7. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 7

img_03031
(பெடரேசன் சதுக்க வாசல் 2 பேருந்து தயாராக உள்ளது. ஏறினால் மெலபேர்ண் சுற்றலாம்.)

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 7

 

மெல்பேர்ண் நகரம் சுற்றிப்பார்த்தல்…..
என்ன!.. மழைத் தூற்றலாக இருந்தது. எடுத்த படங்கள் மழைத்துளிகளுடன் இருந்தது. அதனால் எங்கும் இறங்கிச் சுற்றவில்லை. வாகனத்திலேயே விபரங்களை ஒலி பெருக்கி மூலம் அறிந்தோம்.
ஆம் வாகனத்தில் ஏறும் போதே காதில் வைத்துக் கேட்க மின்சார இணைப்பு தருகிறார்கள். எந்த மொழியில் தேவையோ அதற்குரிய இலக்கங்களை அழுத்திக் கேட்கலாம்

img_01761
வானெட்டும் கட்டிடங்கள் மலைப்பாக இருந்தது. ” அமெரிக்காவும் இப்படித் தான் இருக்குமோ ” என்றேன் இவரிடம்.
பல்கலைக் கழக வைத்தியசாலைக் கட்டடம்,

(எனது படம் மழைத்துளியோடு எடுத்தது. அடுத்து வருவது கூகிள் படம்.)img_03121

medical-building

கிங்ஸ் டொமைன்ஸ் பாக், குவீன்ஸ் விக்டோரியா பூங்கா பூக்கள் கடிகாரம்,

img_03991

img_04161-jpg-floral-clock

google photo   of flora clock 25561615-the-floral-clock-and-the-statue-of-king-edward-vii-in-the-queen-victoria-gardens-in-melbourne-in-aus

and fountain   walker-fountain-kings-domain-melbourne-water-featu

கான்சர் வைத்தியசாலைக் கட்டிடம்,  உலகில் அதிக தோல் கான்சர் அவுஸ்திரேலியாவில் தானாம்.  மிக அழகான கட்டிடம். முழுதாக என்னால் எடுக்க முடியவில்லை ஆதலால் இதுவும் கூகிள் படமே.

comprehensive-cancer-center

நாற்சதுர விளையாட்டிடம் ஸ்ரேடியம்  ஏஏஎம்  பாக் என்று கூறும் இடம்.

img_04221

This is my photo and down google....AAMI park   (Melbourne Rectangular Stadium)

1024px-aamipark

பாராளுமன்றம் என்று விசேட இடங்களை விபரித்தபடி பயணம் தொடர்ந்தது.

img_04191

இப்படி மரத்தைக் கண்டதும் தென்னை பனை என்று மனம் ஏமாந்தது. 

எங்கு இறங்கிப் பார்க்க விருப்பமோ அங்கு இறங்கிப் பார்த்து அடுத்த அதே இன வாகனம் நிற்கும் தரிப்பிடத்தில் பயணச் சீட்டைக் காட்டி ஏற முடியும்.

எமக்கு உள் நாட்டிற்குள் விமானப் பயணம் செய்ய சிறு பயணப் பெட்டி ஒன்று (traveling bag) வாங்க வேண்டிய தேவையாக இருந்தது.
வாகனச் சுற்றுலா முடிய நாம் உணவு உண்டோம். சீஸ் பேகரும் மில்க் ஷேக்கும் தான். ஆம் ஆரோக்கியமற்ற உணவு தான். அவசரத்திற்கு வேறு வழியில்லை. சுற்று வட்டத்தில் கடை தேடிப் புகுந்தோம்.
மெல்பேர்ண் முடிய கன்பரா நகரம் செல்வது எமது திட்டம். ஆம் பேருந்தில் கன்பரா செல்லும் திட்டம்.
பேருந்து நிலையம் எங்குள்ளது என்று பயணப் பெட்டி வாங்கிய கடையிலேயே விசாரித்த போது ” சவுதேன் குறொஸ் ” க்குப் போக வேண்டும், டிராம் வண்டியில் பயணிப்பது உள் நகரத்தில் இலவசம். இந்தப் பக்கத்தால் போய் அந்தப் பக்கம் திரும்பி வருகிற டிராமில் ஏறுங்கள் 3வது தரிப்பிடத்தில் இறங்குங்கள் என்று அழகாகக் கூறினார்கள்.
இதன் படி துணிந்து ஏறிச் சரியாகப் போய் இறங்கி விசாரித்தோம். அழகாக விபரங்களை எழுதித் தொலை பேசி இலக்கத்துடன் தந்தனர்.

stores_located_in_southern_cross_station

stock-photo-melbourne-australia-november-ticket-office-and-woolworths-supermarket-at-southern-cross-336538412

திரும்பவும் அதே போல டிராம் ஏறிய இடம் வந்து சேர்ந்தோம். தெரியாத இடத்தில் இதை ஒரு சாதனை போலக் கருதி எங்களை நாங்களே மெச்சினோம்.
ஏன் கன்பராவுக்குப் பேருந்துப் பயணம்?…. புகையிரதம், விமானம் வேகமாகப் போகும் காட்சிகள் பார்ப்பது குறைவாகும். பேருந்தில் அழகாகப் பார்த்துப் போகலாம். ஆனால் கன்பராவிற்குப் பேருந்து 8 மணித்தியால ஓட்டம், பரவாயில்லை என்று முடிவெடுத்தோம்.
இப்போது தம்பி மகன் சுபோதனுக்கு தொலை பேசியில் கூறினோம் நாம் வீடு வரத் தயார் என்று. அவரும் வந்து கூட்டிப் போனார். நடுப் பட்டினம், வாகனம் நிறுத்தும் பிரச்சனையால் இந்த ஏற்பாடு.
சரி இரவாகுதே இரண்டுங் கெட்ட நேரம் இரவுணவு வாங்கிப் போவோம் என்று தம்பி மகனிடம் கூற சரி என்று றிச் மகால் (waymont)  உணவகம் சென்றோம்.  

rich-mahal

Enter a caption

(last 3 pics google)

என்ன வாங்கலாம் என்றால் செவ்வாய் கிழமைகளில் அப்பம் செய்வார்களாம் ஒருவர் சுட்டுக் கொண்டு நின்றார். அதை கொம்போ -1 கொம்பொ – 2 என்று பணிக்க (ஓடர் பண்ண) வேண்டுமாம். எடுத்துக் கொண்டு போவதாக கூறினோம். ஒரு முட்டை அப்பம், ஒரு பாலப்பம், ஒரு சும்மா அப்பமென தேவையான அளவு வாங்கிக் கொண்டு போனோம். கொம்போ என்றால் கொம்பினேசன் (எதோடு எது என்று) ஆக இருக்கும் என்றார் இவர்.
வீட்டிலே உணவு காத்திருந்தது. ஆயினும் அப்பம் மேலதிகமானது தான்.
அன்று நன்கு அலைச்சல் நடை…..நடை. இரவு நன்கு நித்திரை கொண்டு எழுந்தோம்.

மிகுதியை அடுத்த 8ம் பகுதியில் காண்போம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
31-10-2016.

AAMI park   (Melbourne Rectangular Stadium)

aamipark3

13 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  நவ் 01, 2016 @ 02:32:09

  வியக்க வைக்கும் படங்கள்
  நன்றி சகோதரியாரே

  மறுமொழி

 2. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 01, 2016 @ 09:00:36

  புகைப்படங்கள் அழகு தொடர்கிறேன் சகோ

  மறுமொழி

 3. சிவகுமாரன்
  நவ் 03, 2016 @ 19:23:10

  ஆஸ்திரேலியாவை சுற்றிப் பார்த்தேன் செலவின்றி.
  நன்றி

  மறுமொழி

 4. Nagendra Bharathi
  நவ் 05, 2016 @ 04:18:16

  படங்களோடு சேர்ந்து நாங்களும் சுற்றி பார்த்த அனுபவம் கிடைத்தது , நன்றி

  மறுமொழி

 5. கீதமஞ்சரி
  நவ் 06, 2016 @ 06:04:32

  ஐந்தாறு வருடங்களுக்கு முன்பு நாங்கள் மெல்போர்னில் வசித்த காலத்தை நினைவுக்குக் கொண்டுவந்த அழகான பயணப்பதிவு.. மிகுந்த ரசனையோடு எழுதியுள்ளீர்கள்.. இந்த வயதில் முற்றிலும் புதிய இடத்தில் யாருடைய துணையுமின்றி இயல்பாக பயணித்தல் ஒரு சாதனைதான். வாழ்த்துகள் தோழி.

  மறுமொழி

 6. Kowsy
  நவ் 20, 2016 @ 19:28:53

  உங்கள் பதிவைப் பார்க்கும் போது அவுஸ்திரேலியா போகின்ற ஆசை மேலிடுகின்றது. படங்கள் சிறப்பு

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 09:39:02

  மிக மகிழ்ச்சி. படமெடுப்பதை நான் நேசிக்கிறேன்.
  மனம் நிறைந்த நன்றி உறவே கருத்திடலிற்கு.

  மறுமொழி

 8. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 09:44:44

  Vetha Langathilakam :- கவிதை எழுத எவ்வளவு ஆர்வமோ அதே அளவு
  பயணக் கதை எழுதுவதிலும் ஏற்படுகிறது.
  மனநிறைவு – திருப்தி….It took long time…
  1 November 2016

  Vetha Langathilakam :- மெல்பேர்ண் முடிய கன்பரா நகரம் செல்வது எமது திட்டம். ஆம் பேருந்தில் கன்பரா செல்லும் திட்டம்.
  · 1 November 2016

  Natarajan Baskaran:- மகிழ்ச்சி…. எப்பொழுது இந்தியா பயணம்…?
  2 November 2016

  Vetha Langathilakam Nalla kelvi bro
  16-3-2017

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: