469. ஏனிந்த விடப்பரீட்சை!

 

16002878_1784343118497398_1761639343492554117_n

paaram

ஏனிந்த விடப்பரீட்சை!

(பைரவம் – அச்சம்.)

 

மைதானத்தில் செய்ய வேண்டிய சாகசமிது
மைல்கல் பாதையில் செய்வது ஆபத்து.
கையாளும் போக்கு வரவுப் பயணத்தில்
வைக்கும் விதிமீறும் விடப் பரீட்சையிது.
தைரியமுடை வறுமையின் ஓயாத முயற்சி.
பைரவமற்ற வினைத் தவம் எனலாம்.

***

அளவோடு காவிச் செல்லல் நன்றே.
விளங்காது இப்படிக் காவுதல் தவறே.
வளமீயும் உடல் உழைப்புத் தேவையே.
தளமாவது உன் உடல் ஆரோக்கியமே.
களங்கமிது பாதசாரிகளைக் குளப்பும் செயல்
களிப்புடையோட்டம் உந்துருளி! உனதுயிர் பத்திரம்!

***

நன்றாகத் தலை நிமிர்த்திடவியலா நிலை
பின்னால் பார்க்கக் கண்ணாடி உதவுமா!
என்றாலும் இத்தனை பேராசை கூடாது.
சின்னதான ஒரு தட்டுதல் கூட
பொன்னான உயிருக்கு உலை வைக்கும்.
பென்னம் பெரிய சவாலிது வாழ்வதற்கு.

***

விதிமுறையான உழைப்பே நிம்மதி.!

வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 14-1-2017

 

card31

 

 

9 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜன 18, 2017 @ 12:23:43

  மறுமொழி

 2. Bagawanjee KA
  ஜன 18, 2017 @ 17:34:26

  இளைஞர்களின் பைக் சேசைத்தானே சொல்கிறீர்கள் ?

  மறுமொழி

 3. கரந்தை ஜெயக்குமார்
  ஜன 19, 2017 @ 01:31:50

  வயிற்றை நிரப்பியாக வேண்டுமல்லவா
  கவி அருமை சகோதரியாரே

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 19, 2017 @ 12:33:47

  Subajini Sriranjan ;. அருமையான பா
  வழ்த்துக்கள் வேதாம்மா
  அளவோடு செய்தால் ஆபத்து இல்லை!
  18 January at 14:30

  Vetha Langathilakam :- ஆழ்ந்த அன்புடன் மிக்க நன்றி சுபா
  Like · Reply · 19 January at 11:43

  Maniyin Paakkal :- சின்னதான ஒரு தட்டுதல் கூட
  பொன்னான உயிருக்கு உலை வைக்கும்/சிறப்பான ஆக்கம்
  Vetha Langathilakam :- இப்போது தான் பார்த்தேன்.
  மிக்க மகிழ்ச்சி.
  அன்புடன் நன்றி மணி.
  Unlike · Reply · 19-1-17
  19 January at 21:38

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 19, 2017 @ 12:35:20

  Subi Narendran:- //விதிமுறையான உழைப்பே நிம்மதி.// உண்மையான வரிகள். வாழ்த்துக்கள்
  · 19-1-17
  Vetha Langathilakam :- இப்போது தான் பார்த்தேன்.
  மிக்க மகிழ்ச்சி.
  அன்புடன் நன்றி Subi…….
  19-1-17
  19 January at 21:39

  மறுமொழி

 6. கோவை கவி
  மார்ச் 19, 2017 @ 12:41:05

  ஷல்மா ஷாஜஹான் வாழைச்சேனை:- மிக நன்று சகோதரி வாழ்த்துக்கள்
  15 January at 11:30

  Vetha Langathilakam:- மிக்க நன்றி உறவே…

  சிந்தனை றப்பர் போன்றது .
  மாறுபட்ட சிந்தனை எழுதும் போது
  எழுத்தில் தர தயக்கமாக உள்ளது.
  ஆனால் அறிவை அகட்டிப் பார்க்கும் போது.
  அனைத்தும் விளங்கும்.
  சிந்தனையில் பல பக்கங்கள் உள்ளது.
  15 January at 12:12

  மறுமொழி

 7. Trackback: 17. சான்றிதழ்கள் – கவிதைகள்(வாழ்க்கை வரமா பாரமா) – வேதாவின் வலை.2

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: