15- அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் –15.

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 15

16ம் திகதி சிட்னியில் ஷம்மி வீடு போய் ஆறுதலாகப் பேசி உணவருந்தி கபாலி படமும் பார்த்தோம். கபாலி படம் எனக்குப் பிடித்தது.
இவர் என்னிடம் கூறினார் நாம் பிறிஸ்பேர்ண் போவதைக் கைவிடுவோம், 18 மணித்தியாலம் பேருந்தில் ஓடமுடியாது என்று. சரி நானும் அடம் பிடிக்கவில்லை. காரணம் அவரது உடல் சுகத்தையும் கவனிக்க வேண்டும் என்பதால். சுகமாகத் தான் உள்ளார் ஆயினும் தேவையற்ற சிரமம் ஏன் என்றே.
நன்கு படுத்துத் தூங்கி எழுந்தோம். காலையில் புத்துணர்வாக எழுந்ததும் இவர் கூறினார் நாம் விமானத்தில் பிறிஸ்பேர்ண் செல்வோம் என்று. நான் கூறினேன் “சரி சீலனுடன் கலந்து விமான டிக்கட் பதிவு செய்யும் போது ஹோட்டலும் பதிவு செய்து போவோம் ”   என்று.

என்ன இப்போது தானே சிட்னி வந்தோம் அதற்குள்   பிறிஸ்பேணா என்று நினைக்கிறீர்களா!…….

…….திட்டமய்யா…. திட்டம் !….பிறீ பிளான்!….


காலையுணவு முடித்து சீலனும் இவரும் அமர்ந்து விமான டிக்கட், வாடிவீடு கணனியில் பதிவு செய்தனர்.

img_04251

பிறிஸ்பேணுக்கு விமானம் ஒன்றேகால் மணி நேரப் பயணம் தான்.
சரி இனி சிட்னி பற்றிப்…பார்ப்போம்…..

பொதுநலவாய அவுஸ்திரேலியா என அழைக்கப்படும் உலகின் மிகப் பெரிய தீவு அவுஸ்திரேலியா என்பர். அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய நகரம் சிட்னி, நியூசவுத்வேல்ஸ் மாநிலத் தலைநகரம். 1788ல் ஆர்த்தர் பிலிப் என்ற பிரித்தானியர் இந்த நகரத்தை அமைத்தாராம். அவன் தான் குற்றவாளிகளை அங்கு குடியேற்றியவன். 4 கோடி மக்கள் வசிக்கிறார்களாம். முப்பதாயிரம் ஆண்டுகளிற்கு முன்னிருந்து இங்கு பழங்குடியினர் வசிக்கின்றனராம்.

2000  மாம் ஆண்டு இங்கு ஒலிம்பிக் நடந்ததால் நிறைய முன்னேற்றங்கள் நடந்ததுள்ளது. பரமாட்டா நதி இங்கு கடலில் கலக்கிறது.  

parramatta

ஜாக்சன் துறை எனும் சிட்னி துறைமுகம் தான் பிரிட்டிஷ் மாலுமிகள் முதலில் வந்திறங்கி அவுஸ்திரேலியாவைக் கண்டறிந்தது.
படத்தில் ஒரு புள்ளி போலத் தெரியும் சிட்னி நிறைய வளைவுகள் கொண்ட நீர்கரையோடு உள்ளது. படத்தில் பாருங்கள். எனக்கே ஆச்சரியமாக உள்ளது.

cidny-hourber-png-1

கடலுக்குள் பெரிய மலை நீள்வது போலவே சிட்னி இயற்கைத் துறைமுகம் உள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடையாளமான ஓப்பரா மண்டபத்தோடு சிட்னி துறைமுக வளைவுப் பாலமும் பிரதானமானது. சிட்னி மத்திய பகுதியும் வடக்கு சிட்னியையும் இணைக்கும், துறைமுகத்தின் குறுக்கே அமைந்த உருக்கினாலான பாலம். கோர்ட்டுக் கொழுவி ( coat hanger) என்று மக்களால் அழைக்கப் படுவது.

img_02601

முதலில் சுற்றுலாப் பேருந்தில் சிட்னி துறைமுகப் பாலத்தின் அருகாமையால்,

img_02621

பல கோணத்தில் வாகனம் சுழன்று சுழன்று வந்த போதே எக்கச்சக்கப் படங்கள் தட்டினேன்.

 

வியப்பான வியப்பு! அதன் தோற்றத்தால்.! எங்கோ ஒரு தூரத்தில் பார்த்த பாலத்தின் இவ்வளவு அருகோடு போவோம் என நினைக்கவே இல்லை.   (முன்னே தூரத்தில் ஓப்பரா வும் தெரிகிறது)

img_02591

பிரமாண்டம் என்றால் பிரமாண்டம் தான்! …….

எவன் கட்டினான்!….. எப்படிக் கட்டினான்!….. என்று ஆச்சரியம்!!…..
சீலனுடன் வரும் போது பாலத்தில் வந்தோம் என்று முன்பு எழுதியிருந்தேனே. இந்தப் பாலத்தினூடு தான் பயணித்தோம்.  (பாலத்திற்கூடாக-  புகையிரதம் போகப் போகிறது.)

img_06231

பெருமை அல்லவா! பிறகு தான் அவர் கூறினார் அதனூடாகத்தான் வந்தீர்கள் என்று.
பாலம் பற்றி மிகுதியை அடுத்த பதிவு 16ல் பார்ப்போம்.

வேதா. இலங்காதிலகம். டென்மார்க் 1-2017

 

sydny-habour

 

467. 2017 தை பொங்குக!

 

pongal_greetings_jalltkattu-jpg-22

2017 தை பொங்குக! 13-1-17

தை பொங்கலிற்கு என்னெழுத்துப் பொங்கல்.
கையெடுத்துக் கருத்தெழுதாதோருக்கும் என்னெழுத்துப் பொங்கல்
வைகையாய் இன்பங்கள் பெருகிட பொங்குக
தையலிடு உழவர்கள் தற்கொலைகள் அழிந்திட
மையிட்டு மறை மிருக வதைகளை
பையவே குழுநிலைக் கூப்பாடுகள் மங்கட்டும்.

சூழ்ச்சிகள் மறைந்து அன்பு வாழ்தலாகட்டும்
காழ்ப்புகள் மறைய தமிழ் எழுகட்டும்.
வாழ்வோடு தமிழ் கலாச்சாரம் பிணையட்டும்.
ஆழ்ந்த பண்பாடுகள் முளைவிட்டு எழட்டும்.
மூழ்கட்டும் அதிகாலை கோலப் பொங்கலில்
வாழ்க அனைவரும் வளமுடை பொங்கல் வாழ்த்துகள்.

Vetha.Langathilakam  Denmark  13-1-2017.

pongal

1993 ஆனி மாதத்தில் 3 வருட ‘ பெட்டகோ’  (  nursury training )  படிப்பு முடித்து வெளியே வந்தேன் .
அன்று நானறிய 3 வருடங்கள் டெனிஷ்  படிப்பில் தமிழ்ப் பெண் பெட்டகோவானது முதலில் நானாக இருக்கலாம். அது ஒரு விசேடப் பெங்கல் அன்று
அறிவுப் பொங்கல்.
பின் 2002ல் தமிழில் கவிதை நூல் வெளியிட்டேன். அதுவும் முதலாவது ஈழப் பெண்ணாக (in Denmark) நானாக இருந்திருக்கலாம். அதுவும் ஒரு

எழுச்சிப் பொங்கல் தான்.

அடுத்து 2015ம் ஆண்டு
என்னை ஒரு கவிஞராக ‘ ஓகுஸ் தமிழர் ஒன்றியம்’
அங்கீகரித்து விழா எடுத்தது அடுத்த மாபெரும் பொங்கல்.

பாராட்டுப் பொங்கல்
இவைகள் மறக்க முடியாததவை.
இது ஆராயப்படவு ம் நினைக்கப்படவும் வேண்டிய ஒன்று என்று நான் கருதுகிறேன்.
வருங்காலத்தில் ஆய்வுக் கட்டுரை சமர்பிக்கவும் டென்மார்க்கில் ஒரு தலைப்பாகவும் இருக்கலாம்.

Vetha.Langathilakam  Denmark  13-1-2017.

 

pongal-1

 

466. பூத்திருக்கும் புத்தாண்டு!

15894271_1372287829479542_810009769602691215_n

பூத்திருக்கும் புத்தாண்டு!

காத்திருந்த போது எதிர்பார்ப்பிற்கு ஏங்க
பூத்திருக்கும் புத்தாண்டே செல்வம் பொங்க
ஏத்திடு அதிட்டக் கொடியைத் தாங்க!
கூத்திடும் குதூகல ஆனந்தம் ஓங்க!
அதர்மம் அநியாயம் அழிய அகிலமுழுதாய்
அன்பில் பூத்திட அத்தியாவசியம் அறிவாய்
அகத்தில் மலர பாதை தருவாய்!
அமலனே அறிவொளி வீச அருள்வாய்.
உடைந்த மனங்களை ஒட்டு இன்பிக்கட்டும்!
கடைந்த பாசம் அனைவரையும் கட்டட்டும்!
அடைந்த சொத்துகளைத் தர்மம் செய்யுங்கள்!
இடைஞ்சல் இல்லா வாழ்வை வகுத்திடுங்கள்!
வஞ்சம் குரோதம் அழித்து உலகம்
கொஞ்சும் கூட்டுறவை நன்மைக்குப் பாவிக்கும்
கஞ்சமில்லா மனம் எல்லோருக்கும் கனியட்டும்!
சஞ்சலமழிக்கட்டும் இப் பூத்திருக்கும் புத்தாண்டு!
5-1-2017 வேதா. இலங்காதிலகம். டென்மார்க்
10737791_771888509544924_1380567544_o

9. கண்ணதாசன் சான்றிதழ்.10

13781714_1754848521446589_7399165200020175937_n

10th…

கருகிய மலர் சிரிக்கிறது


கருமை நிறத்திலும் கண்டவரை ஈர்க்கும்
கஞ்சமில்லா அழகுப் புன்னகை கண்ணிறைக்கும்.
கவனம் இழுக்கும் வண்டு விழியழகி.
கந்தோரில் அனைவரையும் கம்பீர அறிவொளியால்
கவரும் தலைவியவள், துணை அதிகாரி.

கடமைப் பதவியுயர்வு நேர்முகத் தேர்வு
கணவனிடம் கையசைத்து விடை பெற்றாள்.
தலைநகர் நோக்கிய மகிழுந்துப் பயணம்.
தடவும் எண்ணக் குமிழிகள்! எதிர்காலம்
தரப்போகும் பதவியின் கற்பனையில் நீந்தினாள்.

மூன்று மணித்தியாலச் சாரத்தியம். ஒளிந்து
முகிலுக்குள் அசையும் நிலவாக இசைச்சாரல்
முழுதாய் இதயம் தழுவி நனைத்தது.
கோடை வெப்பக் கானல்நீர் தெருவில்.
கோடையிடியானவொரு சத்தம்! வாகனம் புரண்டது!

நெருப்புக் காட்டில் இவள் நினைவிழந்தாள்.
நெருப்பு மழையில் குளித்தவுடல். விழித்தாள்.
மருத்துவ மனையில் கட்டுகள் மருந்துகளுடன்.
மலர்ந்த பூ முகம் கருகியது.
சிலிர்த்த தகவல் அவள் கர்ப்பிணியாம்.

பந்தாடிய விதி முற்றாக அறுக்காது
சந்தனக் கட்டியைக் கொஞ்சிக் குழைந்திட
விந்தையாக வயிற்றில் வளர்ந்தது. சுபமாக.
தந்தை தாய் மகிழ்ந்து குலாவ
கொழு கொழு பாலன் கொத்தாக உதித்தான்.

பொங்கும் நயகரா இதயத்தில் போல
உங்கு மழைத்துளியுண்ட சிப்பி போல
கங்குப் பாலையிலொரு நீர்ச்சுனை போல
தங்க மகன் வந்தான் தரணியிலே
பொங்கியது உள்ளம் பூரித்து நிறைந்தது.

விதியின் விளையாட்டில் விண்ணப்பம் இன்றி
விளைந்து விரிந்த விகசிப்பு இது.
விசேடமான விருட்ச முளையிவள் மழலை.
விழிச் சிறகுள் அடைகாத்துச் சிரிக்கிறாள்.
விருதிவன்! கருகிய மலர் சிரிக்கிறது.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்.
23-7-2016.

 
 
blackwith-colour

465. 3. குறுங்கவிதைகள்(7-8-9)

water-f

7.

அடடா! …மலையரசன் பட்டுச் சால்வையோ!
தனக்குத் தானே வழி சமைக்கிறது.
மருவி மூலிகை கழுவி விழுகிறது.
மலையின் பால்! பூமியின் சௌபாக்கியம்.
நீருளி செதுக்கும் உற்சவ மூர்க்கம்.

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
9-6-2016.

______________

13428374_1778624745757105_4013154492383327187_n

8.

சந்தனச் சிலையோ மெழுகு பொம்மையோ
ஊர்வசி, ரம்பை, மேனகை திலோத்தமையோ!
சேலையோடு குழலும் ஊஞ்சல் ஆடுது.
கண்ணிறையக் கண்ணனின் எண்ணமும் ஊஞ்சலில்
உருகுதே மனம் உனது உருவில்

வேதா. இலங்காதிலகம்.
டென்மார்க்
10-6-2016.

734632_325051774287910_2131363813_n

9.

தாய் முலையின் சுவை மறக்காமை.
ஈடு செய்யும் பசுவின் மடி.
பசியின் வேகத்தால் மடி இழுப்பு.
பால் நிறையா மடியில் பசியாறல்.
இயற்கை நிகழ்வின் மனதுருக்கும் நிலை

13 – 6 – .2016

 

unavngivet

 

464. இருமனம் இணையும் திருமணம்

15672708_1774122532852790_2778487589712256184_n

இருமனம்   இணையும்    திருமணம்

இருமனம்   இணையும்    திருமணம்
பெரும் புனிதம்
அரும் உறவதன் பெருமை
அருகி வருகிறது.
அருவருப்புடை அடக்கு முறை
பெருந் தொல்லையாகிறது.

***

திருமணம் என்றால் விலகுவோரும்
இருமனம் இணையாமலதன்
உருவிழத்தலுமின்று வெகு சாதாரணம்.
உருகுதலென்பது அன்பிலில்லை..
உருவும் உரிமைகளால் தொலைகிறது
எருவெனும் காதல்.

***

எருக்கம் பூவாகிறது பிரியம்.
ஒருமைப் பாடழிகிறது.
ஒரு மனப்படும் வசந்தமே
ஒருங்கிணையும் வாழ்வாகும்.
திருமண வாழ்வின் கருமுகில்
கருவம், சுயநலம்.

***

கரும்பாம் மன்னிக்கும் மனம்
கருணைச் சாரலாகும்.
இரும்பு மனம் இளகுதல்
திருமணத்தின் சாதகம்
கருங்கலமான உறவு மிகக்
கருத்தாய் காத்திடணும்.

***

அருமைச் சுகாதாரம் திருமணம்.
கருமணியாய்க் காக்கலாம்.
குரு சந்திர யோகம்
இருமனமிணையும் திருமணம்.
குருகுல வாசமாயும் காக்கலாம்
குழந்தைகள் வாழ்வுக்காக.

***

வேதா. இலங்காதிலகம் டென்மார்க் 23-12-2016

another   samme poem link

35. பா மாலிகை ( கதம்பம்) திருமணம். 527 – வேதாவின் வலை.2 (wordpress.com)

garlandswag-gif-2

14. (அவுஸ்திரேலிய -கங்காரு நாட்டுப் பயணம்). (14)

அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் ) பயணம் – 14.

இவருடைய இந்தக் கட்டிடத்தின் கப்பற் பாய்களை நினைவுபடுத்தும் கூரையைக் கட்டுவதில் சிரமம் ஏற்பட்டது. இரண்டு வருடங்கள் வரை முயன்று கட்டிடத்திலுள்ள இரண்டு பெரிய மண்டபங்களை மூடும் மேற்படி கூரைகளை அமைக்கும் முறையொன்றை உருவாக்கினார்.
இக்கட்டிடத்தின் உள்ளக அலங்காரத்துக்கான கவர்ச்சிகரமான திட்டமொன்றையும் உருவாக்கியிருந்தார்.  ஆனால் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டு   புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட    நியூ சவுத் வேல்ஸின் அரசாங்கம்    உட்சனுக்கான கொடுப்பனவுகளைத் திடீரென நிறுத்தியது. 1966 இல்இ அவர் நிறைவு பெறாத கட்டிடத்தையும் விட்டுவிட்டு நாட்டைவிட்டு வெளியேற வேண்டியேற்பட்டது. எனினும் சிட்னி ஒப்பேரா மாளிகை   1973ல் கட்டி முடிக்கப்பட்டது. இது உலகில் மிகப்பரவலாக அறியப்பட்ட கட்டிடங்களில் ஒன்றாகும்.
மார்ச் 2003 இல்இ ஒப்பேரா மண்டபம் தொடர்பில் அட்சனின் வேலைகளுக்காக   சிட்னி பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

is

அட்சன்உடல்நலக் குறைவு காரணமாக ஆஸ்திரேலியா வர முடியாமையினால் அவரது மகன் அட்சனின் சார்பில் இந்த விருதை ஏற்றுக்கொண்டார்.
மேலதிக இணைப்பாக இந்தத் தகவல் தந்தேன்.

கடந்த  பதிவின் பென்னலோங் அருகு பச்சை வண்ணம் தேசிய பூங்காவாகும். சில படங்கள்.

img_03041

img_03051

img_03061

img_03091

img_04091

IMG_0411[1].jpg
நஷனல் பூங்காவிலிருந்து தேசிய பூங்காவிலிருந்து பார்க்கும் சிப்பி, சோகி உரு ஒப்பரா அரங்கு (மாளிகை) கூகிள் படம்.

royal_botanic_gardens_sydney_2150b_jpg_original

sydney-opera-house-royal-botanic-gardens-cbd-and-circular-quay-sydney-bbj6wd

d903979f7d3fa6bb3a68f10ff8601be6

Last 6   pics – google….
ஓப்பரா பார்த்து முடித்ததும் சிட்னி புனையிரத நிலைய அருகில் பேருந்து ஏறிய இடத்திற்கே மறுபடி வந்து சேர்ந்தோம்.

600_433088626
அதே புகையிரத நிலையக் கட்டிட மூலையில் இருந்த நூடில்ஸ் கடையில் சுடச்சுட நூடில்ஸ் சாப்பிட்டோம். அவுஸ்திரேலியா வந்து முதன் முதலில் நூடில்ஸ் சாப்பிட்டது இங்கு தான். ஐரோப்பாவில் சுற்றினால் சைவ உணவுக் காரியான எனக்கு நூடில்ஸ் தவிர பெரும்பாலும் வேறு கதியே இல்லாமல் இருக்கும். நாம் சாப்பிட்ட அந்தக் கடையை கூகிளில் பாருங்கள்.

corner-noodels

சரி இனி பாதுகாக்கப் பாரம் கொடுத்த எமது பொதிகளை எடுப்போம் என்று அருகிலிருந்த பேருந்துக் கந்தோரினுள் சென்று எடுக்கவும் எங்களைக் கூட்டிப் போக இன்பசீலனும் வந்திட்டார். மூவருமாக புகைவண்டியில் (ரெயினில்) போகும் போது ( பிலபலமான பாலத்தினூடாகச் செல்கிறோம். இது பற்றிப் பின்னால் விவரிப்பேன், நினைவில் வைத்திருங்கள். இப்படிப் போகும் போது எனக்கும் புரியவில்லை, பின்பு தான் புரிந்தது) தங்கை மகளும் ஷம்மி (ஷர்மிளா) நடுவில் ஏறி எம்முடன் இணைந்தார். பிறகு இறங்கி பேருந்தில் ஏறினோம். பிறகு இறங்கி அவர்கள் காரில் மாறி வீடு சென்றோம். 3 சுரங்கப் பாதையூடாகப் பேருந்து பயணித்தது. தூங்கி எழும்பலாம். கதைகள் வாசிக்கலாம். அப்படி ஒரு உணர்வாக இருந்தது. சாப்பிட்டதும் பேருந்துப் பயணம். தூக்கம் சுளற்றி அடித்தது.
எவ்வளவு தூரம் நாளும் பயணித்து சென்ரலுக்கு வந்து வேலை செய்கிறார்கள்.
நாட்டுப் புறத்தில் வேலை செய்தால் ஊதியம் குறைவு.
நல்ல சம்பளத்திற்காக நாளும் பாடு.
ஷம்மி கொழும்பில் வங்கியில் வேலை செய்தாள். இரண்டு அழகான மாநிறமான பெண் குழந்தைகள் ஒரு ஆண் குழந்தை. நாம் இங்கு வந்த பின்பே ஆண் குழந்தை பிறந்தது.. சின்னவள் நடந்தால் நான் ”..அஞ்சலி..அஞ்சலி.. ” என்று பாடுவேன். அப்படியே நடப்பாள் அழகாக வாயையும் அப்படியே வைத்து…. இல்லாவிடில் தக்காளிப் பழங்கள் என்பேன். இதை எழுதும் போது ஆவல் மிகுதியால் அவர்களோடு தொலைபேசி எடுத்து பேசிவிட்டே தொடருகிறேன்.
மிகுதியை அடுத்த பதிவு 15 ல் காணுவோம்.

வேதா. இலங்காதிலகம் டென்மார்க்    3- 1-2017

 

opera-hall-inside

 

Next Newer Entries