12.(அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்).12

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 12

பேருந்துக் கந்தோரில் பயணச் சீட்டு வாங்குமிடம் அருகில் சிட்னிக்குச் செல்லும் பேருந்தும் தயாராகி நின்றதால் காலையுணவு முடிக்க முதலே இவர் அவதிப்பட்டு 8 மணிக்கே போவோம் என்று பயணச் சீட்டை வாங்கி விட்டார். பேருந்து புறப்படப் போகிறது.

jolimont-centre

தேநீர் பேருந்தில் குடிக்க முடியாது. மேசையில் வைத்திட்டு வாகனம் ஏறியது தான். பாண் முதலே வாங்கியதால் உறையுள் இருந்தது. என்னிடம் எப்போதும் தண்ணீர் இருக்கும். சரி என்று புறப்பட்டாச்சு.
இரவு 9 மணிக்:குப் போவது என்று கூறி விட்டு இப்போது காலையில் பேருந்தைப் பார்த்ததும் இது என்ன காலைத் தேநீர் கூடக் குடிக்காமல்! என்று கோபமாக இருந்தது. அவர் இனிப்பு இன்றித் தேநீரை அப்படியே குடிப்பார்…குடித்திட்டார். எனக்கு முடியாது. பால் இனிப்பு எல்லாம் தேவை. அது தான் வாங்கிய தேநீரையும் அப்படியே வைத்திட்டு வாகனத்தில் ஏறியாச்சு...

cidny
சிட்னி பயணத்திலும் பேருந்தில் அதே முதல் வரிசை இடம், படம் பிடிக்க வசதியாக…”கிறே கவுண்ட்” எனும் பேருந்தில் வந்தோம். இப்போது ” முறாறி சாட்டர் கோச்” என்பதில் பயணமாகிறோம்.
பிறகென்ன!… நடுவில், கொண்டு வந்த பாண் சாப்பிட்டுத் தண்ணீரைக் குடித்தது தான்.
கன்பரா சிட்னிப் பாதை புல் வெளிகள் தான் ஆனாலும் கற்பாறைகளை வெட்டிய பாதைகளாக சில இடங்களில் இருந்தது.

img_01281

img_01341

img_01311

தெருவில் கறுப்புத் தார் இன்றி வெள்ளை நிறமாக சீமெந்து போல பூசி இருந்தது

1-48

ஆச்சரியமான ஆச்சரியம்!!… ஏன்!…..ஏன் ! என்று தலையுள் குடைந்தது. புரியவில்லை. இருவருமே இது பற்றிப் பேசிய படி பயணித்தோம்.
பின்னர் உறவினர் ஒருவர் வீடு போன போது மாப்பிள்ளை சொன்னார் ” உங்கள் கேள்வியை இங்கு கேளுங்கள் இவர் சரியான ஆள் என்று” தெரு வேலை சம்பந்தமான துறையில் பரிச்சயமானவர் நமட்டுச் சிரிப்புடன் சொன்ன தகவல் வெள்ளை பூச்சுப் பூசினால் 20 வருடங்களுக்கும் மேலாக பாதையைப் பாதுகாக்கத் தேவையில்லையாம், மற்றது அங்கு பனி பெய்வது மலைப் பகுதியில் தானாம். இங்கு டென்மார்க்கில் தானே பனி வந்து பாதைகளை அரித்து நாசமாக்கும் செலவும் அதிகரிக்கும்.

சிட்னி விமான நிலையத்திலும் நாம் பயணமான பேருந்து நின்றது ஆட்களை ஏற்ற. (சிட்னியில் முதலாவதாக விமான நிலையம் பார்த்தோம்)

img_01521

img_01471

img_01531
11.30க்கு சிட்னி புகையிரத நிலையத்தின் அருகில், எடி அவென்யூவில் இறங்கினோம். (எடி அவென்யூ முன்பக்கக் காட்சி. மற்றது பின் பக்கக் காட்சி))

img_01621

img_01721

img_01701

பேருந்துக் கந்தோருள் சென்று அடுத்து சிட்னியிலிருந்து பிறிஸ்பேர்ண் செல்லும் நிலைமைகளை ஆராய்ந்;தோம்.

img_01731

13 மணித்தியாலம் என்று நாம் போட்ட கணக்கு பேருந்திற்கு 18 மணித்தியாலங்கள் எடுக்கும் என்பது உற்சாகம் தருவதாக இல்லை. அது பற்றிப் பின்பு யோசிக்கலாம் என்று சிற்றியைச் சுற்ற பயணச் சீட்டு வாங்கினோம்.

img_01681

(இது புகையிரத நிலைய மேற்பகுதி)
ஆளுக்கொரு பயணப் பொதி கையிலிருந்தது. அதைப் பாதுகாத்துத் தர அங்கேயே  (டிக்கட் வாங்கிய இடத்திலேயே) இடமுண்டு. பணம் கட்டி ஒப்படைத்தோம். பேருந்தில் ஏறிச் சுற்றினோம்.

”ஸ்கை கார்டின்” ஆகாயப் பூந்தோட்டம் என உள்ளது.

img_01801

img_01791

இந்தப் படம் போலவும் வேறு மாதிரிகளிலும் உண்டு. கூகிளில் பாருங்கள். (சென்ரல் பாக் அல்லது ஸ்கை கார்டின்  australia  Sydny என்று )  மிக வியப்பாக  இருக்கும்.
பிறாமா றோட் என்று நீண்ட தூரம்

img_01841

கடற்கரை தான் சுற்றிச் சுற்றி தெரு செல்கிறது.

img_01871

img_01891

 

தெருவில் மஞ்சள் நிற கலை வேலைப்பாடு ஒன்று கண்டு படம் எடுத்தேன் மேல் பகுதி பாதி தான் தெரிந்தது.

img_02221

 

டென்மார்க் வந்து ஆராய்ந்து   முழுப்படமும்   எடுத்தேன்.  மஞ்சள் நிறத்தில் கலை உருவ வேலைப்பாட்டு நாளுக்குத் தெருவில் வைக்க செய்ததாம். மிக அழகு.

darling-harbour-yellow

Google photo

மிகுதியை அடுத்த பதிவு 13ல் காணுவோம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
12-12 2016.

 

kangaroosunset2-gif-oo

 

 

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  டிசம்பர் 13, 2016 @ 02:52:32

  அருமை
  தொடருங்கள் தொடர்கிறேன்

  மறுமொழி

 2. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  டிசம்பர் 14, 2016 @ 01:19:39

  அருமையான புகைப்படங்கள். வித்தியாசமான வண்ணத்தில் சாலை. ஆச்சர்யாக உள்ளது.

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 10:21:26

  Jeya Anand :- அருமை ,தொடருங்கள் .
  Like · Reply · 14 December 2016 at 17:30

  Vetha Langathilakam:- Nanry jeya.. Mkilchchy..
  Like · Reply · 14 December 2016 at 18:20

  Subajini Sriranjan :- அருமையான பயணம்
  Unlike · Reply · 1 · 14 December 2016 at 18:45

  தேன்மதுரத்தமிழ் கிரேஸ் :- அழகான படங்களுடன் பயணப்பதிவு அருமை சகோதரி
  Unlike · Reply · 1 · 14 December 2016 at 19:22

  Vetha Langathilakam:- ஆழ்ந்த அன்புடன் நன்றி கிறேஸ்.
  Like · Reply · 14 December 2016 at 21:04

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 10:23:14

  Geetharani Paramanathan :- நீங்களே நீங்கள் தான் நேரடியாய் படமெடுக்கமுடியாததை Googulபடமெடுத்து தந்திருக்கிறீர்களே உங்கள் தேடலை என்ன சொல்ல
  Like · Reply · 14 December 2016 at 21:13 · Edited

  Vetha Langathilakam :- கீத்தா.. இதை விட உள்ளே போய் இன்னும் படங்கள் பார்த்து வாசிப்பது மிக இனிமை நன்கு பிடிக்குமடா…. மிக்க நன்றியும் பெரன்பும் உரித்தாகுக.
  Like · Reply · 14 December 2016 at 21:20

  Rathy Mohan :- நல்லதோர் பயணம்..
  Unlike · Reply · 1 · 14 December 2016 at 21:38

  Vetha Langathilakam:- Rathy மிக்க நன்றியும் பெரன்பும் உரித்தாகுக.
  Like · Reply · 14 December 2016 at 23:40

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 10:49:19

  Raji Krish :- Super arumaiyana place ma vetha..👍👍
  Unlike · Reply · 1 · 15 December 2016 at 11:15

  Raji Krish:- நான் ஆஸ்திரேலியா பெர்த்தில் இருக்கிறேன்..
  Unlike · Reply · 1 · 15 December 2016 at 11:16

  Vetha Langathilakam :- ஓ!..Raji…. மறு பக்கம்!
  மிக தூரம் என்பதால் விட்டு விட்டோம்.
  மெல்பேர்ணிலிருந்து கோலட் கோஸ்ட் பிறிஸ்பேர்ண் வரை சென்றோம்
  மிகப் பிடித்தது.
  மிக்க நன்றியும் ஆழமான அன்பும் உரித்தாகுக.

  Raji Krish:- ஆஸ்திரேலியா பக்கத்தில் இருக்கும் ஊர்கள் எல்லாமே ஏறக்குறைய ஒரே மாதிரியாக தான் இருக்கிறது..
  Unlike · Reply · 1 · 15 December 2016 at 12:04 · Edited

  Ramesh Manivasagam :- அழகான பதிவு அருமையம்மா
  Like · Reply · 19 December 2016 at 02:39

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: