15- அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் –15.

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 15

16ம் திகதி சிட்னியில் ஷம்மி வீடு போய் ஆறுதலாகப் பேசி உணவருந்தி கபாலி படமும் பார்த்தோம். கபாலி படம் எனக்குப் பிடித்தது.
இவர் என்னிடம் கூறினார் நாம் பிறிஸ்பேர்ண் போவதைக் கைவிடுவோம், 18 மணித்தியாலம் பேருந்தில் ஓடமுடியாது என்று. சரி நானும் அடம் பிடிக்கவில்லை. காரணம் அவரது உடல் சுகத்தையும் கவனிக்க வேண்டும் என்பதால். சுகமாகத் தான் உள்ளார் ஆயினும் தேவையற்ற சிரமம் ஏன் என்றே.
நன்கு படுத்துத் தூங்கி எழுந்தோம். காலையில் புத்துணர்வாக எழுந்ததும் இவர் கூறினார் நாம் விமானத்தில் பிறிஸ்பேர்ண் செல்வோம் என்று. நான் கூறினேன் “சரி சீலனுடன் கலந்து விமான டிக்கட் பதிவு செய்யும் போது ஹோட்டலும் பதிவு செய்து போவோம் ”   என்று.

என்ன இப்போது தானே சிட்னி வந்தோம் அதற்குள்   பிறிஸ்பேணா என்று நினைக்கிறீர்களா!…….

…….திட்டமய்யா…. திட்டம் !….பிறீ பிளான்!….


காலையுணவு முடித்து சீலனும் இவரும் அமர்ந்து விமான டிக்கட், வாடிவீடு கணனியில் பதிவு செய்தனர்.

img_04251

பிறிஸ்பேணுக்கு விமானம் ஒன்றேகால் மணி நேரப் பயணம் தான்.
சரி இனி சிட்னி பற்றிப்…பார்ப்போம்…..

பொதுநலவாய அவுஸ்திரேலியா என அழைக்கப்படும் உலகின் மிகப் பெரிய தீவு அவுஸ்திரேலியா என்பர். அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் சிட்னி, நியூசவுத்வேல்ஸ் மாநிலத் தலைநகரம். 1788ல் ஆர்த்தர் பிலிப் என்ற பிரித்தானியர் இந்த நகரத்தை அமைத்தாராம். அவன் தான் குற்றவாளிகளை அங்கு குடியேற்றியவன். 4 கோடி மக்கள் வசிக்கிறார்களாம். முப்பதாயிரம் ஆண்டுகளிற்கு முன்னிருந்து இங்கு பழங்குடியினர் வசிக்கின்றனராம்.

2000  மாம் ஆண்டு இங்கு ஒலிம்பிக் நடந்ததால் நிறைய முன்னேற்றங்கள் நடந்ததுள்ளது. பரமாட்டா நதி இங்கு கடலில் கலக்கிறது.  

parramatta

ஜாக்சன் துறை எனும் சிட்னி துறைமுகம் தான் பிரிட்டிஷ் மாலுமிகள் முதலில் வந்திறங்கி அவுஸ்திரேலியாவைக் கண்டறிந்தது.
படத்தில் ஒரு புள்ளி போலத் தெரியும் சிட்னி நிறைய வளைவுகள் கொண்ட நீர்கரையோடு உள்ளது. படத்தில் பாருங்கள். எனக்கே ஆச்சரியமாக உள்ளது.

cidny-hourber-png-1

கடலுக்குள் பெரிய மலை நீள்வது போலவே சிட்னி இயற்கைத் துறைமுகம் உள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடையாளமான ஓப்பரா மண்டபத்தோடு சிட்னி துறைமுக வளைவுப் பாலமும் பிரதானமானது. சிட்னி மத்திய பகுதியும் வடக்கு சிட்னியையும் இணைக்கும், துறைமுகத்தின் குறுக்கே அமைந்த உருக்கினாலான பாலம். கோர்ட்டுக் கொழுவி ( coat hanger) என்று மக்களால் அழைக்கப் படுவது.

img_02601

முதலில் சுற்றுலாப் பேருந்தில் சிட்னி துறைமுகப் பாலத்தின் அருகாமையால்,

img_02621

பல கோணத்தில் வாகனம் சுழன்று சுழன்று வந்த போதே எக்கச்சக்கப் படங்கள் தட்டினேன்.

 

வியப்பான வியப்பு! அதன் தோற்றத்தால்.! எங்கோ ஒரு தூரத்தில் பார்த்த பாலத்தின் இவ்வளவு அருகோடு போவோம் என நினைக்கவே இல்லை.   (முன்னே தூரத்தில் ஓப்பரா வும் தெரிகிறது)

img_02591

பிரமாண்டம் என்றால் பிரமாண்டம் தான்! …….

எவன் கட்டினான்!….. எப்படிக் கட்டினான்!….. என்று ஆச்சரியம்!!…..
சீலனுடன் வரும் போது பாலத்தில் வந்தோம் என்று முன்பு எழுதியிருந்தேனே. இந்தப் பாலத்தினூடு தான் பயணித்தோம்.  (பாலத்திற்கூடாக-  புகையிரதம் போகப் போகிறது.)

img_06231

பெருமை அல்லவா! பிறகு தான் அவர் கூறினார் அதனூடாகத்தான் வந்தீர்கள் என்று.
பாலம் பற்றி மிகுதியை அடுத்த பதிவு 16ல் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 1-2017

 

sydny-habour

 

6 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. Bagawanjee KA
  ஜன 14, 2017 @ 17:52:15

  #பிறீ பிளான்!#
  free plane என்று நினைத்து விட்டேன் 🙂

  மறுமொழி

 2. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 15, 2017 @ 02:39:36

  என்னவொரு பிரமாண்டம்…!

  மறுமொழி

  • கோவை கவி
   மார்ச் 19, 2017 @ 11:34:40

   ஆம் சகோதரா வியப்புமிகு பிரமாண்டம்.
   கூகிளில் பார்த்தால் இன்னும் பிரமிப்பு.
   மிக நன்றி கருத்திடலிற்கு
   அன்பு நன்றி சகோதரா.

   மறுமொழி

 3. கரந்தை ஜெயக்குமார்
  ஜன 15, 2017 @ 02:42:59

  அருமை
  தொடருங்கள் சகோதரியாரே

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: