11. (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்).11

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 11

1851ல் நிலத்தை ஆக்கிரமித்த வெள்ளையருக்கு கூலி வேலைக்கு ஆட்கள் பஞ்சம் வந்ததாம். பிரித்தானியாவில் இருந்து குற்றவாளிகளை நாடு கடத்தி அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு வந்தனராம். குற்றவாளிகள் நிலமாக அவுஸ்திரேலியா மாறியதாம். குற்றவாளிகளால் உருமாறிய தேசம் இது என்கின்றனர். இது வாசித்து அறிந்த தகவல்.
சுற்றுலா முடிந்த பின்னர் வந்து சாப்பிட்டோம். அதன் பின் வாடி வீட்டிற்குப் (அறைக்கு ) போய் சமைப்பதா!…..மறுபடி ” கொப் ஓன் கொப் ஓப்ஃ ” பணம் கட்டி காலையில் ஏறிய பேருந்தில் ஏறிச் சுற்றினோம். ஓம்! 3 தடவை கன்பரா சிற்றி வலம் – நகர வலம் வந்தோம். மனதில் கன்பரா பாடமாகிவிட்டது.
கன்பரா சென்ரர் பெரிய மால் மாதிரி. அதனுள் யெர்மனிய அல்டியும் இருந்தது பாருங்கள்

img_00261

img_01001-jpg-can

கன்பரா சென்ரர் நடக்கும் தெருவிலொரு சிலை

. பழைய பார்லிமென்ட் கட்டிடம்,

img_00791-jpg-can

நஷனல் மியூசியம்,

img_00831-jpg-can

சீன தூதுவராலயம் பாருங்கள்

img_04921-jpg-can
உயர்ஸ்தானிகராலயங்கள் அதாவது வெளிநாட்டுத் தூதுவரலயங்கள் எல்லாம் அடுத்தடுத்து அருகருகாக மிக மிக அழகாக அவரவர் பாணியில் கட்டப்பட்டு கண்கவரும் விதத்தில் கன்பராவில். உள்ளது சிறப்போ சிறப்பு. National Gallary க்கு முன்புறம் வித்தியாசமான கலை வடிவம் பியேர்ஸ் .

img_00781-jpg-can
பேருந்தில் சுற்றிய நேரங்கள் தவிர மற்றப் பொழுதுகளில் நாய் நடை, பேய் நடை தான். சாப்பிடும் போது எனக்கு இனி போதும் என்றால், ” சாப்பிடு!…சாப்பிடு நடக்க வேண்டுமல்லவா! ” என்பார் இவர். நடந்தது போதுமென்று கால்கள்    கெஞ்சியது.  கணவரிடம் கூறினேன் அறைக்குப் போனால் இரவு சாப்பிட திரும்ப வர முடியாது சாப்பாடு வாங்கிக் கொண்டு போவோம் என்று. முதலே பீட்சா கடை பார்த்து வைத்தோம். அவுஸ்திரேலியா வந்து இன்னும் பீட்சா சாப்பிடவில்லை. என்னோடு சேர்ந்து அவரும் மரக்கறி பீட்சா தான் வாங்கிக் கொண்டு அறைக்குப் போனோம். மந்திரா வாடிவீட்டைப் பாருங்கள் yellow.

img_01061-jpg-can

img_04701-jpg-can

யன்னலூடாக கறுப்பு மலை, அயின்ஸ்லி மலை தெரிகிறது.

img_01161-jpg-can

img_04601-jpg-can24

உலகத்திலேயே உனக்குப் பிடித்தமானது எது என்று என்னைக் கேட்டால் என் கணவருடன் ஊருலா போவது என்பேன். ஆனால் என்ன!.. சேர்ந்து இணையாக நடக்காமல் விடு விடென முன்னே ஓடுவார். ” என்னையும் கொஞ்சம் பாருங்களேன் ”   என்பேன். மறந்து போய் ஓடி நடுவில் நினைவு வந்து பக்கமாகப் பார்த்து மெதுவாகுவார் நான் வந்து சேரும் வரை. எனக்குச் சிரிப்பான சிரிப்புத் தான். சில வேளைகளில் ஆளை விடாமல் கையைக் கொளுவுவேன். அப்போது ஓட முடியாது தானே.! பேசாமல் குளப்பாமல் வருவார்.

அருமையாகக் குளித்து ஆறுதலாக தளர்வான ஆடையணிந்து உணவருந்தி நாளை காலை 9 மணிக்கு சிட்னி பயணமாவது என்று திட்டமிட்டோம்.
பீட்சா சப்பிட்டபடி படமும்,

img_01241

img_01251-jpg-can

அறைகளையும் படம் எடுத்தேன். கணவருக்குப் படம் எடுப்பதில் ஆர்வமில்லை. ஆனால் என்னை அதை எடு இதை எடு என்று நன்கு தூண்டுவார்.
பாத்திரங்கள,     ஆடை கழுவும் யந்திரம், மின்சார கேத்தல், சமையலறை பாத்திரங்கள் என்று நாமே சமைக்கும் வசதியுடைய குடித்தன வாடி வீடு மந்திரா.
யார் சமைப்பது!…
ஆக காலையில் இவர் எழுந்ததும் ஒரு கிண்ணம் சுடு நீர் குடிப்பார். அது மட்டும் சுட வைத்தோம்    அதையே ஆற வைத்து போத்தலில் ஊற்றிக் குடித்தோம் பணம் கொடுத்து வாங்காமல்.
நேரத்தோடு படுத்ததால் காலையில் நேரத்தோடு விழித்திட்டோம். எழுந்து தயாராகி அறையைப் பாரம் கொடுத்துப் புறப்பட்டோம்,

img_01141-jpg-can

கன்பரா பயணம் முடிகிறது. டென்மார்க் வீடு வந்து பல விவரங்களை கூகிளில் பார்த்த போது முருகன் கோவிலை எப்படி தவற விட்டோம் என்று குறை இருந்தது.
மிகுதியை அடுத்த பதிவு 12ல் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம்
டென்மார்க்.
11- 2016

ainslie-canberra

 

 

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  டிசம்பர் 02, 2016 @ 15:37:59

  அருமை
  தொடருங்கள் சகோதரியாரே
  தொடர்கிறோம்

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 03, 2016 @ 03:07:09

  // உலகத்திலேயே உனக்குப் பிடித்தமானது எது என்று என்னைக் கேட்டால் என் கணவருடன் ஊருலா போவது என்பேன். //

  ஆஹா…!

  மறுமொழி

 3. Bagawanjee KA
  டிசம்பர் 03, 2016 @ 17:06:30

  கண்கவர் படங்களை நாங்கள் காண உதவும் உங்கள(வ்)வருக்கும் என் நன்றி 🙂

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 16, 2017 @ 13:01:39

  Vetha Langathilakam கன்பரா சென்ரர் பெரிய மால் மாதிரி. அதனுள் யெர்மனிய அல்டியும் இருந்தது பாருங்கள்

  பயணம் செய்தல் போலவே பயண அனுபவம் எழுதுதலும்.
  அனுபவிப்பவருக்கே அதன் அருமை புரியும்.
  Like · Reply · 3 December 2016 at 15:30

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: