6. ஏழாவது கண்ணதாசன் சான்றிதழ்.

13735633_1753072968290811_8784608383151339310_o

ஏழாவது கண்ணதாசன் சான்றிதழ்

இன்றும் பார்க்கப் புதிதானது
இரத்தக் கண்ணீர் உயிர்ப்புடையது
துரோகம், வஞ்சகம், திமிர்
ஆங்கில மோகம் அடடா!..
தமிழ் கலாச்சாரப் பழிப்பு!

இதயம் தொழும் தமிழ்வசனம்
இரண்டு, மூன்றென பலமுறை
பார்த்தால் கவிஞனாகலாம் (உதாரணம்)
” தொட்டாரைத் துவள வைக்கும்
துடியிடை – சுழல் நயன சுந்தரி”

காந்தாவின் இளமையழகு பதினாறு
வயதில் பார்த்து ரசித்த ராஐம்
நடிப்பு சிறப்பு. சோடி நடனம்
ரசனை.” ஆளை ஆளைப் பார்க்கிறாய்”
நானன்று பாடியாடிய பாடல்.

மோகனரங்கம் பெண் பித்தன்.
மோகிக்கும் நடிப்பு. நகைச்சுவை
அவரது பாணி தனி ஒப்புக்குத்
திருமணம், பரத்தை வீடு, குஷ்டமுகந்த
தண்டனை. மனைவிக்கு மறுமணம் மகாசிறப்பு.

கல்வி கற்றிட்டால் கனமழியுங்கள்!
கால் செருப்பாய் மரணவீட்டில்
மனிதங்கள் வீசல்! அகங்காரம்!
கலைசெய்கிறேனென்று தஞ்சம் காந்தா
விலையானது தேகம் வாழ்வு

இரு கரங்களில் ஏந்திய தேனீர்தட்டு
குஷ்டரோகமென்று மாடிப்படியில் சறுக்கல்
சந்திரபாபு நகைச்சுவை பிரமாதம்!
சிரிப்பு! ”தட்டிப் பறித்தார் என்வாழ்வை”
நான் விரும்பப் பாடிய பாடல். மிக நன்று.

”குற்றம் புரிந்தவன்” உலகப் பிரபலம்.
பாடல் போட்டியில் பலர் பாடுகிறார்
”பெண்களே உலக பெண்களே” பெண்களை
தூக்கி நிறுத்தும் கருத்துடைய பாடல்.
பாலுவின் தமிழ் உச்சரிப்பும் சிகரம்.

ஒழுக்கமிழந்தால் நிச்சயம் ஒருவனின்
விழுப்பமும் விழுமெனும் கருத்தமைந்த
இரத்தக் கண்ணீர் உலகில் இன்னுமுள்ள
பல மோனகரங்கன் – காந்தாக்களைத்
திருத்தட்டும்! படிப்பினைப் படம்.

( எல்லோரும் கதைச் சுருக்கம் தந்துள்ளனர் )

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க் 19-7-2016.


Unavngivet

Advertisements

15 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  Nov 04, 2016 @ 11:09:10

  அழகிய வார்த்தைக் கோர்வைகள் அருமை வாழ்த்துகள் சகோ

  மறுமொழி

 2. Bagawanjee KA
  Nov 04, 2016 @ 12:49:44

  இரத்தக் கண்ணீர் என்றாலும் என் இஷடக் கண்ணீராச்சே 🙂

  மறுமொழி

 3. கரந்தை ஜெயக்குமார்
  Nov 04, 2016 @ 13:35:09

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  Nov 05, 2016 @ 02:43:39

  வாழ்த்துக்கள் சகோதரி….

  மறுமொழி

 5. Nagendra Bharathi
  Nov 05, 2016 @ 04:19:17

  வாழ்த்துக்கள்

  மறுமொழி

 6. கீதமஞ்சரி
  Nov 06, 2016 @ 06:02:53

  இன்னும் இந்தத் திரைப்படத்தைப் பார்க்கவில்லையே என்ற ஆதங்கத்தை உண்டாக்குகிறது தங்கள் அர்த்தமுள்ள ரசனையான வரிகள்.. விரைவில் பார்த்து நானும் தங்கள் அனுபவத்தை அறிய முனைகிறேன். வெற்றிக்கு வாழ்த்துகள் தோழி.

  மறுமொழி

  • கோவை கவி
   Nov 06, 2016 @ 23:00:12

   கவியுலகப் பூஞ்சோலை கவிதைப் போட்டிக்காக உடனே இரத்தக்கண்ணீர் என்று கணனியில் அடித்துப் பார்த்து கவிதை எழுதினேன். நானும் முன்பு பார்க்கவில்லை.

   மறுமொழி

 7. கோவை கவி
  Feb 01, 2017 @ 14:28:52

  மறுமொழி

 8. கோவை கவி
  Mar 16, 2017 @ 10:00:28

  Kavi Nila ;. நல் வாழ்த்துக்கள்
  Unlike · Reply · 1 · 16 July 2016 at 10:14

  Poongavanam Ravendran :- மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் வெற்றி பயணம்
  Unlike · Reply · 1 · 16 July 2016 at 10:16

  Vetha Langathilakam :- எனக்கு வீட்டில் விருந்தினர்கள்.
  மாலையில் வந்து அனைவருக்கும் வாழ்த்து எழுதுகிறேன் mikka nanry.

  மறுமொழி

 9. கோவை கவி
  Mar 17, 2017 @ 22:18:20

  இரா. கி:- கவியுலகப் பூஞ்சோலையில்
  புவி போற்றும் பாவரசிக்கு
  வாழ்த்துகள்
  Unlike · Reply · 2 · 17 July 2016 at 05:37

  Vetha Langathilakam :- மிக மகிழ்ச்சி ஐயா..
  கருத்திற்கு மனம் நிறைந்த நன்றிகள்.
  Like · Reply · 1 · 17 July 2016 at 09:21

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: