78. ஒரு தாகம். (மரம் பற்றியும்)

இதில் முதல் பத்துப் பாடல்கள் எனது 6வது நூல்
மனக்கடல் வலம்புரிகள் – ல் பிரசுரமானது மீன் தொட்டி — வரை (கீழிருந்து பாருங்கள்)

p46h

ஒரு  தாகம்.

***

கலக்கும் உயிர் வேதனை
விலங்குகள் மனிதனின் இயல்பூக்கம்
மோகம், நீர் வேட்கை, ஆசை,
ஏக்கம், ஆர்வம், தவிப்பு
ஏதிர்பார்ப்பென ஊர்ந்து
பாடாய் படுத்துகிறது தாகங்கள்.
***
சுதந்திரதாகம் அரசியல் சூழ்ச்சியுள் சுழலுகிறது.
சுழலும் கவிதாகம் விரிகிறது.
கலை காதல் தாகம்  பாகமாய்
அலைக்கழித்து நாகமாய் மனிதன்
அலைகிறான். காகமாய் தேடித் தேடி
மோகம் அடங்காத தாகத்தில்
ஏகமாய் தேகம் குலைக்கிறான்.
***
சுயதேவைக்கு மரங்கள் அழிப்பு
தூயநீருக்கு மகா பரிதவிப்பு
பஞ்சபூத ஆதாரம் மரம்
காற்று சுத்திகரிக்கும் அரும்பணி
குளிர்காற்று பெறும் தடை
ஆகாயத் தூய்மை அழிவு மண்ணரிப்புத் தடைகள்
மரமழிப்பால் நடைபெறும் தாகங்கள்.
***
ஓசோன் படலம் செப்பனிடும் மரம்
மழைக்குக் காரணியாகிறது.
பூமி மேற்பரப்பின் காற்றின்
வெப்ப வேகத்தைத் தடுக்கும்
மரம் காத்தல் அவசியம்.
மனிதனே மறந்தான் மனிதனே கெடுத்தான்.
நீருக்கான தாகமும் உயர்கிறது.
***
Image may contain: one or more people
***
.
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 11-7-2016.
(Samme katu…..)
 *
blue-border-603769

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  டிசம்பர் 27, 2016 @ 13:20:02

  அருமை
  மனிதன் தாழ் வாழ காடுகளை மரங்களை அழித்து அழித்து
  முடிவில் தன்னையே………….

  மறுமொழி

 2. முனைவர் பா.ஜம்புலிங்கம்
  டிசம்பர் 27, 2016 @ 13:32:22

  தீர்த்த முடியாத தாகங்கள்.

  மறுமொழி

 3. Bagawanjee KA
  டிசம்பர் 27, 2016 @ 14:14:55

  #மனிதனே மறந்தான் மனிதனே கெடுத்தான்.#
  அதுக்கு பலன்தான் சுனாமி ,புயல், வெள்ளம் என்று கிடைக்கிறதே !

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 14:08:23

  Mugan Mugan :- அருமை…

  பஞ்சபூதங்களின்
  ஆதாரம் சுருங்க
  மனிதன் வாழ்வும் சுருங்கும்….

  கொடூர முகம்
  காட்டும் சூரியனின்
  கோபம் தடுப்பது
  ஓசோன்…..
  ஜன்னல் கம்பி
  வைத்து அதனுள்
  எட்டிப் பார்க்கிறான்
  மனிதன் ……

  அழிப்பின் உச்சத்தில்
  மரம்
  அம்மணமாய் போகிறது
  நிலம்…
  ஆசை வார்த்தைகள்
  பேசுகிற பணம்
  கொடுக்கமா தூய
  சுவாசம்…!

  மனிதனின்
  அழிவு மனிதனால்!
  காக்கும் பிரணவவாயுக்கள்
  களவு போகின்றன
  இயற்கை அழிப்பினால்…!

  ……………………அருமை…..வணக்கம்
  Unlike · Reply · 11-7-2016

  Vetha Langathilakam :- Mugan Mugan இது தான் ஓரளவு எனது பாணி-
  நன்றி கருத்திற்கு….
  Unlike · Reply · 1 · 12 July 2016 at 12:50
  Kalaivani Mohan : — Vaazthukkal
  Unlike · Reply · 11-7-16

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 14:11:17

  RRsel Vam :- அருமை வாழ்த்துக்கள்
  11-7-16
  Vetha Langathilakam:- Mikka nanry
  12 July 2016 at 14:16
  Dharma Ktm :- அருமை அக்கா
  1 · 12 July 2016 at 13:30
  Vetha Langathilakam மிக்க நன்றி உறவே மகிழ்ச்சி கருத்திடலிற்கு.
  12 July 2016 at 14:17
  Ratha Mariyaratnam :- அருமை சகோதரி
  · 1 · 12 July 2016 at 14:15
  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே மகிழ்ச்சி கருத்திடலிற்கு.
  1 · 12 July 2016 at 14:17

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 14:17:11

  சி வா :- அருமை வேதாம்மா..
  12 July 2016 at 15:59
  Kavi Nila:- நல் வாழ்த்துக்கள்
  Vetha Langathilakam மிக்க நன்றி உறவே மகிழ்ச்சி கருத்திடலிற்கு.
  Like · Reply · 12 July 2016 at 16:01
  Subajini Sriranjan :- அருமையான பா
  12 July 2016 at 19:10
  Sarvi Kathirithambi :- கவி சொல்லும் பெண்ணுக்கு வாழ்த்துக்கல் !
  1 · 12 July 2016 at 20:05
  Vetha Langathilakam :- மிக்க நன்றி உறவே மகிழ்ச்சி கருத்திடலிற்கு.
  18-3-17

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: