457. குழந்தைப் பருவம்

15192736_1760101824254861_562708747522126378_n

***

இறைவன் வழங்கிய சிறந்த காலம்
குறையற்ற அன்பு அணைப்பின் காலம்
நிறைந்திட்டால் மகிழும் குழந்தைக் கோலம்..
குறையானால் தொடரும் தாக்கமுடை ஓலம்.
***
பச்சைமண்ணாம் அரும் குழந்தைப் பருவம்
அச்சடிக்கும் அனுபவங்களே மனதுள் உருவம்
இச்சைகள் அதிகம் இல்லாப் பருவம் ‘
இச் ”சுகளெனும் கொடையால் நிறையும் பருவம்.
***
குழந்தைச் சிரிப்பு குறைகள் போக்கும்
வழங்கும் சொல்லைத் தன் வசமாக்கும்.
முழங்குங்கள் நல்லவற்றை முழுதாக எடுப்பார்கள்.
குழந்தைக்கு மகிழ்வு அமைதி வரமாகும்.
***
புல்லின் பனித்துளியாம் குழந்தைப் பருவம்
மெல்லச் சிறகு தாழ்த்தும் அமைதி.
கொல்லெனச் சிரிக்கும் குதூகலப் பருவம்
பால் வெள்ளைப் பௌர்ணமிச் சொரூபம்.
***
மார்பில் மலரும் ரோஜா மலராம்
மூர்க்கம் களையும் குழந்தை தெய்வீகம்.
சேர்த்து ஒற்றியெடுக்கும் முத்தங்கள் வைரம்.
வார்க்கும் நிகழ்கால மன பருவம்.
***
வசந்தத் தென்றலில் நனைந்த சுவாசம்.
வாசனை தூவும் இன்பத் தேன்காலம்
ஆசிரியமின்றி இயக்கங்கள் பயில் பருவம்
குசும்புடை குழந்தைப் பருவம் கௌரவம்.
***
Vetha Langathilakam Denmark 19-11-2016.

 

வேறு
செந்தமிழ்ச் சாரல்

மழலைப் பருவம். (சான்றிதழ்)

(சுழலை – வஞ்சகம்.)

குழவிப் பருவம் மனிதனை மயக்கும்
மழலைக் காலம் மகா சொர்க்கம்.
சுழலை நிழலற்ற பளிங்கு இதயம்.
மிழற்றும் மொழித் தேன் பாகில்
கழலுதலாகும் மனிதன் கரும் வைராக்கியம்.
கருத்தாக நல்ல பண்பு மரபுகளைப்
பருவத்தில் பயிரிடும் பொற் காலமாம்
பச்சை மண் பருவம் இது.

வேதா. இலங்காதிலகம்.டென்மார்க். 17-11-2017.

1424422_773891019303899_1021719375_n99

11 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  நவ் 29, 2016 @ 01:55:27

  அருமை
  குழந்தைப் பருவம் வசந்த காலமல்லவா

  மறுமொழி

 2. கோமதி அரசு
  நவ் 29, 2016 @ 08:01:48

  அது ஒரு தேன்காலம் தான். குழந்தை என்றாலே இனிமைதானே! கவிதை அருமை.

  மறுமொழி

 3. கோவை கவி
  நவ் 29, 2016 @ 08:43:55

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 12:46:30

  Subajini Sriranjan:- வாழ்த்துக்கள் வேதாம்மா
  Unlike · Reply · 1 · 22 November 2016 at 17:44

  Vetha Langathilakam:- மிக்க நன்றி சுபா
  மகிழ்ச்சி
  Like · Reply · 23 November 2016 at 12:13

  Maniyin Paakkal :- மீயழகிய பருவம். சொற்சுவை சிறப்பு. வாழ்த்துக்கள் உடன்பிறப்பே
  Like · Reply · 23 November 2016 at 12:18

  Vetha Langathilakam :- மிக்க நன்றி Mani
  மகிழ்ச்சி
  Like · Reply · 1 · 24 November 2016 at 10:28
  V
  Nagoor Naheem :- இனிய வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 22 November at 17:36 (2016)
  Vetha Langathilakam :- மிக்க நன்றி Nagoor Naheem
  மகிழ்ச்சி

  குறளோவியன் கல்லூர் அ.சாத்தப்பன் :- இனிய வாழ்த்துகள்.
  Unlike · Reply · 1 · 17 hrs

  Vetha Langathilakam :- மிக்க நன்றி urave
  மகிழ்ச்சி
  Like · Reply · 24-11-2016

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 12:50:12

  Siva Mani :- இனிய வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 24 November 2016 at 11:49

  Ramesh Manivasagam :- கவிதை என்றால் கவிதை அதுவென்ன புதுக்கவிதை கவி புனையத்தெரியாதோரின் கண்டுபிடிப்போ புதுக்கவிதை
  Unlike · Reply · 1 · 24 November 2016 at 22:42

  Vetha Langathilakam:- Nanry bro
  Like · Reply · 1 · 24 November 2016 at 23:45

  Sujatha Anton :- குழந்தைச் சிரிப்பு குறைகள் போக்கும்
  வுழங்கும் சொல்லைத் தன் வசமாக்கும்.
  முழங்குங்கள் நல்லவற்றை முழுதாக எடுப்பார்கள்….See more
  Unlike · Reply · 1 · 27 November 2016 at 10:34

  Vetha Langathilakam :- vaalka nadpu mikka nanry
  Like · Reply · 27 November 2016 at 11:45

  மறுமொழி

 6. கோவை கவி
  மே 28, 2018 @ 09:50:11

  மறுமொழி

 7. கோவை கவி
  மே 28, 2018 @ 09:50:40

  மறுமொழி

 8. Trackback: 69. 70 சான்றிதழ்கள் – கவிதைகள் (மழலைப் பருவம். குழந்தைப் பருவம்.) – வேதாவின் வலை.2
 9. Trackback: 71. 72. சான்றிதழ்கள் – கவிதைகள் (மழலைப் பருவம். குழந்தைப் பருவம்.) – வேதாவின் வலை.2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: