13.(அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (13)

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 13

img_01591-jpg-pp

சிட்னி சென்டர் பாயிண்ட் கோபுரம்  1981இல்  ஆயிரம் அடி உயரத்தில் தகவல் தொடர்புக்கு எனக் கட்டப்பட்டது. 279 மீட்டர் உயரமானது. சிட்னியின் மிக உயரமான கட்டடம் இது. டெலிவிசன் ரவர்,  சிட்னி ரவர் ஐ (eye)  என்றும் பலரால் அறியப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் பத்து லட்சம் பயணியர் வந்து செல்கின்றனர். கோபுரத்தின் எட்டாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடித் தளத்திலிருந்து சிட்னி நகரின் அழகைக் கண்டு மகிழலாமாம். முதலிரு படத்திலும் தூரத்தில் காணும் சிட்னி கோபுரம்   கிட்டவாக 3வது படத்தில்

img_02111

img_03031
நகர் வலத்தில் ஓவ்வொரு வானுயர் கட்டடம் பார்த்ததும் திறந்த இரட்டைத் தட்டு பேருந்து மேற்பகுதியில் இருந்தவர்கள் அனைவரும் கட்டிடத்தையே கையுள் எடுப்பது போல பாயாத குறையாக படங்களை எடுத்துத் தள்ளினோம். ஆவல் !.ஆவலாக
அடுத்து முறே ஆறும் டார்லிங் நதியும் கலக்கும் பேசின் தான் டார்லிங் காபர். ஷம்மி சொன்னா தான் அதற்குக் கிட்டவே வேலை செய்வதாக. லோங் கோவ், குக்கில் பே என்று இருந்தது  1826வரை. தேசாதிபதி றல்ப் டார்லிங் வந்து டார்லிங் காபர் என்று பெயர் மாற்றினாராம்.
இது டார்லிங் காபர் பின்புறம். ( கூரை வளைவைக் கவனியுங்கள். பின்பும் காணுவீர்கள்)

img_02071

img_02171

தெரு வளைந்து வளைந்து அங்கேயே சுற்றியது...

img_02201

காமன்வெல்த் வங்கி இடம் காண்கிறீர்கள்

தீப்பெட்டி உருவமாகத் தெரியும் வீடுகள் காபர் கூரை வளைவு முன்புறம்

img_02231.

img_02301
மாலை 16.30 க்கே என் தங்கை மகளின் கணவருக்கு வேலை முடியும். அதன் பின்பே எங்களைக் கூட்டிப் போக வருவதாகக் பேசியிருந்தோம். அதற்கிடையில் பேருந்தில் நாம் சுற்றும் போது டார்லிங் காபர் தாண்டியதும்

அங்கேயே சுற்றிச் சுளரும் வளைவுப் பாதை பிரபல சிட்னிப் பாலம் காண்கிறீர்கள் 

img_02491

பாலத்தின் கீழே

img_02631

ஒபேரா அரங்கம் வரும் போது

img_02641

அருகில் நஷனல் பார்க். (தேசிய பூங்கா)

img_02731

இங்கு  (opara) இறங்குவோம் என்று இறங்கிச் சுற்றிப் பார்த்து படங்கள் எடுத்தோம். இது என் கணவர் ஆர்வமாகக் கூறி இறங்கிய இடம். முன்பு படங்களில் ஒப்பரா பார்க்கும் போது இதைப் பார்ப்போமா என்று எண்ணியது உண்டு. இன்று ஆசை தீர நடமாடினோம்.

சிட்னி துறைமுகம்,   வளைவுப் பாலம்,    ஓப்பரா மண்டபம் அனைத்தும் இணைந்த   இடம்.

img_03521

img_03531

Right side  opera

img_03611

img_03451

img_03671

img_03681

img_03731

img_03771
இப்போது ஓப்பரா மண்டபம், மாளிகை அல்லது ஒப்பரா அரங்கம் பற்றி சிறிது பார்ப்போம்.
ஜாக்சன் துறைமுகம் எனும் 82 வயது சிட்னி துறைமுகத்தில் பென்னிலோங் என்ற முனையில் இது அமைந்துள்ளது.   google photo

royalbotanicgardens3

img_03691
20ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட தனித்துவமான கட்டிடங்களில் ஒன்று. யோன் அட்சன் என்ற டென்மார்க் கட்டிடக் கலைஞர் 1957ல் வரை படம் கீறி 1959ல் அடிக்கல் நாட்டி கட்ட ஆரம்பித்த ஓப்பரா அரங்கம் 1973-10-20ல் ராணி எலிசபெத் திறந்து வைத்தார். கட்டடம் கட்டத் தேவைப்பட்ட நிதியைக் குலுக்கல் முறையில் பொதுமக்களிடமிருந்து பெற்றனர். ஆண்டுக்கு இருபது இலட்சம் பார்வையாளர்கள் வந்து செல்லும் சுற்றுலாத் தலம் இது. ஆண்டுக்கு 3000 கச்சேரிகள் நடக்கின்றதாம். ஆண்டுக்கு 7 மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனராம்.  அவுஸ்திரேலியாவின் பிரபல அடையளமாக இது விளங்குகிறது.
இது ஒரு தொடர் கொங்கிறீட் குண்டு வடிவத்தில் அமைந்துள்ளதாம். 2194 கொங்கிறீட் தூண்கள், 10 இலட்சம் ஓடுகள் கூரைமேல் தாமரை மாதிரி மலர்ந்த கோலம் அல்லது சிப்பிகளால் செய்த உருவமாக உள்ளது. 2 மில்லியன் ரசிகர்களின் இசை உறைவிடமாக இருக்கிறதாம். இது ஒரு விவரணச் சிறு தொகுப்பு.

Monday ,10 Jun 2013

ஜோர்ன் உட்சன் (Jørn Utzon, ஏப்ரல் 10, 1918 – நவம்பர் 29, 2008)  ஒரு கட்டிடக்கலைஞர் ஆவார். இவர் டென்மார்க்கிலுள்ள கோப்பன்ஹேகனில் பிறந்தார். இவரது தந்தையார் ஒரு கப்பற் பொறியியலாளராவார். 1957 ஆம் ஆண்டில்  ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் சிட்னி ஒப்பேரா மாளிகையை வடிவமைப்பதற்கான போட்டியில் முதற்பரிசு பெற்றார்.

(ஓப்பராவுக்கும்   பாலத்திற்கும்   இடைப்பட்ட   துறைமுக  குடா அனைத்தும் இறுதிப்  படத்தில் காண்கிறீர்கள்.)
அடுத்த பதிவு 14ல் மிகுதியை அறிவோம்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11- 2016

 

cropped-sydneyharbourbridgepd

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  டிசம்பர் 23, 2016 @ 14:32:31

  அருமை
  அருமை
  தங்களால் நாங்களும் கண்டு களித்து வருகிறோம்
  தொடருங்கள்

  மறுமொழி

 2. Alvit
  ஜன 03, 2017 @ 13:44:39

  அருமையான படங்களுடன் விளக்கங்களை இணைத்து உங்களது பயணத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சகோதரி. Sidney Opera வின் அமைப்பு மிக வித்தியாசமான அழகானதொன்று. படங்களில் (Movies) பார்த்து வியந்திருக்கிறேன்.

  மறுமொழி

  • கோவை கவி
   ஜன 03, 2017 @ 14:26:09

   ஆம் நான் படம் எடுத்த கோணங்களும் வித்தியாசம்.
   உண்மையில் மிக அழகே…
   கருத்திடலிற்கு மிக மகிழ்வும் நன்றியும் அல்விற்..

   மறுமொழி

 3. maathevi
  ஜன 04, 2017 @ 03:54:27

  அருமையான இடங்கள் .

  மறுமொழி

 4. கீதமஞ்சரி
  ஜன 06, 2017 @ 07:38:38

  சிட்னி நகரின் பிரதான தளங்களையும் கட்டடங்களையும் மிக அழகாக வர்ணித்து எழுதியுள்ளீர்கள்… படங்களின் இணைப்பும் கூடுதல் அழகு.. ஆஸ்திரேலியாவின் அடையாளச் சின்னமான ஓப்பரா மாளிகையை தங்கள் கணவர் பார்க்கப் பேராவல் கொண்டிருந்த்தில் வியப்பென்ன? நெடுநாட்களுக்குப் பிறகு வலைப்பக்கம் வருகிறேன். மற்றப் பகுதிகளையும் விரைவில் வாசிப்பேன்.

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: