457. குழந்தைப் பருவம்

15192736_1760101824254861_562708747522126378_n

***

இறைவன் வழங்கிய சிறந்த காலம்
குறையற்ற அன்பு அணைப்பின் காலம்
நிறைந்திட்டால் மகிழும் குழந்தைக் கோலம்..
குறையானால் தொடரும் தாக்கமுடை ஓலம்.
***
பச்சைமண்ணாம் அரும் குழந்தைப் பருவம்
அச்சடிக்கும் அனுபவங்களே மனதுள் உருவம்
இச்சைகள் அதிகம் இல்லாப் பருவம் ‘
இச் ”சுகளெனும் கொடையால் நிறையும் பருவம்.
***
குழந்தைச் சிரிப்பு குறைகள் போக்கும்
வழங்கும் சொல்லைத் தன் வசமாக்கும்.
முழங்குங்கள் நல்லவற்றை முழுதாக எடுப்பார்கள்.
குழந்தைக்கு மகிழ்வு அமைதி வரமாகும்.
***
புல்லின் பனித்துளியாம் குழந்தைப் பருவம்
மெல்லச் சிறகு தாழ்த்தும் அமைதி.
கொல்லெனச் சிரிக்கும் குதூகலப் பருவம்
பால் வெள்ளைப் பௌர்ணமிச் சொரூபம்.
***
மார்பில் மலரும் ரோஜா மலராம்
மூர்க்கம் களையும் குழந்தை தெய்வீகம்.
சேர்த்து ஒற்றியெடுக்கும் முத்தங்கள் வைரம்.
வார்க்கும் நிகழ்கால மன பருவம்.
***
வசந்தத் தென்றலில் நனைந்த சுவாசம்.
வாசனை தூவும் இன்பத் தேன்காலம்
ஆசிரியமின்றி இயக்கங்கள் பயில் பருவம்
குசும்புடை குழந்தைப் பருவம் கௌரவம்.
***
Vetha Langathilakam Denmark 19-11-2016.

 

வேறு
செந்தமிழ்ச் சாரல்

மழலைப் பருவம். (சான்றிதழ்)

(சுழலை – வஞ்சகம்.)

குழவிப் பருவம் மனிதனை மயக்கும்
மழலைக் காலம் மகா சொர்க்கம்.
சுழலை நிழலற்ற பளிங்கு இதயம்.
மிழற்றும் மொழித் தேன் பாகில்
கழலுதலாகும் மனிதன் கரும் வைராக்கியம்.
கருத்தாக நல்ல பண்பு மரபுகளைப்
பருவத்தில் பயிரிடும் பொற் காலமாம்
பச்சை மண் பருவம் இது.

வேதா. இலங்காதிலகம்.டென்மார்க். 17-11-2017.

1424422_773891019303899_1021719375_n99

10. (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்).10

 

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 10

கன்பரா தலைநகர நிர்வாகம் சார்ந்த நாடு. நாடாளுமன்ற வீடு என்கின்றனர். 1908ம் ஆண்டு இது அவுஸ்திரேலியாத் தலைநகரமாக ஆகலாமென்ற எண்ணம் உருவானது. 1913ல் இதைத் திட்டமிட்டு உருவாக்கத் தொடங்கினர், அதாவது இது திட்டமிட்டு உருவான நகரம். மெல்பேர்ணிலிருந்து 650 கி.மீட்டர் வடகிழக்கில் உள்ளது.

1927ல் கன்பெரா தலைநகராக அறிவிக்கப் பட்டது. கன்பரா நாடாளுமன்றத்தை 1988ல் ஆஸ்திரேலிய இராணி இரண்டாம் எலிசபெத் திறந்து வைத்தாராம்.
1788ல் வெள்ளையர் வந்து அவுஸ்திரேலியாவில் இறங்கிய போதே 8 இலட்சம் பழங்குடியினர் அங்கு வாழ்ந்துள்ளனர். 250 தனி மொழிகள் இருந்ததாம். முர்ரே ஆற்றுப் பகுதியில் குடியேறினராம். 1824ல் தானாம் வெள்ளையர் கன்பெராவில் குடியேறினராம். கறுப்பு மலையில் (black mountian ) நிலம் வாங்கி மேய்ச்சல் மந்தைகள் ஆரம்பித்து ஊரை உருவாக்கினார்களாம்.

img_00621-jpg-can

img_00572-jpg-can

கறுப்பு மலை பற்றிப் பின்னரும் பார்ப்போம்.
கன்பெராவில் மக்கள் பரவலாக வாழ்கின்றனர். ஒரு தனி வட்டாரத்தில் பிறநாட்டு உயர் ஸ்தானிகர் ஆலயங்கள், தூதரகங்கள், உயர் நீதிமன்றம்,

img_04771-jpg-can

img_00531-jpg-can

முதலாம் இரண்டாம் உலகப் போரில் இறந்த வீரர்களுக்கு நினைவிடங்கள்,

img_00591-jpg-can

Parliment (new)

img_00601-jpg-can

பல்கலைக் கழகம்,

img_00881-jpg-can

நாணயம் உருவாக்கும் இடம், கலை சினிமா ஓவியத்திற்குரிய இடங்கள் எனப் பல உள்ளன. சுமார் 3½ இலட்சம் மக்கள் வசிக்கின்றனராம். பழங்குடி மக்கள் மொழியில் கம்பீரா என்றால் ஒன்று கூடுமிடமாம். அதனால் பின்னர் இதை வெள்ளையர்கள் கன்பரா என்று பெயராக்கினராம்.
உயரமான மலை கறுப்பு மலை தான் மேற்குக் கன்பராவில் 812 மீட்டர் (2664 அடி) உயரம் பேர்லி கிறிபெஃன் குளத்தின் கரையில் உள்ளது. மொலொன்கோ என்ற ஆறு இதை மறித்து குளமாக்கியுள்ளனர்.   11கி.மீட்டர் நீளம், சராசரி 4 கி.மீட்டர் ஆழம், 1.2 கி.மீட்டர் அகலம் உள்ளது இந்தக் குளம். சுற்றி வர தேசிய கலறி (சித்திர கூடம்), மியூசியம் (காட்சிச்சாலை) நூலகம், சர்வகலாசாலை என்று அனைத்தும் உள்ளது. மலை உச்சியில் ரெல் ஸ்ரா கோபுரம் உள்ளது.

img_1587-1

 

1980ல் இதை திறந்தார்கள். மின்சாரம் வானொலி அனைத்தும் இயங்குகிறது. கறுப்பு மலையில் 100 வகைப் பறவைகளும், 500 வகைத் தாவரங்களும், 5000 வகை பூச்சிகளும் வாழ்கின்றனவாம். அருகில் சிவப்பு மலை என்றும் உள்ளதாம். முன்பிருந்தவர்களால்; அதன் சிவப்பு மண்ணின் காரணமாக சிவப்பு மலையெனப் பெயர் வந்ததாம்.

கன்பராவில் ஒரு பெரிய முருகன்  கோவிலும் உள்ளது.
எனது படக் கருவியில் காட் டிஸ்க் ல் இடம் முடிந்து விட்டது. இன்னும் நிறையப் படங்கள் எடுக்க இருக்கிறதே. சுற்றுலா முடிய சுப்பர் மாக்கெட் தேடினோம்.

5095879650_4_water-fountain-canberra-centre

கன்பரா சென்ரர் புகுந்தோம். புதிதாக ஒன்று வாங்கினோம்.

டென்மார்க்கில் பயணத்திற்கு முன்னர் நான் மசாஜ்க்குப் போய் வரும் போது எனது கை மணிக்கூடை விழுத்தி விட்;டேன். வந்த வழியில் உள்ள இடமெல்லாம் பெர்லின் அபுதாபியில் கூட மணிக்கூடு தேடினோம். வெள்ளி தங்க நிறம் கலந்த என் விருப்பத்திற்கமைய கிடைக்கவில்லை. இங்கும் தேடினோம். மலிவு விலையும் போட்டிருந்தனர். ஒன்று கிடைத்து வாங்கினோம்.

ca-watch

என்னையறியாமல் கையை நேரத்திற்காகப் பார்த்துப் பார்த்து ஏமாந்தேன் பல தடவை. இப்போது உண்மையில் மிக மகிழ்வாக இருந்தது ஒன்று கிடைத்தது. குழந்தைப் பிள்ளை போல மகிழ்ந்தேன் என்று கூறலாம். கன்பரா சென்ரர் அருகில் நடந்த  போது    ஒரு  படம்   உருவம்   வித்தியாச   கலை  வேலைப்பாடாக   இருந்தது.

img_00971-jpg-can
மணிக்கூடு வாங்கி அங்கு இருந்து நின்று என்று படங்கள் எடுத்த பின்னர்
” சிற்றி லூப்பில் சுற்றுவோமா! ” என்றார் கணவர். ” சுற்றலாமே ” என்று ஏறிச் சுற்றினோம். இந்தப் பேருந்து இலவசம். விசித்திரமாக 221 இலக்கம் போட்ட பெரிய கட்டிடம் ஒன்று கண்டோம். அது பல கந்தோர்கள் உள்ள கட்டிடம் என்று வாசித்து அறிந்தேன். பாருங்கள்.

img_00441
மிகுதியை அடுத்த பதிவு 11ல் காணுவோம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
11-2016

 

header_australia_canberra

4. நான் பெற்ற விருதுகள்

kavimalai

நான்  பெற்ற  விருதுகள் தொடர்ச்சி…..

கவியூற்று
கவினெழி
கவியருவி
கவிச்சிகரம்.
சிந்தனைச் சிற்பி
ஆறுமுகநாவலர் விருது.

கவிமலை

*

கவிஞர் பாலு கோவிந்தராஜன்

1 hr 20-5-2016

செந்தமிழ் வாழியவே என்ற தலைப்பில் கவிஞர்கள் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். முத்தமிழ்க்களம் சார்பாக பெருமையுடன் நன்றி சொல்கிறோம் சிறப்பாகக் கவிதைப் படைத்திட்ட கவிஞர் பெருமக்களுக்கு கவிமலை என பட்டமளித்துப் பாராட்டுகிறோம்.நிர்வாகி, முத்தமிழ்க்களம்.

விஞர் பாலு கோவிந்தராஜன் to

மு த்தமிழ்க்களம்

18 mins · கவிமலை எனப் பட்டமளித்துப் பாராட்டுகிறோம். கவிதாயினி. வேதா இலங்காதிலகம் அவர்களை.

எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்

*

2008-7-6_11638_flower_divider_13793720_42120324_std

7. கண்ணதாசன் சான்றிதழ் 8

13701239_1753990958199012_120091861594793639_o

போட்டி (7)

தலைப்பு:- வடை போச்சே (நகைச்சுவையென)

சரசு:-
யேக்கா! வாயுல மனசுல
வாறதை கவியா எழுதிப்புடலாமுன்னா
கணனில பாத்து எழுதலாமாமே!
உனக்கு தெரியுமாக்கா சொல்லேன்!

இல்லாட்டி சிவா அண்ணேட்டை
கேட்டு எழுதித் தரகேக்கலாமா!
இங்கிலீசு போட்டு நல்லா
எழுதித் தருவாரு சொல்லக்கா!

லெட்சுமி:-
ஏண்டி கூறுகெட்ட சிறுக்கி!
ஏண்டி ஒம் புத்தி
இப்புடிப் போவுது! கவிதைப்
போட்டினாநீ சுயமாத் தானெழுதோணும்!

வாயுல மனசுல வாறதை
எழுது! உங்கப்பாரு படிக்க
வெச்சது இதுக்கு தானே!
பரிசு கெடச்சான்னா இல்லாங்காட்டியுமென்னா!

கணனி பாத்து எழுதினா
வடை போகும் தெரிஞ்சுக்கோ!
விளையாட்டில்ல புள்ள நெச
வெனையா நினைச்சுக்கடி சரசு!

வேறு:-
பாட்டி வடை சுட
நரி வந்து தினமும்
வடையை திருடி உண்டது.
நரிக்குப் புத்தி புகட்டவேண்டும்.

பாட்டி காக்காவுடன் பேசி
நரியை ஏமாத்த நினைத்தாள்.
காக்காவிடம் பாட்டி வடை
கொடுத்து மரத்திற்கு அனுப்பினாள்.

நரி பாடக் கேட்டது.
காக்கா வடையோடு பறந்தது.
நரிக்கு வடை போச்சு.
நாட்டிலேயிப்படி வடைகள் போகுதே!

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
21-7-2016.

 

lines-b

9. (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்)9.

melbourne-star

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 9

உங்களிற்கு மெல்பேர்ண் நட்சத்திர வளையம் பற்றிக் கூறத் தவறிவிட்டேன். சில பல தடவை அதன் அருகோடு வாகனத்தில் சென்றோம். இறுதியாக டென்மார்க் வர விமான நிலையம் செல்லும் போது அதன் இரவு அழகைக் கண்டோம். இரவு ஒளி வெளிச்சம் மிக கவர்ச்சியாகக் கண் பறித்தது. மறுபக்கம் தம்பி மகன் இருந்தார். இரவு ஒளி ஜாலத்தை படம் எடுக்க முடியவில்லை.  ஒளி ஜாலம் கூகிள் படமாக இங்கு தருகிறேன். 

melbourne-attractions-the-southern-star-observation-wheel-melbourne-b5x8wr

southernstar1

120 அடி உயரம். 2008ல் திறந்தனர். உடனே 40 நாட்களால் தொழில் நுட்பக் கோளாறால் மூடினார்கள். பின்னும் பல தடவை திறப்பதும் மூடுவதுமாக இருந்துள்ளது. இதில் (சில்லில் கபினில் இருந்து) சுழரும் நேரம் அரை மணித்தியாலம். டிக்கட் வாங்க கியூ தான். டொக்லாண்ட் பகுதி நீர்அ ருகே உள்ளது.

சரி…..
இப்போது அல்பெரி நகரம் பற்றிச் சிறிது பார்ப்போம். இது முர்றே ஆற்றின் வடக்கில் உள்ளது.   இதில் முறே ஆறு அல்பெரி கன்பெரா காண்கிறீர்கள்.

canberra_murry-river

45,627 சனத் தொகை என்று கூறப்பட்டது இன்னும் சிறிது கூடுதலாக இப்போது ஏறியிருக்கும். மத்தியதரைக் கடல் சுவாத்தியம் என்று கூறப்பட்டுள்ளது.

img_04381-jpg-can-5

நிறைய வைன் தயாரிப்பிற்குப் பெயர் போனதாம். 1888ல் முதலாவது பாடசாலை கட்டப் பட்டதாம். கன்பெரா மெல்பேர்ணிற்கு நடுவில் உள்ள இடம்.
மாலை ஏழரை மணியளவில் கன்பெரா சென்றடைந்தோம். பேருந்து நிறுத்தத்திலேயே பெரிய அலுவலகம் உள்ளது 16ம் திகதி சிட்னி செல்லும் திட்டம். செல்வதற்குப் பேருந்து வசதியையும் பார்த்து வைத்தோம். தெரியாத புது இடத்தில் அது ஒரு பிரச்சனை முடிந்தது போல ஆறுதலாக இருந்தது. எங்கே எப்படி என்று முழுசத் தேவையில்லைப் பாருங்கோ!…..
சிட்னியில் தங்கையின் ஒரு மகளும் மகனும் உள்ளனர். மூன்றரை மணி நேரப் பேருந்துப் பயணமே.
சரி இனி நாம் இரண்டு இரவு கன்பராவில் தங்குவதற்குப் பதிவு முன்னதாகவே செய்யவில்லையாதலால் நடை தூரங்களில் தான் வாடி வீடு தேடினோம். முதலிரண்டில் இடமில்லை என்றனர். காரணம் பாராளுமன்றக் கூட்டமாம். 3 வதாக மந்திரா வாடி வீட்டில் இடம் கிடைத்தது. விலை அதிகம் தான். இரண்டு இரவிற்குப் பதிந்து குளித்து வெளியே சாப்பிடக் கிளம்பினோம். களைப்பு தான் மழையும் தூறியபடியே இருந்தது. வேறு எங்கும் சுற்றவில்லை. சாப்பிட்டதும் வந்து விட்டோம். இரவு, மழைத் தூற்றல் இவரின் கையைப் பிடித்தபடி தாண்டித் தாண்டி வந்தோம். குப்பையோ, அருவருப்போ என்றபடி நடந்து வந்து சேர்ந்திட்டோம்.
இரவு நல்ல தூக்கம் கொண்டு எழுந்தோம்.
(15ம் திகதி. 2016 புரட்டாதி ) காலையில் பார்த்தால் பாதைகள் துப்புரவாக அழகாக இருந்தது. இரவு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.
பேருந்துக் கந்தோரிலேயே நல்ல வசதியான உணவகம் சிறிது நடை தூரத்தில் இருந்தது. சான்விச் பால் தேநீருடன் காலையுணவு முடித்தோம். நகரச் சுற்றுலாவை அனுபவிக்க பயணச் சீட்டுப் பெற்றுத் தொடர்ந்தோம். மாலை வரை எத்தனை தடவையும் இதில் சுற்றலாம். இதில் ஏறிச் சுற்றும் போது ” சிற்றி லூப் ” என்று இன்னொரு பேருந்து இலவசமாக ஓடியது. ஏறிச் சுற்றலாம் என்றும் கண்டோம் . canberra center

img_00431

போரில் இறந்தவர்கள் நினைவிடம். முழு சரித்திரம்,  உருவங்கள்,  ஆயுதங்கள் என்று பல உள்ளே காணலாம்

img_00541-jpg-can

மெல்பெர்ண் போன்று இங்கு வானளாவிய கட்டிடங்கள் குறைவு. நெருக்கடியற்ற இடைவெளிகளுடன் அமைந்திருந்தது. அமைதியாக, இயற்கை அழகுடன் நகரம் காட்சியானது. சிறிது குளிராக இருந்தது.

கன்பெரா புதிய பாராளுமன்றக் கட்டிடம் கீழே காண்பது
மிகுதி அடுத்த பதிவு 10ல் காணுங்கள்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
17-11- 2016
download

47. பா மாலிகை (வாழ்த்துப்பா)

sleted-jpgwith-stamp-jpg3

நேற்று 14-11-2016   Denmark  றணேர்ஸ் நகர நடன வகுப்பு கலாலயா கலைக் கல்லூரி தனது 10வது ஆண்டு விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடியது. மண்டபம் நிறைந்த மக்கள் திரள்.  மிக அருமையாக பிள்ளைகளின் திறமையும் நடன ஆசிரியர் அழகிய கலைமகளின் திறமையும் அவரது குரு சுமித்திரா சுகேந்திராவின் திறமையும் வெளிப்பட்டது.  மிக மகிழ்வான ஒரு மாலையாக அமைந்தது. பிரதம வீருந்தினர் நடன குரு சுமித்திரா சுகேந்திரா தான். வரவேற்புரை .திரு யோகராஜா.
கலையரங்க மேடை அழகாக அமைத்திருந்தனர். நானும்   வாழ்த்துக் கவிதை ஒன்று வாசித்து பொன்னாடை போர்த்தினேன் கலைமகளிற்கு. பிரபல நாடக நடிகர் நடிக வினோதனின் மகளே கலைமகள். திருவாளர் யோகராஜாவின்மகன் வள்ளுவனின் மாணவர்களின் கீபோட் வாத்திய இசை நடந்தது. அவரது அண்ணனும் நிகழ்ச்சி ஒலி பரப்பாளராக இருநதார். கலைக் குடும்பத்துப் பிள்ளைகளும் கலை விற்பன்னராகவே இருக்கிறார்கள். இது இறைவனின் அருளும் இவர்களின் திறமையுமே.சில படங்கள் போடுகிறேன்.இறுதியில் அமுதசுரபி எனும் நாட்டிய நாடகம் நிகழ்விற்கு மகுடமாக அமைந்தது. அனைவருக்கும் வாழ்த்துகள்.

img_01261-jpg-kk

img_01151-jpg-nn

குத்துவிளக்கு ஏற்றி கௌரவிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவள்.   மிக்க நன்றி. .மகிழ்ச்சி.

img_01241

img_01201

 

544790_589749011038301_969070378_n

46. 60வது ஆச்சரியப் பிறந்தநாள் வாழ்த்து..

img_00851-jpg-gg

எமது குடும்ப நண்பர் பரமசிவம் பொன்னம்பலம்
(சிவம் ) 60வது பிறந்த நாள்கொண்டாட்டத்தில்
12-11-2016 நான் வாசித்த கவிதை.

Balloon Banner

img_00771-jpg-mm

 

 

Balloon Border-b

3. நூல் மதிப்பீடு – முன்னுரை

14741173_357880367893149_611275231_n

 

14794088_357880357893150_393948291_n

14793995_357880347893151_1963096237_n

14797371_357880361226483_2104502173_n

அணிந்துரை

பொத்துவில் தமிழ் மகன் அஐ;மல்கான் தனது தமிழ் ஆர்வத்தினால் தனது இரண்டாவது நூலாக
” காதல் பித்தனின் கிறுக்கல் ”
என்ற தலைப்பிட்ட நூல் வெளியிடுகிறார். இளவயது அல்லவா தலைப்பு ஆச்சரிம்; தரவில்லை.
இவர் எனக்கு முகநூலில் அறிமுகமான துடிப்புடைய ஒரு மகன். இவரது தமிழ் ஆர்வம் போற்றுதற்கு உரியது.
தமிழுணர்வு ஒரு தமிழனுக்கு வேண்டும். அது எமது ஊன்றுகோல், கலங்கரை விளக்கு. தமிழில் பேச பலர் கூசுகிறார்கள். ஆங்கிலத்தோடு கூடப் பிறந்தவர்கள் போன்று, அது நாகரிகமென்ற மாயையில் உள்ளனர். தொலைக்காட்சிகளிலும்; ஆங்;கிலம் சக்கை போடு போடுகிறது. இதை மிக மனக்கசப்புடன் எழுதுகிறேன்.
இவ்வகை நிலையில் தமிழ் நூல் வெளிவிடுவது சிறந்த முயற்சி, தமிழ் தொண்டுமாகிறது.
” கவிஞனை அழிக்க முடியாது.
பூமி வெடித்த முளைத்தது போல
பூக்கும் எழுதுகோற் போராளி.
நெஞ்சத்து உணர்வின் பாவிதை
தஞ்சமான உணர்வின் பாவிதை.
உழுத நீல குருதியின் இழப்புத் தான்
எழுதும் இதயத்துக் கவிதை வண்ணம்.
பழுதுபட்டதைத் திருத்தக் கூறியே
எழுதுகோலினை எடுக்கிறான் கவிஞன்;.
ஏர் முனையாய் தமிழை உழும்
கூர்முனை தானே பேனாமுனை ”
இவரது குறைவான எண்ணிக்கைக் கவிதைகளைத் தான் நான் வாசித்துள்ளேன் அவை காதல் தோல்விக் கவிதைகளாக இருந்தது.
கவிஞன் என்பவன் எல்லா வித உணர்வுகளையும் வெளியிடுவான்.
மனுநெறிக் காவலன் தானே பேனா முனை. எனவே வித்தியாச வரிகளின் நளினங்கள் அறிந்து அவற்றை வெளிக்கொண்டு வந்து எழுத வேண்டும்.
இவர் இன்னும் பல நூல்கள் எழுதி புகழ் பெறட்டும்.
பல் கவித்துவ மொழியாடலை புதுமையாகப் பகிரும் சிறந்த எழத்தாளராக இவர் உயர வேண்டும் என்று டென்மார்க்கிலிருந்து வாழ்த்துகிறேன்.

அன்புடன்
திருமதி வேதா. இலங்காதிலகம்.
(ஒய்வு பெற்ற பாலர் பாடசாலை ஆசிரியர்)
டென்மார்க் 14-7-2016
https://kovaikkavi,wordpress.com

 

download

77. காடும் அழகும்

471536_310237545748768_2073209016_o

காடும் அழகும்

வனம், கானகம், புறவு அடவியெனும்
அனந்தப் பெயருடைய மரங்களடர் நிலம்.
ஐவகை நிலத்திணையில் முல்லை காடு சார்ந்ததாம்.
ஐக்கியமானால் காடு அதிசயம் சொர்க்கம்.
***
சுந்தரவனக்காடுகள் வங்காளதேசத்துப் பரப்பிடையும்
சுந்தரமுடைய பறவைகளிற்கு அமேசான் காடும் சிறப்பாம்.
மூங்கில் காடுகள் யப்பானில் அழகாம்.
மூங்கில் எழுப்பும் சத்தமே அற்புதமாம்.
***
யேர்மனியில் சுற்றுலாவிடமாம் கருப்புக் காடாம்.
கவாய்தீவில் வெப்பமண்டலக் காடு அழகாம்.
கனோலா மஞ்சள் மலர்வனம் சீன அழகாம்.
கேரளஅழகு சுந்தனமரக்காடு முட்புதர்காடு.
***
பிரான்சில் லவெண்டர் மரவனம் அழகாம்
இலாவண்ய இயற்கைக் காட்டில் ஆதிவாசிகள்
புரண்டார். செயற்கை அழகில் இன்று மயங்குகிறார்.
காட்டு அழகு நேசிப்பவனுக்கு ஒரு விதம்.
***
காட்டுலாவில் அமைதி ஓய்வு புத்துணர்ச்சியுருவாகும்.
காற்று சுத்திகரிப்பால் நல் மூலிகைக் காற்று
காடு வளம் காப்பதில் நாடு வளமாகிறது.
நீர்வளப் பாதுகாப்பு அடர்வன ஈரப்பதம் சிறப்பு.
***
நறுமுகையே நாடியேகு காடுக்கேதுமில்லை ஈடு.
வெறும் அற்ப மாயை செயற்கையோடு.
பெறுமதி! காட்டுக் குடை தேடு.
சிறுமதி காடழிக்காதே! வெப்பமாகும் நாடு
***
– வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.20-6-2016
some info:- ஐவ்வாதுமலை சூழ்ந்த அமிர்திக்காடு
வேலூரிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரம்
முத்துப்பேட்டை அலையாதிக் காடு அழகாம்

பெல்ஜியம் கல்லெர்பாஸ் காடு
புங்கமர அழகோடு ஊதாப்பூக்கள்.
நக்கிள்ஸ் மலைத்தொடர் தும்பர
இலங்கையின் அழகு நிலமாம்

முட்புதர் காடுகள் , சந்தனமரம்
கேரள அழகு.காகிதம் பிசின் செயற்கைப்பட்டு
திறந்த விக்காமு, சருகுப் பசளை உரமாகும் காடு

trees

8.அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 8

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 8

காப்டன் குக் அவுஸ்திரேலியாவைக் கண்டு பிடித்தார் என்பது அச்சடித்த கதை. யாரா நதிக்கரையில் தான் மெலபேர்ண் நகரம் உள்ளது. பல தடவை அந்த நதிப் பாலத்தினூடாகப் பயணித்தோம்.

img_03781

img_04111

யாரா மலையிலிருந்து யாரா நதி வருகிறதாம்.

travel-map-yarra

பாதிப் பகுதிக்கு மேல் பாலைவன நாடு. அவுஸ்திரேலியா மேய்ச்சல் நாடு தான் புல்வெளி நாடு என்பதால் ஆடு, மாடு பெருகியபடியே தான் உள்ளன. பல கோடிக் கணக்கில் மாடுகள் இறைச்சிக்கும் பாலுக்காகவும் உள்ளன. குயீன்ஸ்லாந்திற்கு அடுத்தபடியாக விக்டோரியா மாநிலத்தில் நிறைய மாடுகள் உள்ளன. இறைச்சியை சுயதேவை போக ஏற்றுமதி செய்கின்றது.
மிகப் பெரிய இரும்பு உற்பத்தி உள்ளது. நிலக்கரி, செம்பு, ஈயம் உலகெங்கும் ஏற்றுமதியாகிறது. முன்பு கம்பளி உரோமத்திற்குப் பெயர் போனது. இப்போது அதன் சந்தை நிலை குறைந்துள்ளதாம்.
1823ல் மிகப்பெரிய தங்க வேட்டை ஆரம்பித்தது. 1850 லிருந்து உலகம் முழுதும் தங்க வேட்டைக்காக அவுஸ்திரேலியாவிற்குப் படையெடுத்ததாம். அதனாலேயே மிகப் பெரிய சனப் பெருக்கம் ஏற்பட்டதாம். அதனால் நாடும் முன்னேறியதாம். விக்டோரியா மாகாணம் தங்கத்திற்கு முக்கிய இடமானது. மெல்பேர்ண் நகரம் தங்க வேட்டைக் காலத்திலே தான் பெரிய நகரமானது. தங்கம் பதுக்கி வைத்த களஞ்சிய இடமாக இருந்தது. பலராட் எனும் நகரம் மிகப் பிரபலமானது 1850களில். இன்றும் தங்கம் அங்கு எடுக்கிறார்களாம். சுற்றுலா மக்களிற்காகவும் தங்கம் எடுக்கும் முறைகள் சுரங்கங்கள் சென்று பார்வையிட முடியும். மெல்பேர்ணிலிருந்து ஒரு மணி நேரப் பயணமே.

shire-map2

படத்தைப் பாருங்கள். இவை சிறிய தகவல்கள்.

img_04001

இங்கு காணுவது நஷனல் கலறி ஒப்ஃ விக்டோரியா.(National gallery of victoriya ) கட்டிடம்.
இனி பயணத்திற்கு வருவோம்.
காலை 8.00 மணிக்கும், பகல் 12க்கும், மாலை அதாவது இரவு 10க்கும் பேருந்து கன்பராவுக்குச் செல்ல இருந்தது. நாம் 14ம் திகதி-8-2016 புதன் கிழமை பகல் 12 மணிக்குக் கன்பரா செல்லும் பேருந்து எடுக்க நேரத்தோடு புறப்பட்டோம். தங்கை கணவர், புதுப் பொண்ணு மாப்பிள்ளையுடன் முதலில் மெல்பேர்ண் வக்ரதுண்டா விநாயகர் கோவிலுக்குப் போனோம்.

img_04261
1992ல் கோயில் உருவானது. 2013ல் புதிய மண்டபமும் தேர் வெள்ளோட்டமும் நடத்தினார்களாம்.

p4050242

Ethu   maddum   google photo.

இந்தப் பெயரை கூகிளில் தேடினால் படங்கள் விபரங்கள் காணலாம். அங்கு தொழுகை முடிய புறப்பட்டோம். மெல்பேர்ண் நடுப் பட்டினம் செல்ல 45 நிமிடங்கள் மகிழுந்துக்கு எடுக்கும்.
” சவுதேண் குறொஸ்” பேருந்து நிலையத்தினுள் வந்து மாப்பிள்ளை எங்களை பேருந்தில் ஏற்றி விட்டார்.

e114_5856

மனைவியார் தெருவில் வாகனத்தை உருட்டி நேரத்தைப் போக்கினார் தரிப்பிடப் பிரச்சனையின்றி.

கன்பரா செல்லும் பேருந்தில் சாரதி வரிசையின்றி மற்றப் பகுதி முதலிரு இருக்கையையும் பாய்ந்து பிடித்தாச்சு – படம் பிடிக்க வசதியாக.

img_04301-jpg-canbara

காலையுணவு சாப்பிட்டது தான் பகலுணவின்றி பயணித்தோம். கடற்கரையோடு வாகனம் ஓடலாம் என்று ஊகித்தோம் அது தவறாகிப் போனது ஏமாற்றமே
வெட்டவெளிப்புற்தரையும் செம்மறி ஆடுகள், மாடுகள், குதிரைகள் என்று மேய்ந்த படியிருந்த காட்சிகள் பசுமை போர்த்தி கண்ணுக்குக் குளிர்மையாக இருந்தது.

img_04311-jpg-can-2

img_04341-jpg-can3
அவுஸ்திரேலியா நாட்டுப் புறங்கள் இலண்டன் போலத் தான். புல்வெளிப் பிரதேசம் என்றும் அவுஸ்திரேலியாவைக் கூறுவதுமுண்டு.
கன்பரா செல்லும் பேருந்துப் பயணத்தில் கலங்கலாக ஒரு ஆறு நடுவில் தென்பட்டது. இது முர்றே ( ) ஆறாக இருக்கலாம்.
பின்னர் 3 மணி நேரத்தால் வெட்ட வெளிப் பிரதேசம் மாறி,   தூரத்தில் ஒரு கிராமம் மாதிரித் தென்பட்டது. அது அல்பெரி நகரம் தான். 4 மணிக்கு அல்பெரி புகையிரத நிலையத்தில் ஆட்களை ஏற்ற வண்டி நின்றது.

img_04431-jpg-can-9

img_04441-jpg-canbe-10

யாரும் ஏறவும் இல்லை இறங்கவுமில்லை. இன்னும் சிறிது தூரத்தில் வடக்கு அல்பேரியில் சாப்பிட நிற்பாட்டினார் சாரதி.
அப்பாடா எமக்குக் கொலைப் பசி. அவர்கள் வழக்கமாகச் சாப்பிடும் இடத்தில். ஓடிப் போய் சாப்பிட்டோம்.

albury-north

This one is google photo

img_04501-jpg-can-15

img_04541-jpg-can-18

பின்னர் ஒன்றிரண்டு படங்கள் எடுத்தோம்.

இனி அடுத்த பதிவு 9 ல் சந்திப்போம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
ஐப்பசி 2016.

ssssssss-c

Previous Older Entries