471. வருக தை மகளே வழியெல்லாம் பூப்பூக்க

korg_thai_news

 

வருக தை மகளே வழியெல்லாம் பூப்பூக்க

 

(அணர்தல் – மேல் நோக்கியெழுதல். இணர்தல் . விரிதல்)

 

பயறு, பச்சரிசி, சர்க்கரை, பாலோடு
உயர்ந்த நெய்யும், ஏலரிசி, கராம்பும்
நயமாகப் பொடித்து நன்றாகக் கலப்போம்.
 செயமாகப் பால் சோறு பொங்கலிடுவோம்.

***

சிறப்பாக சூரியனுக்கு நன்றி கூறுவோம்.
உறவினரிடம் சென்றும் அவரையும் அழைத்தும்
திறப்போம் புதிய தையிற்காய் வரவேற்போம்.
துறப்போம் துன்பங்களை துரிதமாகத் தூய்மையாவோம்.

***

உணர்வோடு தமிழும் உண்மையும் வளர்க!
அணர்தல் மட்டுமே உலகை அழகாக்குக!
இணர்தல் உழவரின் வாழ்வாய் ஆகுக!
கொணர்தல் புதிதாய் பழையன பின்னாகுக!

***

வருக தைமகளே வழியெல்லாம் பூப்பூக்க
உருக தமிழினிமையில் சாரல் சொரிக!
கருக கொடுமைகள் பொய்கள் ஒழிக!
தருக நற்பலன்கள் மனிதர் வாழ்வெல்லாமோங்க!

***

 12-1-2017

 

புதிய தையில் பொங்கும் மனதில்
பதியும் ஒரு புது உணர்வில்
எதிலும் ஒரு எதிர்பார்ப்பில்
உதிக்கும் எம் சமாதானமென
மதிக்கும் நல் மனதுடன்
உதிக்கட்டும் தைப்பொங்கல்.
திறக்கட்டும் ஈழச் சமாதானம்
திருவுடன் தையில் பொங்குவோம்.

22-12-2004

 

 

pongal-1

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கரந்தை ஜெயக்குமார்
  ஜன 22, 2017 @ 13:37:11

  அருமைசகோதரியாரே

  மறுமொழி

 2. Bagawanjee KA
  ஜன 22, 2017 @ 14:02:08

  தமிழ்ப் பிள்ளைகளின் போராட்டமும் கண்டு தைமகள் அகமகிழ்ந்து இருப்பாள் 🙂

  மறுமொழி

 3. கோவை கவி
  மார்ச் 19, 2017 @ 13:39:37

  Lingathasan Ramalingam Sornalingam :- அருமை. ‘ஏலரிசி’ எங்கள் அம்மம்மா(தெய்வானை ஆச்சி) உபயோகித்ததற்கு அடுத்தபடியாக நீங்கள் மட்டுமே இந்த வார்த்தையை உபயோகித்து இருக்கிறீர்கள். 28 வருடங்களின் பின் காண்கிறேன் இந்த வார்த்தையை.
  22 January at 17:33
  Vetha Langathilakam மிக்க நன்றி Lingathasan Ramalingam Sornalingam, மிக மகிழ்ச்சி.
  22 January at 18:34

  மறுமொழி

 4. கோவை கவி
  மார்ச் 19, 2017 @ 13:42:47

  Geetharani Paramanathan :- சிறப்பு வாழ்த்துகள்
  22 January at 20:59

  Vetha Langathilakam:- பேரன்புடன் இனிய நன்றிகள் Geetha
  மகிழ்ச்சி.

  Subajini Sriranjan:- மிக அழகான தித்திப்பான பா
  · 22 January at 21:19

  Vetha Langathilakam :- பேரன்புடன் இனிய நன்றிகள் சுபா
  மகிழ்ச்சி.
  · 22 January at 23:07

  மறுமொழி

 5. கோவை கவி
  மார்ச் 19, 2017 @ 13:44:38

  Maniyin Paakkal :- சொற்கோர்வை மிகச்சிறப்பு. அழகிய ஆக்கம்
  ·24-1-17
  Vetha Langathilakam :- அருத்தமுடை ரசனைக்கு மிக்க நன்றி.
  மகிழ்ந்தேன் மணி
  · 24-1-17
  · 24 January at 11:18

  Rathy Mohan ::- அசத்தலான சொற்கள் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாமாலை
  · 24-1-17

  Vetha Langathilakam :- அருத்தமுடை ரசனைக்கு மிக்க நன்றி.
  மகிழ்ந்தேன் Rathy.
  ·24-1-17
  24 January at 13:30

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: