9. கண்ணதாசன் சான்றிதழ்.10

13781714_1754848521446589_7399165200020175937_n

10th…

கருகிய மலர் சிரிக்கிறது


கருமை நிறத்திலும் கண்டவரை ஈர்க்கும்
கஞ்சமில்லா அழகுப் புன்னகை கண்ணிறைக்கும்.
கவனம் இழுக்கும் வண்டு விழியழகி.
கந்தோரில் அனைவரையும் கம்பீர அறிவொளியால்
கவரும் தலைவியவள், துணை அதிகாரி.

கடமைப் பதவியுயர்வு நேர்முகத் தேர்வு
கணவனிடம் கையசைத்து விடை பெற்றாள்.
தலைநகர் நோக்கிய மகிழுந்துப் பயணம்.
தடவும் எண்ணக் குமிழிகள்! எதிர்காலம்
தரப்போகும் பதவியின் கற்பனையில் நீந்தினாள்.

மூன்று மணித்தியாலச் சாரத்தியம். ஒளிந்து
முகிலுக்குள் அசையும் நிலவாக இசைச்சாரல்
முழுதாய் இதயம் தழுவி நனைத்தது.
கோடை வெப்பக் கானல்நீர் தெருவில்.
கோடையிடியானவொரு சத்தம்! வாகனம் புரண்டது!

நெருப்புக் காட்டில் இவள் நினைவிழந்தாள்.
நெருப்பு மழையில் குளித்தவுடல். விழித்தாள்.
மருத்துவ மனையில் கட்டுகள் மருந்துகளுடன்.
மலர்ந்த பூ முகம் கருகியது.
சிலிர்த்த தகவல் அவள் கர்ப்பிணியாம்.

பந்தாடிய விதி முற்றாக அறுக்காது
சந்தனக் கட்டியைக் கொஞ்சிக் குழைந்திட
விந்தையாக வயிற்றில் வளர்ந்தது. சுபமாக.
தந்தை தாய் மகிழ்ந்து குலாவ
கொழு கொழு பாலன் கொத்தாக உதித்தான்.

பொங்கும் நயகரா இதயத்தில் போல
உங்கு மழைத்துளியுண்ட சிப்பி போல
கங்குப் பாலையிலொரு நீர்ச்சுனை போல
தங்க மகன் வந்தான் தரணியிலே
பொங்கியது உள்ளம் பூரித்து நிறைந்தது.

விதியின் விளையாட்டில் விண்ணப்பம் இன்றி
விளைந்து விரிந்த விகசிப்பு இது.
விசேடமான விருட்ச முளையிவள் மழலை.
விழிச் சிறகுள் அடைகாத்துச் சிரிக்கிறாள்.
விருதிவன்! கருகிய மலர் சிரிக்கிறது.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-7-2016.

 
 
blackwith-colour

8 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜன 10, 2017 @ 12:50:21

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 10, 2017 @ 15:47:06

  ஆகா…!

  மறுமொழி

 3. கரந்தை ஜெயக்குமார்
  ஜன 11, 2017 @ 01:56:10

  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 17, 2017 @ 22:06:06

  Sarvi Kathirithambi மகிழ்வான வாழ்த்துக்கள் !
  Like · Reply · 25 July 2016 at 02:33
  Vetha:- Mika nanry sis.

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 16:15:47

  Malar Amalan:- வாழ்த்துக்கள்
  · 24 July 2016 at 02:26

  முகில் வேந்தன்:- வாழ்த்துகள்
  24 July 2016 at 02:53

  Usharani :- இதயபூர்வமாக வாஞ்சையுடன் வாழ்த்துரைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
  · 24 July 2016 at 03:03

  Rahmathullah Str :- வாழ்த்துகள்
  · 24 July 2016 at 03:44

  D Prem Kumar Durai :- வாழ்த்துகள்
  · 24 July 2016 at 05:10

  Ravi Chandran:- வாழ்த்துக்கள்
  · 24 July 2016 at 05:19

  கவிஞர் ஏ.எச்.என் நௌசாத்:- Wish with photo

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 16:22:42

  A Muthu Vijayan Kalpakkam
  wish with photo
  · 24 July 2016 at 06:10
  விஞர் முகமது அஸ்கர் வாழ்த்துக்கள்
  · 24 July 2016 at 07:31

  Madhi Nelavu :- வாழ்த்துக்கள்
  · 24 July 2016 at 07:39

  Sumathi Shankar :- வாழ்த்துகள் அம்மா
  · 24 July 2016 at 09:28

  Vetha Langathilakam அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  · 31 July 2016 at 22:10

  மறுமொழி

 7. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 16:26:36

  Gajey Pandithurai:- வாழ்த்துகள்
  · 24 July 2016 at 13:48

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  · 31 July 2016 at 22:13

  ரோஷான் ஏ.ஜிப்ரி :- வாழ்த்துகள்
  · 24 July 2016 at 14:15

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  · 31 July 2016 at 22:13

  மறுமொழி

 8. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 16:30:56

  Anbuchelvi Subburaju வாழ்த்துக்கள்
  · 24 July 2016 at 15:13

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  Like · Reply · 1 · 31 July 2016 at 22:13

  Poongavanam Ravendran :– இதயபூர்வமான நல்வாழ்த்துகள்
  Unlike · Reply · 1 · 25 July 2016 at 05:05

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  · 31 July 2016 at 22:11

  Vel Prasad :- வாழத்துகள் கவியே..
  · 1 August 2016 at 00:17

  Vetha Langathilakam :- அன்படன் நன்றியும் மகிழ்வும் உறவே.
  18-3-17

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: