463. Farewell 2016

fireworks-1

FAREWELL   2016

யாருக்குத் திருமணம்! பிரியாவிடைக் கோலமோ!
மரகதம், இரத்தினம், முத்து, கோமேதகம்
வைரம்,வெள்ளி தங்கக் கலவையாய்
கருநீல வானில் கண்களில் தூவி
இந்திர ஜாலம் காட்டும் இரவு
இரண்டாயிரத்துப் பதினாறு இறுதி இரவு.
***
கீழ் மூலையில் செவ் வைரம்
மேல் மூலையில் பச்சை மரகதம்
தலைக்கு மேல தங்கத் தூள்
வலையான முத்துகள் அழகான கலவை
மலைத்திட ஒரு மாலை செய்தால்
கலை பொங்கும் 2017 கனிந்திடுமே!
***
Vetha Langathilakam Denmark 20.56pm———31-12-2016
happy-new-year-2017-purple-background_23-2147530221
2017
பண்டிகை நாட்கள் அனைவருக்கும்
இண்டிடுக்கு சந்துகளிலும் இன்பம்
கொண்டிருத்தல் ஆறுதல் ஆரோக்கியம்.
உண்டி உடையுடன் மகிழ்வும்
ஒண்டியற்ற உல்லாச அனுபமும்
கண்டிடல் தென்றலெனும் கொடுப்பனவு.
வண்டினமாய் ரீங்காரித்து நந்தவனத்தில்
சண்டித்தனமின்றித் தேனருந்தி மயங்கி
மண்டியிடாது நிமிர்ந்து முரண்களை
முண்டியடித்துத் தள்ளி வெற்றித்
தண்டிகையில் வாழ்வு பயணித்து
துண்டில் தோப்பாக இசைக்கட்டும்.

நொண்டிச் சாக்கு போக்கின்றி
வண்டில் வண்டிலாகப் பரிசின்றியும்
வெண்டிரை (கடல்) அலையான மகிழ்வுடன்
பண்டிகை களை கட்டியது.
அண்டியோருடனும் மகிழ்ந்து கூடி
கண்டிருப்போம் புதிய ஆண்டினை.

* துண்டில் – மூங்கில்

Vetha.Langathilakam  Denmark  31-12-2016
885940_415392761946867_6721516744376096952_o-a
Advertisements

9 பின்னூட்டங்கள் (+add yours?)

  1. திண்டுக்கல் தனபாலன்
    ஜன 01, 2017 @ 01:39:41

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்…

    மறுமொழி

  2. maathevi
    ஜன 01, 2017 @ 09:24:52

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    மறுமொழி

  3. கரந்தை ஜெயக்குமார்
    ஜன 01, 2017 @ 14:44:27

    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    மறுமொழி

  4. கோவை கவி
    மார்ச் 18, 2017 @ 14:53:41

    Baskaran Kathiravelu :- Happy new year Vetha
    · 31 December 2016 at 21:03

    Vetha Langathilakam :- Thankyou samme to you all
    · 31 December 2016 at 22:06

    Subajini Sriranjan :- மிக அருமை

    மறுமொழி

  5. கோவை கவி
    மார்ச் 18, 2017 @ 14:54:45

    Sujatha Anton:- கவித்துவம் அருமை. புதுமைகலந்த வரிகள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!!!
    · 1 January at 02:07

    சிறீ சிறீஸ்கந்தராஜா :- இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
    · 1 January at 06:18

    Vasantha VJ :- இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: