462. காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.

15740962_1277587198988798_3870404592181174211_n

காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும்.

***

எது எது எங்கிருக்க வேண்டுமோ
அது அது அங்கிருப்பது சிறப்பு.
துளசிச் செடிக்கு வீட்டு மாடமானால்
வளர்வதில் பயன் பாழே காட்டிலானால்.

***

தீயோர் நட்பைத் தீயெனக் கண்டு
தீண்டாது விலகித் தீயெனத் தாண்டு.
தீரமான அறிவாளரைத் தீராந்தியாகக் கொண்டு
தீவினையற்றோரை தினம் மகிழ்ந்து தீண்டு.

***

சின்னத்தன மனிதர் நட்பில் சிரிப்புத்
தேன் ஊற்றி தேள்கள் போடுவார்
குன்றென உயராதவர் குறுஞ் சுவராவார்
அன்னவரும் காட்டு வாழை மனிதர்களே.

***

நதியினையணையும் கூழாங் கல்லாக அன்பை
சதிபதியாகக் கொண்டு மனிதநேயம் போர்த்திய
மதியுடையோரைத் தேடி நல்ல உறவுக்காய்
துதிக்கிறேன் மனதில் துன்பமற்ற வாழ்வுக்காய்.

***

ஈர முகிலின் குளிர் தூவானமாய்
பாரமற்ற நேச மனவுறவு இணையும்
சாரமுடை வாழ்வின் துணையை நாடும்
நேரம் என்றும் இணைவது அதிட்டம்.

***

உறவின் மகத்துவம் புரியாது கையிணைக்கும்
உறவால் உறவு வண்ணங்கள் மங்கலாகும்.
இறக்கை ஒடுங்கி நிலைமை சிறையாகும்.
இறப்பற்ற நேசம் நீவுதலே இன்பம்.

***

பூச்சொரியும் மனம் கருகாது மதுரசமாய்
பூந்துளிர்கள் சிந்த பூரிக்கும் மனமுடையோரை
பூணாரமாய் (அணிகலனாய்) நட்பு செய் நன்மையுறும்.
பூதல வாழ்வும் மேன்மையுற்று மகிழ்வாய்

***

உயர்வு தாழ்வு நன்மை தீமையுண்டு
அயர்வின்றித் திருத்தமாய் அளந்து பார்!
வியர்வை சிந்த உழைத்து உறவாடு!
துயரற்ற வீட்டு வாழ்வு சிறக்கும்!.

***

16161859-vector-set-of-3

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  டிசம்பர் 30, 2016 @ 12:25:22

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  டிசம்பர் 30, 2016 @ 12:31:25

  அருமை சகோதரி…

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 14:31:21

  Geetharani Paramanathan :- வாழ்த்துக்கள் சோதரி
  · 29 December 2016 at 20:35
  Vetha Langathilakam :- கீத்தா!….ஆழ்ந்த அன்புடைய நன்றிகள்.
  30 December 2016 at 13:15

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 14:33:58

  Syed Mohamed:– வாழ்த்துக்கள் அக்கா
  30-12-16
  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன் இனிய நன்றி சகோதரா.30-12-16
  · 30 December 2016 at 13:19
  Rathy Mohan:- வாழ்த்துக்கள்🌺🌺
  · 30 December 2016 at 14:08
  Vetha Langathilakam :- அன்புடைய நன்றிகள்.
  · 30 December 2016 at 23:21

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 14:40:19

  Shanthini Balasundaram :- மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் சகோதரி
  · 31 December 2016 at 02:40
  Vetha Langathilakam தங்களின் வருகை கருத்திடல் மிக ஆனந்தம்.
  அன்பான நன்றிகள். 18-3-17
  Jeyam Thangarajah :- தீயோர்,மாயோர் ,பேயோர்,வாயாற்…சரியா நெறியாய் அறியா தூய பேயர் இடையில் . மறைக்கா ,மறவா உறவைப் பேணும் ,மனத்தின் குணத்தை பிணமாக்கும் ,இன்னமும் வீணானவரின் ,பஞ்சம் எஞ்சும்,வஞ்சம் கொஞ்சும் நெஞ்சும் ,ஊண்டி ஊட்டி, தீண்டி தாண்டிய வாழ்வில்,கட்டியதைஅவிழ்த்து காட்டிய தவிப்பில்,நிம்மதியின் சந்நிதி தள்ளாடிக் கொண்டதுவோ…
  30 December 2016 at 15:21

  Vetha Langathilakam:- Poddy kavithai.. அன்புடைய நன்றிகள்..
  · 30 December 2016 at 23:22

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 14:41:47

  Subajini Sriranjan:- வாழ்த்துக்கள் வேதாம்மா
  · 30 December 2016 at 23:30

  Vetha Langathilakam :- அன்புடைய நன்றிகள்..

  Ratha Mariyaratnam :- வாழ்த்துக்கள் சகோதரி
  · 31 December 2016 at 00:21

  Vetha Langathilakam :- தங்களின் வருகை கருத்திடல் மிக ஆனந்தம்.
  அன்பான நன்றிகள். 18-3-17

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: