77. காடும் அழகும்

471536_310237545748768_2073209016_o

காடும் அழகும்

வனம், கானகம், புறவு அடவியெனும்
அனந்தப் பெயருடைய மரங்களடர் நிலம்.
ஐவகை நிலத்திணையில் முல்லை காடு சார்ந்ததாம்.
ஐக்கியமானால் காடு அதிசயம் சொர்க்கம்.
***
சுந்தரவனக்காடுகள் வங்காளதேசத்துப் பரப்பிடையும்
சுந்தரமுடைய பறவைகளிற்கு அமேசான் காடும் சிறப்பாம்.
மூங்கில் காடுகள் யப்பானில் அழகாம்.
மூங்கில் எழுப்பும் சத்தமே அற்புதமாம்.
***
யேர்மனியில் சுற்றுலாவிடமாம் கருப்புக் காடாம்.
கவாய்தீவில் வெப்பமண்டலக் காடு அழகாம்.
கனோலா மஞ்சள் மலர்வனம் சீன அழகாம்.
கேரளஅழகு சுந்தனமரக்காடு முட்புதர்காடு.
***
பிரான்சில் லவெண்டர் மரவனம் அழகாம்
இலாவண்ய இயற்கைக் காட்டில் ஆதிவாசிகள்
புரண்டார். செயற்கை அழகில் இன்று மயங்குகிறார்.
காட்டு அழகு நேசிப்பவனுக்கு ஒரு விதம்.
***
காட்டுலாவில் அமைதி ஓய்வு புத்துணர்ச்சியுருவாகும்.
காற்று சுத்திகரிப்பால் நல் மூலிகைக் காற்று
காடு வளம் காப்பதில் நாடு வளமாகிறது.
நீர்வளப் பாதுகாப்பு அடர்வன ஈரப்பதம் சிறப்பு.
***
நறுமுகையே நாடியேகு காடுக்கேதுமில்லை ஈடு.
வெறும் அற்ப மாயை செயற்கையோடு.
பெறுமதி! காட்டுக் குடை தேடு.
சிறுமதி காடழிக்காதே! வெப்பமாகும் நாடு
***
– வேதா. இலங்காதிலகம், ஓகுஸ், டென்மார்க்.20-6-2016
some info:- ஐவ்வாதுமலை சூழ்ந்த அமிர்திக்காடு
வேலூரிலிருந்து முப்பது கிலோமீட்டர் தூரம்
முத்துப்பேட்டை அலையாதிக் காடு அழகாம்

பெல்ஜியம் கல்லெர்பாஸ் காடு
புங்கமர அழகோடு ஊதாப்பூக்கள்.
நக்கிள்ஸ் மலைத்தொடர் தும்பர
இலங்கையின் அழகு நிலமாம்

முட்புதர் காடுகள் , சந்தனமரம்
கேரள அழகு.காகிதம் பிசின் செயற்கைப்பட்டு
திறந்த விக்காமு, சருகுப் பசளை உரமாகும் காடு

trees

12 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  நவ் 11, 2016 @ 01:26:16

  சிறுமதியால் காடு அழிப்பது வேதனைதான்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  நவ் 11, 2016 @ 02:35:01

  சிறப்பாகச் சொன்னீர்கள்…

  மறுமொழி

 3. Bagawanjee KA
  நவ் 11, 2016 @ 04:27:44

  காட்டுக் குடை அழகோ அழகு 🙂

  மறுமொழி

 4. Nagendra Bharathi
  நவ் 11, 2016 @ 05:11:04

  அருமை

  மறுமொழி

 5. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 11, 2016 @ 05:22:04

  காட்சியைப்போல் கானமும் அழகு சகோ,

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 10:21:24

  Subajini Sriranjan:- காடு அழகு தான்
  அருமை
  10 November 2016

  Vetha Langathilakam:- கருத்திடலிற்கு மிக நன்றியும்
  மகிழ்வும். உறவே.
  10 November 2016

  Rathy Mohan:- வனம் வனப்பு
  10 November 2016

  Vetha Langathilakam:- கருத்திடலிற்கு மிக நன்றியும்
  மகிழ்வும். உறவே.
  10 November 2016 at 21:36

  Subi Narendran :- காடும் அழகு இந்தக் கவிதையும் அழகு. காட்டைப் பற்றி மிக அற்புதமான கவிதை. //காட்டுலாவில்அ மைதி ஓய்வு புத்துணர்ச்சியுருவாகும். காற்று சுத்திகரிப்பால் நல் மூலிகைக் காற்று காடு வளம் காப்பதில் நாடு வளமாகிறது. நீர்வளப் பாதுகாப்பு அடர்வன ஈரப்பதம் சிறப்பு.// அருமையான வரிகள். வாழ்த்துக்கள் அக்கா.
  10 November 2016 at 21:49

  Vetha Langathilakam:- Subi கருத்திடலிற்கு மிக நன்றியும்
  மகிழ்வும். உறவே.
  10 November 2016 at 22:41

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 10:36:29

  Punitha Ganesh :- அடர் காடும் அதன் ஆழமும்
  10 November 2016 at 22:12

  Vetha Langathilakam :- Punitha கருத்திடலிற்கு மிக நன்றியும்
  மகிழ்வும். உறவே.
  10 November 2016 at 22:42

  Geetha Mathi :- நல்ல நல்ல தகவல்களோடு அழகான விழிப்புணர்வு கூட்டும் கவிதை.. பாராட்டுகள்.
  10 November 2016 at 22:54

  Vetha Langathilakam :- Geetha கருத்திடலிற்கு மிக நன்றியும்
  மகிழ்வும். உறவே.
  11 November 2016 at 10:19

  Sharatha Rasiah :- arumaiyana varikal
  11 November 2016 at 08:59

  Vetha Langathilakam:- Sharatha…….கருத்திடலிற்கு மிக நன்றியும்
  மகிழ்வும். உறவே.
  11 November 2016 at 10:20

  Sujatha Anton :- நறுமுகையே நாடியேகு காடுக்கேதுமில்லை ஈடு.
  வெறும் அற்ப மாயை செயற்கையோடு.
  பெறுமதி! காட்டுக் குடை தேடு….See more
  27 November 2016 at 10:42

  Vetha Langathilakam:- nanry manry.. makilchchy..
  · 27 November 2016 at 11:50

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: