475. வாழ்க்கை ஒரு நாடகம்.

mmmmm

 

வாழ்க்கை ஒரு நாடகம்.

வாழ்க்கை எழுதப்படாத நாடகம்
தாழ்ந்திடாத இயக்கம் தயாரிப்பில்
வாழ்ந்திடும் நாம் நடிகர்கள்.
வாழ்வதே எமது நடிப்பு
***
சீழ்க்கையடித்து ரசிக்கும் ஆடம்பரம் (பகட்டு)
சூழ்ந்திடும் கைதட்டல் கேடயம்.
ஏழ்மைக்கு இதுவொரு பாடகம் (சூதுவிளையாட்டு)
வீழ்ந்திடும் சுயம் அவமானம்!
***
ஊழ்வினை என்று ஏதுமில்லை.
தாழ்வாம் மனித நேயமிது.
அழுதாலும் நல்லவராய் முகமூடி
பொல்லாமை நயவஞ்சகம் இது.
***
வெலவெலக்கும் சொந்தக் கதை
இலக்கிற்காய் அடியெடுக்கும் சவால்.
விலக்கிட யாருமற்ற கர்மம்.
கலக்குகிறார் மாறு வேடத்தில்.
***
விழிகளில் சூரியக் கனவோடு
பழி பாவங்கள் தாண்ட
வாழ்வுக் கசப்புகளை இனிப்பாக்கும்
வழியென்று ஒப்பனை நாடகங்கள்.
***
விறைப்பான அத்யந்த நடிப்பு
சிறப்பான போலிச் சிரிப்பு
துறப்பில்லா மேடைத் திரை
இறப்பாம் இடைவேளை வரையாட்டம்.
***
மௌன மொழியும் நேரத்தில்
யௌவன முகமூடி ஆகிறதே
அகரம் தொட்டறிவு மயங்கி
பந்தயச்சாலை வாழ்வில் ஓட்டம்.
***
பந்த பாசம் அழித்து
முந்துகிறார் வெற்றிப் பந்திக்கு
ஓத்திகை இல்லாத நாடகம்!
முத்திரை பெறுவாரோ இறுதியில்!
***
வேதா. இலங்காதிலகம். டென்மார்க். 3-7-2016
2680815j4f6wm8q9w
Advertisements

7 பின்னூட்டங்கள் (+add yours?)

 1. திண்டுக்கல் தனபாலன்
  பிப் 02, 2017 @ 14:56:53

  அருமை… உண்மை…

  மறுமொழி

 2. தி.தமிழ் இளங்கோ
  பிப் 03, 2017 @ 04:24:05

  அருமை. அருமை. தத்துவங்களின் தேரோட்டம்.

  மறுமொழி

 3. கோவை கவி
  ஏப் 23, 2017 @ 16:00:34

  Poongavanam Ravendran :- அருமை வாழ்த்துக்கள்
  ·3-7-2016

  Vetha Langathilakam:- Poongavanam Ravendran Mikka nanry sis
  · 4 July 2016 at 13:32

  Vetha Langathilakam:- உங்கள் மேலான கருத்துகளை எழுதுங்களேன்!!!! நன்றி
  · 4 July 2016 at 13:41 · Edited

  James Gnanenthiran :- செறிவான கருத்துக்கள். மனம் நிறைந்தவாழ்த்துக்கள்
  · 4 July 2016 at 13:43

  Vetha Langathilakam :- மிக்க நன்றி ஜேம்ஸ்
  மகிழ்ச்சி.
  போட்டிக்கு எழுதிய கவிதை…
  · 4 July 2016 at 13:47

  மறுமொழி

 4. கோவை கவி
  ஏப் 23, 2017 @ 16:03:13

  Maniyin Paakkal :- விறைப்பான அத்யந்த நடிப்பு
  சிறப்பான போலிச் சிரிப்பு
  துறப்பில்லா மேடைத் திரை
  இறப்பாம் இடைவேளை வரையாட்டம்./செம்படைப்பு
  4 July 2016 at 13:51

  Vetha Langathilakam:- Aama….பரிசு கிடைக்கவில்லை…
  4 July 2016 at 13:59

  Dharma Ktm :- arumai akka
  · 4 July 2016 at 13:57

  Vetha Langathilakam:- Nanry Dharma…
  · 4 July 2016 at 13:59

  மறுமொழி

 5. கோவை கவி
  ஏப் 23, 2017 @ 16:06:15

  Subajini Sriranjan :- அருமையான ஆழமான கருத்தை உரைக்கும் பாடல்
  · 4 July 2016 at 20:38

  Vetha Langathilakam :- கொஞ்சம் மாய்ந்து மாய்ந்து தான் எழுதினேன்.
  போட்டிக்காக… நன்றி மகிழ்ச்சி சுபா.
  · 4 July 2016 at 22:24

  Sujatha Anton :- ஊழ்வினை என்று ஏதுமில்லை.
  தாழ்வாம் மனித நேயமிது.
  அழுதாலும் நல்லவராய் முகமூடி
  பொல்லாமை நயவஞ்சகம் இது.
  உண்மை. மனித வாழ்க்கை குறுகியது.
  10 July 2016 at 13:42

  Vetha Langathilakam:- nanry Suja,,,
  · 10 July 2016 at 14:19

  மறுமொழி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: