474. “கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு”

 

2-8-janu-17

“கல்லையும் சொல்லையும் விட்டால் போச்சு”

வில்லில் இருந்து விடுபட்ட கணையாம்
கல்லும் (வன்)சொல்லும் ஒரே வினையம்.
சொல்லிற்கு உறுதி சிறந்த பல்லு.
பல்லு போனால் போகும் சொல்லு.
அன்பான சொல் சடுதியாய் முகிழ்த்தும்
இன்பிக்கும் இசையோடு பிணைதல் போலும்
அன்ன பல சூட்சும தாக்கங்;களாக்கும்.
வன்சொல் புதைக்க முடியாத கல்.
***

பொன்னகரம் அழைத்தேகும் அமைதிச் சொல்
அன்புப் பெருவெளி நகர்த்தும் சொல்
புன்னகைப் பூந்தளிர் தெளிக்கும் பூவனம்.
ஆன்மிகக் கடை திறக்கும் ஆலிங்கனம்.
” தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு ” திருக்குறளே
பாவினார் திருவள்ளுவர். உதட்டால் உதிர்ப்பார்
பாவியர் முள்ளான சொல் உள்ளாறாதது.

***

ஐம்புலன்களை வென்ற குற்றமற்றவர் ஐசுவரியமாய்
ஐயமின்றி இன்னமுதச் சொல்லை உமிழ்வார்.
ஆணவம் பொறுமையற்றவர் சினமோங்க ஏந்துவார்
ஆயுதமாகப் பிறரைக் காயமாக்கும் கல்
கல்லு விட்டால் நொறுங்கும் கண்ணாடி
சில்லு சில்லாக ஆகிடும் யன்னல்
மினா பள்ளத்தாக்கிலும் விடுகிறார் கல்லு.
கல் கவணெறிந்தால் குருவியும் நில்லாது.
***

நிதானம் இழந்து தன்னைக் காக்க
சூதானமற்ற சொற்கள் மனிதன் ஆயுதமாகும்.
ஆதனமாய் கருதும் உயிர் மொழிச்
சொல் கல்லாக, கூர் அம்பாக.
நெஞ்சச் சுவரில் அறையப்படும் வன்சொல்
பஞ்சல்ல இருள் போர்த்தும் சொல்.
வஞ்சகச் சொல் பொல்லாதது பாறாங்கல்.
சொல் விடாதோர் மௌனி, மதியூகி மட்டி.
***

சொல்லைக் கூட்டாக விட்டாலும், பல்லு
பல்லாகப் பிரித்தாலும் கருத்துகள் மாறுபடும்.
சொல்லெறிதல் அஞ்சல் ஓட்டமாகவும் தொடரும்.
அல்லல் தருமளவு பெரிதாகவும் நீளும்.
சுகமாய்ப் புரண்டு விழும் சொல்
அகத்தில் வெள்ளிக் கொலுசாகக் குலுங்கும்.
இகத்தில் நல்ல சொல்லை விட்டு
சுகமுடை உலகத்தை நாளும் சமைப்போம்.
***

வேதா. இலங்காதிலகம்   ஓகுஸ் டென்மார்க்.  2016- decem

493789nfy8xzi1n4

10 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. கோவை கவி
  ஜன 29, 2017 @ 10:44:37

  மறுமொழி

 2. Bagawanjee KA
  ஜன 29, 2017 @ 15:07:51

  தமிழ்த் தென்றல் நடத்திய போட்டியில் வென்றமைக்கு வாழ்த்துக்கள் !இணைப்பில் சென்று ,கல்லிலே இத்தனை வகையா என்று ரசித்து படித்தேன் 🙂

  மறுமொழி

 3. கரந்தை ஜெயக்குமார்
  ஜன 29, 2017 @ 15:21:22

  வாழ்த்துக்கள்சகோதரியாரே

  மறுமொழி

 4. திண்டுக்கல் தனபாலன்
  ஜன 30, 2017 @ 02:21:32

  அருமை அம்மா….

  மறுமொழி

 5. தேவகோட்டை கில்லர்ஜி
  பிப் 02, 2017 @ 03:30:01

  அருமை சகோ வாழ்த்துகள்

  மறுமொழி

 6. கோவை கவி
  ஜன 28, 2018 @ 16:09:09

  28-1-2017 comments…..:-

  RRsel Vam :- அன்பின் வாழ்த்துகள்

  Shanthini Balasundaram:- வாழ்த்துக்கள்.

  Vetha Langathilakam:- மிக மகிழ்வுடன் நனறி sis

  பூமதீன் கலந்தர்Group admin:- vaalthukal

  Sara Bass :- வாழ்த்துகள்

  Vetha Langathilakam:- மிக மகிழ்வுடன் நனறியும் வாழ்த்துகளும்

  Shamun Najeerdeen :- வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam:- மிக மகிழ்வுடன் நனறியும் வாழ்த்துகளும்

  ஆர் எஸ் கலா :- வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam:- கருத்திடலிற்கு மக மகிழ்வு.
  மிக்க நன்றிகள்.

  Kanagaretnam Muralitharan:- வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam:- மிக மகிழ்வுடன் நனறியும் வாழ்த்துகளும்

  Abdul Hameed
  Abdul Hameed :- வாழ்த்துக்கள்

  Vetha Langathilakam:- மிக மகிழ்வுடன் நனறியும் வாழ்த்துகளும்

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: