466. பூத்திருக்கும் புத்தாண்டு!

15894271_1372287829479542_810009769602691215_n

பூத்திருக்கும் புத்தாண்டு!

காத்திருந்த போது எதிர்பார்ப்பிற்கு ஏங்க
பூத்திருக்கும் புத்தாண்டே செல்வம் பொங்க
ஏத்திடு அதிட்டக் கொடியைத் தாங்க!
கூத்திடும் குதூகல ஆனந்தம் ஓங்க!
அதர்மம் அநியாயம் அழிய அகிலமுழுதாய்
அன்பில் பூத்திட அத்தியாவசியம் அறிவாய்
அகத்தில் மலர பாதை தருவாய்!
அமலனே அறிவொளி வீச அருள்வாய்.
உடைந்த மனங்களை ஒட்டு இன்பிக்கட்டும்!
கடைந்த பாசம் அனைவரையும் கட்டட்டும்!
அடைந்த சொத்துகளைத் தர்மம் செய்யுங்கள்!
இடைஞ்சல் இல்லா வாழ்வை வகுத்திடுங்கள்!
வஞ்சம் குரோதம் அழித்து உலகம்
கொஞ்சும் கூட்டுறவை நன்மைக்குப் பாவிக்கும்
கஞ்சமில்லா மனம் எல்லோருக்கும் கனியட்டும்!
சஞ்சலமழிக்கட்டும் இப் பூத்திருக்கும் புத்தாண்டு!
5-1-2017 வேதா. இலங்காதிலகம். டென்மார்க்
10737791_771888509544924_1380567544_o
Advertisements

5 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஜன 11, 2017 @ 17:21:16

  தாமதமாய் இருந்தாலும் தரமாக இருக்கிறது வாழ்த்து 🙂

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 12, 2017 @ 02:13:07

  வாழ்த்துகள்…

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 18, 2017 @ 16:40:33

  Sujatha Anton வஞ்சம் குரோதம் அழித்து உலகம்
  கொஞ்சும் கூட்டுறவை நன்மைக்குப் பாவிக்கும்
  கஞ்சமில்லா மனம் எல்லோருக்கும் கனியட்டும்!
  சஞ்சலமழிக்கட்டும் இப் பூத்திருக்கும் புத்தாண்டு!
  முற்றிலும் உண்மை. அருமை.. வாழ்க தமிழ்.!!
  13 January at 15:30

  Vetha Langathilakam:- ஆழ்ந்த அன்புடன் மிக்க நன்றி சுஜாதா..
  மகிழ்ச்சி
  .13 January at 16:42

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

%d bloggers like this: