58

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 09:18:12

  Kavi Nila:- நல் வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 16 July 2016 at 10:14

  Poongavanam Ravendran :- மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
  Unlike · Reply · 1 · 16 July 2016 at 10:16

  Vetha Langathilakam :- எனக்கு வீட்டில் விருந்தினர்கள்.
  மாலையில் வந்து அனைவருக்கும் வாழ்த்து எழுதுகிறேன் mikka nanry

  Usharani :- மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 16 July 2016 at 10:47

  Kalaivani Mohan Vaazthukkal
  Unlike · Reply · 1 · 16 July 2016 at 10:54

  Malar Amalan :- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 16 July 2016 at 11:16

  RRsel Vam :- என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
  Unlike · Reply · 1 · 16 July 2016 at 11:27

  எம் எம் நெளஷாத் பு:- கழோங்க பாரில் சிறந்தோங்க உளம் செழித்தோங்க உளமார்ந்த வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 16 July 2016 at 11:32.

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 09:22:01

  முகில் வேந்தன் :- வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 16 July 2016 at 11:34

  Sumathi Shankar :- வாழ்த்துகள் அம்மா
  Unlike · Reply · 1 · 16 July 2016 at 12:03
  ஒரத்தநாடு. நெப்போலியன். வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 16 July 2016 at 15:57

  கவிஞர் முகமது அஸ்கர் :- வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 16 July 2016 at 16:04

  Yogarani Ramalingam :- வாழ்த்துக்கள்.
  Unlike · Reply · 1 · 16 July 2016 at 16::-

  Kannan Theni :- வாழ்த்துக்கள்
  Like · Reply · 16 July 2016 at 18:23

  Panneerselvam Tamilpoet :- நல் வாழ்த்துகள்.!
  Like · Reply · 17 July 2016 at 13:38
  Senthamari Kodi :- நல்வாழ்த்துகள் அம்மா
  Like · Reply · 17 July 2016 at 13:43

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: