464. இருமனம் இணையும் திருமணம்

15672708_1774122532852790_2778487589712256184_n

இருமனம்   இணையும்    திருமணம்

இருமனம்   இணையும்    திருமணம்
பெரும் புனிதம்
அரும் உறவதன் பெருமை
அருகி வருகிறது.
அருவருப்புடை அடக்கு முறை
பெருந் தொல்லையாகிறது.

***

திருமணம் என்றால் விலகுவோரும்
இருமனம் இணையாமலதன்
உருவிழத்தலுமின்று வெகு சாதாரணம்.
உருகுதலென்பது அன்பிலில்லை..
உருவும் உரிமைகளால் தொலைகிறது
எருவெனும் காதல்.

***

எருக்கம் பூவாகிறது பிரியம்.
ஒருமைப் பாடழிகிறது.
ஒரு மனப்படும் வசந்தமே
ஒருங்கிணையும் வாழ்வாகும்.
திருமண வாழ்வின் கருமுகில்
கருவம், சுயநலம்.

***

கரும்பாம் மன்னிக்கும் மனம்
கருணைச் சாரலாகும்.
இரும்பு மனம் இளகுதல்
திருமணத்தின் சாதகம்
கருங்கலமான உறவு மிகக்
கருத்தாய் காத்திடணும்.

***

அருமைச் சுகாதாரம் திருமணம்.
கருமணியாய்க் காக்கலாம்.
குரு சந்திர யோகம்
இருமனமிணையும் திருமணம்.
குருகுல வாசமாயும் காக்கலாம்
குழந்தைகள் வாழ்வுக்காக.

***

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 23-12-2016

 

garlandswag-gif-2

 

 

4 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  ஜன 08, 2017 @ 14:44:30

  அருமை சகோதரியாரே

  மறுமொழி

 2. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 15:59:49

  Vetha Langathilakam :- அருமைச் சுகாதாரம் திருமணம்.
  கருமணியாய்க் காக்கலாம்.
  குரு சந்திர யோகம்
  இருமனமிணையும் திருமணம்.
  குருகுல வாசமாயும் காக்கலாம்
  குழந்தைகள் வாழ்வுக்காக.
  · 24 December 2016 at 15:43
  கவிப் பிரியன் :- வாழ்த்துக்கள் உறவே
  · 24 December at 12:14

  Iqbal Hameed :- மனமார்ந்த இனிய
  நல்வாழ்த்துக்கள் கவிதாயினி!
  · 24 December at 12:29- 2016

  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன் இனிய நன்றி உறவே.கவிப் பிரியன்- Iqbal Hameed
  · 26 December 2016 at 16:30

  Abdul Hameed :- வாழ்த்துக்கள்
  · 24 December at 15:25

  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன் இனிய நன்றி உறவே.
  · 26 December 2016 at 16:31

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 16:03:03

  Sulthan Faizar :- ம‌ன‌ம் ம‌கிழ‌ வாழ்த்துகிறேன்
  · 24 December at 16:22

  Vetha Langathilakam:- ஆழ்ந்த அன்புடன் இனிய நன்றி உறவே.
  26 December 2016 at 16:32

  Geetharani Paramanathan :- vaallthukkal
  Unlike · Reply · 1 · 26 December 2016 at 20:43

  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன் இனிய நன்றி Geetha….
  · 26 December 2016 at 20:51

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: