9. (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்)9.

melbourne-star

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 9

உங்களிற்கு மெல்பேர்ண் நட்சத்திர வளையம் பற்றிக் கூறத் தவறிவிட்டேன். சில பல தடவை அதன் அருகோடு வாகனத்தில் சென்றோம். இறுதியாக டென்மார்க் வர விமான நிலையம் செல்லும் போது அதன் இரவு அழகைக் கண்டோம். இரவு ஒளி வெளிச்சம் மிக கவர்ச்சியாகக் கண் பறித்தது. மறுபக்கம் தம்பி மகன் இருந்தார். இரவு ஒளி ஜாலத்தை படம் எடுக்க முடியவில்லை.  ஒளி ஜாலம் கூகிள் படமாக இங்கு தருகிறேன். 

melbourne-attractions-the-southern-star-observation-wheel-melbourne-b5x8wr

southernstar1

120 அடி உயரம். 2008ல் திறந்தனர். உடனே 40 நாட்களால் தொழில் நுட்பக் கோளாறால் மூடினார்கள். பின்னும் பல தடவை திறப்பதும் மூடுவதுமாக இருந்துள்ளது. இதில் (சில்லில் கபினில் இருந்து) சுழரும் நேரம் அரை மணித்தியாலம். டிக்கட் வாங்க கியூ தான். டொக்லாண்ட் பகுதி நீர்அ ருகே உள்ளது.

சரி…..
இப்போது அல்பெரி நகரம் பற்றிச் சிறிது பார்ப்போம். இது முர்றே ஆற்றின் வடக்கில் உள்ளது.   இதில் முறே ஆறு அல்பெரி கன்பெரா காண்கிறீர்கள்.

canberra_murry-river

45,627 சனத் தொகை என்று கூறப்பட்டது இன்னும் சிறிது கூடுதலாக இப்போது ஏறியிருக்கும். மத்தியதரைக் கடல் சுவாத்தியம் என்று கூறப்பட்டுள்ளது.

img_04381-jpg-can-5

நிறைய வைன் தயாரிப்பிற்குப் பெயர் போனதாம். 1888ல் முதலாவது பாடசாலை கட்டப் பட்டதாம். கன்பெரா மெல்பேர்ணிற்கு நடுவில் உள்ள இடம்.
மாலை ஏழரை மணியளவில் கன்பெரா சென்றடைந்தோம். பேருந்து நிறுத்தத்திலேயே பெரிய அலுவலகம் உள்ளது 16ம் திகதி சிட்னி செல்லும் திட்டம். செல்வதற்குப் பேருந்து வசதியையும் பார்த்து வைத்தோம். தெரியாத புது இடத்தில் அது ஒரு பிரச்சனை முடிந்தது போல ஆறுதலாக இருந்தது. எங்கே எப்படி என்று முழுசத் தேவையில்லைப் பாருங்கோ!…..
சிட்னியில் தங்கையின் ஒரு மகளும் மகனும் உள்ளனர். மூன்றரை மணி நேரப் பேருந்துப் பயணமே.
சரி இனி நாம் இரண்டு இரவு கன்பராவில் தங்குவதற்குப் பதிவு முன்னதாகவே செய்யவில்லையாதலால் நடை தூரங்களில் தான் வாடி வீடு தேடினோம். முதலிரண்டில் இடமில்லை என்றனர். காரணம் பாராளுமன்றக் கூட்டமாம். 3 வதாக மந்திரா வாடி வீட்டில் இடம் கிடைத்தது. விலை அதிகம் தான். இரண்டு இரவிற்குப் பதிந்து குளித்து வெளியே சாப்பிடக் கிளம்பினோம். களைப்பு தான் மழையும் தூறியபடியே இருந்தது. வேறு எங்கும் சுற்றவில்லை. சாப்பிட்டதும் வந்து விட்டோம். இரவு, மழைத் தூற்றல் இவரின் கையைப் பிடித்தபடி தாண்டித் தாண்டி வந்தோம். குப்பையோ, அருவருப்போ என்றபடி நடந்து வந்து சேர்ந்திட்டோம்.
இரவு நல்ல தூக்கம் கொண்டு எழுந்தோம்.
(15ம் திகதி. 2016 புரட்டாதி ) காலையில் பார்த்தால் பாதைகள் துப்புரவாக அழகாக இருந்தது. இரவு இருட்டில் ஒன்றும் தெரியவில்லை.
பேருந்துக் கந்தோரிலேயே நல்ல வசதியான உணவகம் சிறிது நடை தூரத்தில் இருந்தது. சான்விச் பால் தேநீருடன் காலையுணவு முடித்தோம். நகரச் சுற்றுலாவை அனுபவிக்க பயணச் சீட்டுப் பெற்றுத் தொடர்ந்தோம். மாலை வரை எத்தனை தடவையும் இதில் சுற்றலாம். இதில் ஏறிச் சுற்றும் போது ” சிற்றி லூப் ” என்று இன்னொரு பேருந்து இலவசமாக ஓடியது. ஏறிச் சுற்றலாம் என்றும் கண்டோம் . canberra center

img_00431

போரில் இறந்தவர்கள் நினைவிடம். முழு சரித்திரம்,  உருவங்கள்,  ஆயுதங்கள் என்று பல உள்ளே காணலாம்

img_00541-jpg-can

மெல்பெர்ண் போன்று இங்கு வானளாவிய கட்டிடங்கள் குறைவு. நெருக்கடியற்ற இடைவெளிகளுடன் அமைந்திருந்தது. அமைதியாக, இயற்கை அழகுடன் நகரம் காட்சியானது. சிறிது குளிராக இருந்தது.

கன்பெரா புதிய பாராளுமன்றக் கட்டிடம் கீழே காண்பது
மிகுதி அடுத்த பதிவு 10ல் காணுங்கள்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
17-11- 2016
download

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
  நவ் 17, 2016 @ 16:20:28

  உங்கள் தயவில் நானும் சுற்றினேன்

  மறுமொழி

 2. கரந்தை ஜெயக்குமார்
  நவ் 18, 2016 @ 02:58:39

  தங்களுடன் பயணித்த உணர்வு
  தொடருங்கள் சகோதரியாரே

  மறுமொழி

 3. Bagawanjee KA
  நவ் 18, 2016 @ 05:17:31

  அருமையான படங்களுடன் அடுத்த பதிவுக்கும் ஆவலோடு இருக்கிறேன் 🙂

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 12:02:30

  Subajini Sriranjan:- மிக அழகான இடங்கள்
  Unlike · Reply · 1 · 17 November 2016 at 14:53

  Vetha Langathilakam :– ஆம் மிக அழகான இடங்கள் இப்படி எழுதுவதன் மூலம்
  இன்னும் மனதில் பதிகிறது சுபா. மிக்க நன்றி.
  Like · Reply · 1 · 17 November 2016 at 15:48

  Subajini Sriranjan:- இவற்றைப் பார்ப்பது ஒரு வரம் வேதாம்மா
  Like · Reply · 17 November 2016 at 16:20

  Mha. Kareem:- பார்க்கப் பசுந்தாயுள்ளது
  எங்கள் பார்வைக்கும்
  பகிர்ந்தமைக்கு நன்றிகள்
  Unlike · Reply · 1 · 17 November 2016 at 16:55

  Vetha Langathilakam :- அன்புடன் நன்றி உறவே .
  6வது பயணமாகஇது அவுஸ்திரேலியா.
  இணைப்பு இது.
  இன்னம் பல பயணக் கதைகள் இங்கு விதைத்துள்ளேன்.
  Mha. Kareem:- மிகவும் நன்றி நட்பே
  Like · Reply · 17 November 2016 at 17:59

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜூன் 05, 2020 @ 17:39:24

  முழுதும் பார்த்தேன் சகோதரி. வாழ்த்துகள்.
  பயணக்கட்டுரை அவுஸ்திரேலியா கங்காரு நாட்டுப் பயணம்
  அங்கம் 9-10 நாம் கன்பராவில் நின்றது விவரணம் உள்ளது. .

  Kugananthaluxmy Ganesan:- Vetha Langathilakam தற்போதுதான் பயணக்கட்டுரை பார்த்தேன். நான் 2018 இல் அங்கு ஒருமாதம் தங்கி பல இடங்கள் பார்த்து மெல்பேண், சிட்னி நகரின் முக்கிய சுற்றுலாதலங்களும் பார்த்தேன். அப்போ படங்கள் வைத்தேன். உங்கள் முயற்சி பயனுள்ளது. நன்றி.
  5-6-2020

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: