461. சூழ்ச்சி

Profile of head with jigsaw pieces missing
***
(அந்தராயம் – தீமை, துன்பம், இடையூறு.
நிந்திதம் – பரிகாசம், ஏளனம், தடை.
நிந்தனை – இகழ்ச்சி. சிலவங்கம் – மீன்முள்ளு.
இலகம் – ஊமத்தை. )
***
அந்தராயம் நிறை மனதின் கேடயம்
தந்திரம், வஞ்சகம், சதியாம் இரண்டகம்.
சுந்தரமல்ல மனிதநேயத்திற்கு ஒரு சுத்தியலாம்.
நிந்திதம் நிந்தனை தாழ்ச்சியே பலனாம்.
***
உலக வட்டத்தின் சாப அத்தியாயம்
கலகச் சரித்திரம் கருப்பாக்கும் சாயம்.
இலகம் போன்ற வேண்டாத குணம்.
சுலபமல்ல மோதும் சூழ்ச்சியின் வேகம்.
***
சூழ்நிலைக் களத்தில் மீன் பிடிக்கும்
கீழ் நிலைப் பாதகம் தலைகோதாது.
ஆழ் கீறலால் மனம் அந்தரிக்கும்
மூழ்கும் வேகம் இருண்ட காடாகும்.
***
நிலவின் குளிரல்ல துரதிட்டம், வெப்பம்
குலவும் நம்பிக்கைத் துரோக வலயம்
சிலந்தி வலையே சூழ்ச்சி அத்தியாயம்.
சிலவங்கமே சூழ்ச்சியாளர் உள்ளிருக்கும் ஊழ்வினையாவார்.
***
தாழ்வுமனப்பான்மை, கவலையால் மீள்வு கொள்ள
தாழ்ந்த மனதால் புன்னகை மறுத்து
கீழிழுத்து அன்பு மொட்டுகளைக் கொய்து
வாழ்வை ஒழிக்கும் பயங்கரம் சூழ்ச்சி.
***
ஆழ்மனப் பயப் பேரலைகளின் திமிறுதல்கள்
கீழ் விழாதெழும் இரண மன
கீழ் மக்களின் கூர் நக வேலைப்பாடுகள்
வாழ்தலின் முயல்வுகள் இரண்டகமான சூழ்ச்சியாம்.
***
Vetha Langathilakam Denmark 2o-12-2016
சூழ்ச்சி – வல்லமை (vallamai.com)

வேறு:-

சூழ்ச்சி

சூதுடைய சூழ்ச்சி சூறாவளிச் சூளை
சூனியமோ சூத்திரமோ சூரமாய்ச் சூலாகும்
சூரியகிரகணமாய்ச் சூறையாடும் சூக்குமமே சூழ்ச்சி
சூடடங்காத சூட்டுக் கோலே அது

2016

big-blue-divider

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  டிசம்பர் 26, 2016 @ 18:52:43

  சிந்திக்க வைக்கும் வரிகள் !

  மறுமொழி

 2. கரந்தை ஜெயக்குமார்
  டிசம்பர் 27, 2016 @ 01:53:06

  சிந்தனைக்குரிய சீர் மிகு வரிகள் சகோதரியாரே

  மறுமொழி

 3. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 27, 2016 @ 03:05:08

  அருமை…

  மறுமொழி

 4. Nagendra Bharathi
  டிசம்பர் 27, 2016 @ 08:31:51

  அருமை

  மறுமொழி

 5. கோவை கவி
  ஜன 08, 2017 @ 12:22:09

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 12:09:45

  Vetha Langathilakam :- தமிழ்நாடு நிலையால் வந்த கொப்புளங்கள் இது…..
  Like · Reply · 22 December 2016 at 12:43 · Edited

  Subajini Sriranjan :- பல கருப்பொருள் நிறைந்த கவியாக்கம்
  மிக அருமை
  Unlike · Reply · 1 · 22 December 2016 at 14:49

  Vetha Langathilakam:- Mikka nanry sis..
  Like · Reply · 26 December 2016 at 13:52

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: