4. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம்

img_11531

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 4

பறவைகள் நேசன்
பறவைகள் காப்பாளன்
வீர பாண்டியன் விருமாண்டி.
           உறவுகளை விட்டு
           ஊர் விட்டு ஊர் வந்ததால்
            இவன் பறவைகள் நேசனாகினானோ!
பெரியம்மா உங்கள் வீட்டில் சோழா இருக்கிறார் ஆதலால் எனது பெயர் வீர பாண்டியன் விருமாண்டி என்று எழுதுங்கள் என்று வேண்டினார்     இந்தப் பறவைகள் நேசன். இவர் பறவைகள் காப்பாளன் என்றும் எமக்குத் தெரியவில்லை. இரு பரம்பரைகளில் யார் இப்படியான குணாதிசயமுடையவர் என்று பேசினோம். 
அப்பு ஆச்சி குஞ்சியப்பாவை மாட்டுத் தொழுவம் வைத்து மாடுகள் வளர்த்து தங்கள் தேவைக்குப் பால் எடுத்துப் பாவித்தனர். நாங்களும் பனை ஓலைகள் மாட்டிற்குக் கிழித்துக் கொடுத்த அனுபவங்கள் உண்டு.  ஆம் மாட்டிற்கு உணவாக தமது வளவுப் பனை மர ஓலைகள் வெட்டி எல்லாரும் சுற்றி வர இருந்து கிழிப்போம், ஈர்க்கு வேறாக ஓலை வேறாக. பின்   அதை வெட்டி மாடுகளிற்கு உணவாக்குதல்.
அங்கு வீட்டில் இறங்கியதும் கைக் குழந்தை குவா குவா என அழுவது போல சத்தம் அடிக்கடி கேட்டது. இது யாரடா1 என்ன குழந்தைச் சத்தம்! என்று கவனித்தபடி இருந்தேன். தங்கையின் பேரப் பிள்ளைகள்,   2 வயதுக்கு மேற்படவே இருந்தனர்.இப்படி அழ யாருமில்லை.
வீரபாண்டியன் விருமாண்டி நீலமும் பச்சையுமான மக்கவ் (macaw ) கொக்கட்டோ (cockatoo ) என்ற பெயருடையதும் அதற்குச் சோடியாக றெட் ஸ்காலெற் மக்கவ் ம் (red scarlet macaw) வைத்து வளர்க்கிறார். பெரிய அறை கூடு மாதிரி செய்து அதனுள் அவர்கள் உள்ளனர். அதிகாலை எழுந்து பழங்கள் வெட்டிப் போடுவார். இல்லாவிடில் உயிரை வாங்கி விடுவினம் கத்திக் கீச்சிட்டு.
நாம் படுத்த அறையோடு தான் அவர்களது (கிளிகளின்) அறை உள்ளது.

img_11551-jpg-kk

கண்ணாடி யன்னலில் சொண்டால் தட்டுவினம். திரையை விலக்கி குழந்தைகளோடு கதைப்பது போல கதைத்தேன்.   இவர்களது சத்தம் தான் ஆரம்பத்தில் நான் கேட்டுக் கவனித்த குவா குவா சத்தம்.
மத்திய, வடக்கு, தெற்கு அமெரிக்க, மெக்சிக்கோ பகுதிக்குரிய பறவைகள். கொட்டைகள், பழங்கள், பாஃம் மரப் பழங்கள், பூக்கள், விதைகளை உணவாக உண்ணும் பறவைகள். நீலம் பச்சை மக்கவ் 30 – 35 வருடங்கள் வாழுமாம். ஸகாலெட் சிவப்பு மஞ்சள் சராசரி 40 – 50 வருடமாம் சில 75 வருடமும் வாழுமாம். ஆச்சரியமாக உள்ளதல்லவா!
முயல் – இவர் தனிய உள்ளார். வித்தியாச முகம். நாம் பார்த்துப் பழகியது டென்மார்க் முகம் தானே. இவர் ஒல்லாந்து தேசத்தவர். கடந்த பகுதிப் படத்தைப் பாருங்கள்.

img_11181
கிளி வைத்திருந்தாராம் திறந்து விட்டாராம். கிளிகளிற்கு வெட்ட வெளியில் பழத்தட்டு நீர் என்று வைக்கிறார்.img_11241

 

ஊரில் மரத்தில் உள்ள கிளிகள் 3 இனங்கள் படத்தில் காண்கிறீர்கள்.

img_11131

1. சாம்பல், றோஸ் வெள்ளைக் கொண்டை

img_02901

2.பச்சை சிவப்பு மஞ்சள்,

img_02911

3. தனிய சாம்பல் சிவப்பு. நினைத்த நேரம் இவை

img_02851

வந்து கொண்டாட்டமாக உணவு உண்டு செல்கின்றன..

இதை விட புறா – நமது புறா மாதிரித் தெரியவில்லை சிறிது வித்தியாசம். படம் எடுக்க முடியவில்லை பறந்து விட்டன.
மக்பை ( ) என்று அசல் காகம் போல

img_11261

ஆனால் கறுப்பும் வெள்ளையும் கலந்தது. காகம் மாதிரி வருவது அது தானாம். படத்தில் காணுவீர்கள்.

img_11251
இங்கு இன ஒற்றுமையும் உண்டு சண்டையும் உண்டு. பார்ப்பது வேடிக்கை.
இப்படியாக குருவிகள் காப்பகம் போல – பார்த்துப் படம் எடுப்பது எனக்கு ஆர்வமாக இருந்தது. இரண்டு நீண்ட நீல இறகுகளும் டென்மார்க்கிற்குக் கொண்டு வந்தேன்,  வெற்றி, சோழாக்குக் கொடுங்கோ என்று தந்தார் வீரபாண்டியன் விருமாண்டி. 
(இது வீரபாண்டியன் விருமாண்டியின் ஆர்வமும் ஆசையும். )

மனைவியின் விருப்புமுமின்றி இருக்காதே. அவர் மனவியலில் மாஸ்டர் முடித்துத் தொடர்கிறார் வேலையுடன்.

அடுத்த பகுதி 5ல் சந்திப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12 அக்டொபர் 2016.

3-3-2017…இப்போது ஏராளமான கொக்கட்டோ என்ற பறவைகள் இவரிடம் உணவு உண்ண வருகிறதாம் படங்கள் அனுப்பியிருந்தார் பாருங்கள். கொண்டை காக்கட்டூ (Sulphur crested cockatoo)

birds-4

birds-1

birds-2

birds-3

 

 

 

ssssssss-c

3. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம்

 

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 3

 

அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாநிலத்தின் தலைநகரம் மெல்பேர்ண் . மேலும் இது ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.
மெல்பேர்ண் அவுஸ்திரேலியா மற்றும் ஆசியா-பசிபிக் மண்டலத்தில் முன்னணி நிதி மையமாக விளங்குகின்றது
நியூசவுத் வேல்ஸ் பகுதியாக ஆவணி 30, 1835 இல் இந்த நகரம் நிறுவப்பட்டது.
1837இல் பிரித்தானிய குடியேற்றமாக அங்கீகரிக்கப்பட்டது. நியூ சவுத் வேல்சின் ஆளுநர் சேர் ரிச்சர்டு புர்கால் ‘மெல்பேர்ண்’ எனப் பெயரிடப்பட்டது. அந்நாளைய பிரித்தானியப் பிரதமர் மேல்பேர்ணின் இரண்டாவது வைகவுண்டு நினைவாக இப்பெயரைத் தேர்ந்தெடுத்தார்
மெல்பேர்ண், 1851 இல் புதியதாகப் பிரிக்கப்பட்டு உருவான விக்டோரியா குடியேற்றப்பகுதியின் தலைநகரமாயிற்று. 1850 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட விக்டோரியாவின் தங்க வேட்டையின்போது மெல்பேர்ண் உலகின் மிகப்பெரிய, செல்வமிகு நகரங்களில் ஒன்றாக உருவானது. 1901 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியக் கூட்டமைப்பிற்குப் பின் புதிய அவுஸ்திரேலியா நாட்டிற்கு 1927 வரை மெல்பேர்ண் தலைநகரமாக விளங்கியது.
பெருநகரப் பகுதிக்கும் மாநிலத்திற்கும் முதன்மை வானூர்தி நிலையமாக விளங்கும் மெல்பேர்ண் வானூர்தி நிலையம்     துல்லாமரைன் வானூர்தி நிலையமாகும்.
இந்த விமான நிலையத்தில் தான் சென்று 8ம் திகதி மாலை 6மணிக்கு அவுஸ்திரேலியாவில் இறங்கினோம். ( நினைவு படுத்துகிறேன் 6ம் திகதி மாலை மூன்றே முக்காலுக்கு டென்மார்க்கில் விமானம் ஏறினோம்)

img_01121
45 நிமிடநேர இடைவெளியில் கட்டிடக் காட்டினூடாகத் தங்கை மகன் வீடு சென்றடைந்தோம்.

img_01151

மரங்கள் அடர்ந்திருந்தால் மரக்காடு என்போம். முழுவதும் கட்டிடமாக இருந்தால் வேறென்னவாம்!… கட்டிடக் காடு தானே!

img_01131

தங்கை மகன் மாப்பிள்ளை யுனிக் கட்டிட நிறவனத்தை நிர்வாகித்துச் சொந்தமாக நடத்துகிறார். அலுவலகம் வீட்டிலேயே உள்ளது.( UnikConstructions Pty LtdDirector/Builder · Melbourne, Australia)

கொழும்பு, சிட்னியிலிருந்து தங்கை மகள் குடும்பங்கள், மாப்பிள்ளையின் இரட்டையர் தம்பி சிட்னியிலிருந்து, தங்கை கணவர், மாமியார் இலங்கையிலிருந்து என்று உறவுகளின் தாலாட்டில் நாட்கள் விரிந்தது. 8ம் திகதி மாலை 6 மணி, வீடு செல்ல ஏழரை மணியானது. பேசி இரவுணவோடு அந்த நாள் முடிந்தது.
சிறு வயதில் பழகியவர்கள் வளர்ந்து பல வருடங்களின் பின் நெருக்கமாகக் காணும் போது வித்தியாச பரிமாணங்களில் தெரிந்தனர்.
முக்கியமாக மாப்பிள்ளை மிக நகைச்சுவையாக கவித்துவமாகப் பேசினார். வாழ்வின் அனுபவங்கள், சினிமா நகைச்சுவைகள் அவரை மாற்றியிருக்கலாம். நெருக்கமாகப் பழக சந்தர்ப்பம் கிடைக்காததால் அவரது பாணி எமக்குத் தெரியாமலும் இருந்திருக்கலாம்.
பாலி தீவுக்குப் போய் வந்து இரண்டு பெரிய கிளிகள் வளர்க்கிறார்.

collage-parot-2

 

 

ஒல்லாந்து தேசத்து முயல் ஒன்று வளர்க்கிறார்.

collage-rabit

கிளியும் வைத்திருந்தாராம் இப்போது இல்லை. ஆனால் நிறையக் கிளிகள் உள்ளது. என்ன ஆச்சரியமா!…….இன்னும் வரும்.

பகுதி 4ல் தொடருவோம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
10-2016.

kutuvi-b

2. அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம்

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 2

img_00771

அபுதாபி செல்லும் விமானத்தில் விமானப் பணிப் பெண் ஒருவர் இலங்கைப் பெண் போல மிகவும் சிநேகமாக என்னைப் பார்த்துப் புன்னகைத்தபடி இருந்தார் தனக்கு ஓய்வு கிடைத்த போது ஒடி வந்து பிந்து என்று எனது நெற்றிப் பொட்டைக் காட்டி ஆங்கிலத்தில் பேசினார் தான் பம்பாய் என்றார் நானும் இலங்கை என்று கூறினேன்.
தன் இனம் போன்ற ஒருவர் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் போது, பேசும் போது ஏற்படும் உணர்வே வித்தியாசமான உணர்வு தான். அபுதாபி வர அவளை வாழ்த்தி விட்டு இறங்கினோம்.
அபுதாபி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரமாகவும் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகவும் உள்ளது. இந்நாட்டின் கூட்டமைப்பிலுள்ள ஏழு அமீரகங்களில் மிகப் பெரியதான அபுதாபி அமீரகத்திலுள்ள இந் நகரம் அவ்வமீரகத்தின் தலைநகரமும் ஆகும். தற்கால அபுதாபியின் தோற்றம் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பனியாஸ் என்னும் பழங்குடிக் கூட்டமைப்பு உருவானதோடு தொடங்கியது. இது பின்னர் துபாய் நகரத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. 19 ஆம் நூற்றாண்டில் துபாயும், அபுதாபியும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன.
இந்த நகரத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவண் அரசும், அதன் பல்வேறு அலுவலகங்களும் அமைந்துள்ளன. அபுதாபி அமீரக அரச குடும்பத்தின் இருப்பிடமும் இதுவே. அபுதாபி இன்று பல்நாட்டின மக்களைக் கொண்ட பெரு நகரமாக வளர்ச்சியடைந்துள்ளது. விரைவான வளர்ச்சியும், நகரமயமாக்கமும், இங்கு வாழும் மக்களின் ஒப்பீட்டளவில் அதிகமான சராசரி வருமானமும் சேர்ந்து இந் நகரத்தை முற்றாகவே மாற்றியுள்ளன. (தகவல் விக்கிபீடியா)
ஆறு மணிநேரப் பயணத்தால் மாலை 6 மணிக்கு அபுதாபியில் இறங்கி உள்ளே செல்லும் போது தூரத்தில் தெரிந்த ஒரு வளைவான கட்டிடத்தைப் படம் எடுத்தேன்.

img_01001

நன்கு தெரியாத கட்டிடம் பின்னர் கூகிள் மூலம் பார்த்த போது மிக அழகான கட்டிடமாக இருந்தது.
அடுத்த விமானம் இரவு 10.50க்கு மெல்பேர்ண்க்குக் காத்திருந்தோம்.

img_00911

சிறு ஓடையான இடமாகவும் துப்பரவின்றியும் அழகின்றியும் இருந்தது. மக்கள் பரபரப்பாக நடப்புதும் தமது அடுத்த விமானம் பிடிக்கப் பறப்புதுமான இடம்.

img_00861

நடந்து நடந்து கடைகளைப் பார்த்தோம். கடைகளும் அவ்வளவு பிரமாதமாகக் கவரவில்லை. இரு இருக்கைகள் சேர்ந்த மாதிரி கண்டதும் அமர்ந்து ஆறியிருந்தோம். இடத்தைப் பறி கொடுக்காமல் இவர் இருக்க நான் சென்று எனக்கேற்ற உணவு பார்த்தேன்.

img_00891

மச்சம் சாப்பிடாதவள் நான். பின்பு வந்து கணவரிடம் கூற அவர் சென்று தனக்கும் எனக்குமாக உணவு வாங்கி வந்தார். இரவு உணவையும் உண்டோம். (மாலை ஆறரைக்கு இரவுணவு உண்ணும் பழக்கம் கொண்டவர்களாதலால்).

img_00921
பின் தங்கையின் பேரக் குழந்தைகளிற்கு இனிப்புகள் வாங்கினோம்.

img_00951

பின்னர் நாம் செல்லும் படலை இலக்கம் அறிந்து போனோம் அந்தப் பக்கம் பரந்த இடமாக இருந்தது.

img_00961

அழகு, அலங்காரம் குறைவாகவே இருந்தது. ஈச்ச மரம் ஒன்று செழிப்பமின்றியே இருந்தது.

img_00981

தமிழர் ஒருவர் தன் வேலையில் மிக அக்கறையாக கண்ணாடிகள் துடைத்தபடி இருந்தார்.

img_00941

எமது படலை இலக்கம் தெளிவின்றி இருந்ததால் அவரிடம் எந்தப் பக்கம் போக என்று கேட்டோம்.

img_00931
விமானம் 13 மணித்தியாலப் பயணம். நன்கு நித்திரை கொண்டோம்.
விமான நிலையத்திற்கு தம்பி மகனும் தங்கை மகனான மாப்பிள்ளையும் வந்திருந்தனர்.

img_01101
அடுத்த பதிவு 3ல் சந்திப்போம்.
வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
4 -புரட்டாதி 2016

canada-nakatam

Next Newer Entries